பக்கம் எண் :

256பாரதம்துரோண பருவம்

மிகக்கனன்றுதேரும்வில்லுமெய்யணிந்தகவசமுந்
தகர்த்துமார்பின்மூழ்கவாளியேவினன்றனஞ்சயன்.

     (இ -ள்.) முகத்தில் நின்ற - எதிரிலே தலைமையாய் நின்ற, கன்னனோடு
உம் -கர்ணனுடனும், முடி மகீபரோடுஉம் - கிரீடந்தரித்த (அவனைச்சார்ந்த)
அரசர்களுடனும் , நின்ற இகல் செய்கின்ற - எதிர்த்துநின்று போர்செய்கிற,
கடிகை -நாழிகை, ஓர் இரண்டுசென்றது - இரண்டுகழிந்திட்டது, என்று -
என்றுஉட்கொண்டு,- தனஞ்சயன் - அருச்சுனன், உளம் மிக கனன்று - மனம்
மிகக்கொதித்து,தேர்உம் வில்உம் மெய் அணிந்த கவசம்உம் தகர்த்து மார்பில்
மூழ்க -(அக்கர்ணன்முதலியோருடைய) தேரையும் உடம்பில் தரித்த கவசத்தையும்
பிளந்துஅவர்கள் மார்பிலும் மிகப்பதியும்படி, வாளி ஏவினன் -
அம்புகளைச்செலுத்தினால்; (எ -று.)

     பொழுதுகழுந்திட்டதைக் கருதி அருச்சுனன் மிகக்கோபித்து எதிரிக்குப்
பலவகையழிவையுண்டாக்கும்படி சிலசிறந்த அம்புகளை உக்கிரமாகப்
பிரயோகித்தனனென்பதாம். பகல் முப்பதுநாழிகைக்குட் சபதத்தைத் தவறாமல்
நிறைவேற்றவேண்டுமே யென்ற கவலையால், இடையில் நாழிகை கழிதலைப்பற்றி
மிகச்சினந்தான். இரண்டுசென்றது - ஒருமைப்பன்மைமயக்கம்.              (424)

28.- கர்ணன் தோற்க, சுதாயு அருச்சுனனை எதிர்த்தல்.

தனஞ்சயன்கையம்பினொந்துதபனன்மைந்தன்மோகியா
மனந்தளர்ந்திளைத்தபின்னர்வருணராசன்மாமகன்
கனன்றெழுந்துசேனையோடுவந்துகார்முகங்குனித்
தினங்கொள்வாளியேவினானெதிர்ந்தபோரிலீறிலான்.

     (இ -ள்.) தனஞ்சயன் கை அம்பின் - அருச்சுனனது கையினால் எய்யப்பட்ட
அம்புகளினால், தபனன் மைந்தன் - சூரியகுமாரனான கர்ணன், நொந்து - வருந்தி,
மோகியா - மயக்கமடைந்து, மனம் தளர்ந்து - மனஞ்சேர்ந்து, இளைத்த பின்னர் -
மெலிவடைந்த பின்பு,- எதிர்ந்தபோரில் ஈறு இலான் - எதிரிட்டுச்செய்யும்யுத்தத்தில்
அழிவில்லாதபடி வரம்பெற்றவனாகிய, வருணராசன் மா மகன் - நீர்க்கு அரசனாகிற
வருணனனதுசிறந்த குமாரனானசுதாயுவென்பவன், கனன்று எழுந்து -
கோபங்கொண்டு புறப்பட்டு, சேனையொடு வந்து - (தன்) சேனையுடனே
(அருச்சுனனேதிரில்) வந்து, கார்முகம் குனித்து - வில்லைவளைத்து, இனம் கொள்
வாளி - தொகுதி கொண்ட அம்புகளை, ஏவினான் - (அருச்சுனன்மேற்)
பிரயோகித்தான்; ( எ -று.)

     வருணராசன்மாமகன் - வருணபகவானுக்குப் பன்னவாதை யென்பவளிடம்
பிறந்த சிறந்த புத்திரனாகிய சுதாயு வென்பவன்                     (425)

       29.- அருச்சுனன்புகள் சுதாயுவினுடம்பைத்துளைபடுத்தமாட்டாமை.

ஈறிலாதவீரன்வந்தெதிர்த்தகாலைவீரரின்
மாறிலாதவிசயன்விட்டமறைகொள்வாளியாவையுஞ்
சேறிலாதசெறுவில்வித்துசெந்நெலென்னவவனுடற்
பேறிலாமன்முனையுறப்பிளந்துகீழ்விழுந்தவே.