16.- பின்பு துரோணன் அருச்சுனனைத் தொடர்ந்து நெருங்குதல். எதிர்த்ததேர்விழித்திமைக்குமளவின்மாயமிதுவெனக் கதித்துரங்கவிசையினோடுகண்கரந்துகழிதலும் அதிர்த்தடர்ந்துபின்றொடர்ந்தடுத்தபோதருச்சுனன் கொதித்துவந்தகுருவொடம்மதிருகிநின்றுகூறுவான். |
(இ - ள்.) எதிர்த்த - எதிரிலே நின்றிருந்த, தேர் - (அருச்சுனனது) தேரானது, விழித்து இமைக்கும் அளவில் - கண்மூடித்திறக்கு மளவினுள்ளே, மாயம் இது என - மாயைபோல, கதி துரங்கம் விசையினோடு - நடைவல்ல குதிரைகளின் வேகத்தால், கண் கரந்து கழிதலும் - கண்ணுக்கு (எட்டாமல்) மறைந்து (நெடுந்தூரம்) போய்விட்டவளவிலே,- (துரோணன்), அதிர்த்து - ஆரவாரஞ் செய்துகொண்டு, அடர்ந்து - நெருங்கி [விடாமல்], பின்தொடர்ந்து அடுத்தபோது - (அத்தேரைப்) பின்னேதொடர்ந்து சமீபித்த பொழுது, அருச்சுனன்-, கொதித்து வந்த குருவொடு- (அங்ஙனங்) கோபங்கொண்டு வந்த அத்துரோணாசாரியனை நோக்கி, திருகி நின்று கூறுவான் - முகந் திரும்பிநின்று (சிலவார்த்தை) சொல்பவனானான்; ( எ -று.) - அவற்றை, அடுத்த கவியிற் காண்க. அம்ம- வியப்பிடைச்சொல். 'திருகி' என்பதற்கு - மாறுபட்டுச்சினந்து என்று பொருள்கூறுதல், மேல்வரும்அருச்சுனனது பணிவுமொழிகளோடு நோக்கப் பொருந்தாதாம். (413) 17.- அருச்சுனது விநயமொழி கேட்டுத் துரோணன் விட்டிடல். ஐயநின்னொடமரிழைத்தலமரருக்குமரிதுநின் செய்யபங்கயப்பதங்கள்சென்னிவைத்தசிறுவன்யான் வெய்யவென்சொல்வழுவுறாமைவேண்டுமென்னமுறுவலித் தெய்யவந்தமுனிவுமாறியேகுகென்றியம்பினான். |
(இ-ள்.) 'ஐய - ஸ்வாமீ! நின்னொடு அமர் இழைத்தல் - உன்னுடன் போரைச்செய்தல், அமரருக்குஉம் அரிது - தேவர்கட்கும் அருமையானது: யான் - நானோ, நின் - உனது, செய்ய பங்கயம் பதங்கள் - சிவந்த தாமரைமலர்போன்ற திருவடிகளை, சென்னிவைத்த - தலைமேற்கொண்டு வணங்குகிற, சிறுவன் - சிறியவனாவேன்; என் - (அப்படிபட்ட) எனது, வெய்ய சொல் - கொடுமையான சபதச் சொல், வழுவுறாமை வேண்டும் - தவறாதபடி அநுக்கிரகிக்கவேண்டும்,' என்ன - என்று (அருச்சுனன் துரோணனை நோக்கி நல்வார்த்தை) சொல்ல, (அதுகேட்டுத் துரோணன்), எய்ய வந்த முனிவு மாறி- (அவன்மேல் அம்பு) எய்தற்குவந்த கோபந் தணிந்து, முறுவலித்து - புன்சிரிப்புச்செய்து, ஏகுக என்று இயம்பினான்- 'செல்வாய்' என்று சொன்னான்; ( எ -று.) - பி-ம்: அமர்திளைத்தல். முனியுமாறி. 'ஸ்வாமி ! உன்னுடன் போர்செய்யத் தேவராலுமாகாதென்றால், யானோ உன்னையெதிர்க்கவல்லேன்?' என்று தோத்திரஞ் செய்த' நினது சீடனாகிய அடியேன் செய்த சபதத்தை நிறைவேறச் செய்தல், குருவாகிய நினக்கு முறையன்றோ?' என்று அருச்சுனன் |