பக்கம் எண் :

258பாரதம்துரோண பருவம்

நகங்கலங்கவுருமின்வந்தததனையும்பர்நாயகன்
சகங்கலங்கவேற்றனன்றனாதுமெய்யினாகவே.

     (இ-ள்.) மற்று- (தனதுவில் அழிந்த) பின்பு, (சுதாயு), முகம் கலங்க - முகம்
கலக்கமடையும்படியாகவும், மெய் கலங்க - உடம்பு வலிமைகுலையும்படியாகவும்,
முடி கலங்க - தலைசிதறும்படி யாகவும், மூரி மார்பு அகம் கலங்க - வலிமையுள்ள
மார்பின் இடம் சிதையும்படியாகவும், ஒர் தண்டு- ஓர் கதாயுதத்தை, அருச்சுனன்தன்
மேல் விட - அருச்சுனன்மேல் வீச, - நகம் கலங்க உருமின் வந்தது அதனை-
மலைசிதையும்படி (மேல்விழுகிற கொடிய பெரிய) இடிபோல வந்த
அந்தத்தண்டாயுதத்தை, உம்பர்நாயகன் - தேவர்கட்குத் தலைவனான
கண்ணபிரான்,தனது மெய்யின் ஆக - தனது உடம்பிற்படும் படி, சகம் கலங்க
ஏற்றனன் - உலகம்(கண்டு) திடுக்கிட ஏற்றுக் கொண்டான்: (எ -று.)

     வில் அழிபட்டபின்பு சுதாயு பகையைத் தவறாமல் அழிக்க வல்லதொரு
கதாயுதத்தை யெடுத்து அருச்சுனன்மேல் எறிய, அதனை, அவனுக்குப் பாகனாய்
முன்நின்ற கண்ணன் தன்மார்பிற் படும்படி வலிய ஏற்றுக்கொண்டனனென்பதாம்.
கண்ணன் ஏற்றுக்கொண்டசூழ்ச்சி, மேல்விளங்கும். சகங்கலங்குதல் - லோக
நாயகனான இவனுக்கு இதனால் என்ன அபாயம் நேர்ந்திடுமோ வென்று தம் தம்
அன்புபற்றி யாவரும் சங்கித்தலாலென்க; இனி, கண்ணன் எப்பொருளுந்
தானோயானவனென்பதுபற்றி 'சகங் கலங்க' என்றாரெனினுமாம். 'நகங்கலங்க'
என்றது, வந்தது என்பதிலுள்ள வருதல் வினையைக் கொள்ளும், தனாது, ஆது -
ஆறனுருபு.                                                    (428)

32.- சுதாயு இறக்கத் தேதவர்கள் கண்ணன்மீது பூமழைபொழிதல்.

ஆகவத்தில்விசயனுய்யவையன்மெய்யிலறையுமுன்
மோகரித்தெறிந்ததெவ்வன்முடிதுளங்கிமண்மிசைச்
சோகமிக்குவிழுதல்கண்டுதூரகாரியாதலான்
மாகமுற்றவமரர்செம்பொன்மழைபொழிந்துவாழ்த்தினார்.

     (இ-ள்.)ஐயன் - (யாவர்க்குந்) தலைவனான கண்ணபிரான், தூர காரி
ஆதலால் - வருங்காரியமறிந்து தொழில்செய்பவனாதலால், ஆகவத்தில் விசயன்
உய்ய - போரிலே அருச்சுனன் இறவாது பிழைக்கும்படி, மெய்யில் அறையும்முன் -
(தனது) திருமேனியில் தாக்குமாறு (அக்கதாயுதத்தை) ஏற்றுக்கொண்டவுடனே,-
மோகரித்து எறிந்த தெவ்வன் - மிக உக்கிரங்கொண்டு (அவ்வாயுதத்தைப்)
பிரயோகித்த பகைவனான சுதாயு, முடி துளங்கி - தலைசாய்ந்து, சோகம் மிக்கு -
துன்பம் மிகுந்து, மண்மிசை விழுதல் - தரையிலே விழுந்திட்டதனை, கண்டு -
பார்த்து, - மா கம் உற்ற அமரர் - பெரிய வானத்திற் பொருந்திய தேவர்கள்,
செம்பொன் மழை பொழிந்து - சிவந்த பொன்மயமான கற்பகமலர்
மழையைச்சொரிந்து,வாழ்த்தினார்-;

     சுதாயு அழியாத வரம்பெற்ற காலத்தில், தன் ஆயுதம் நிராயுதர்மேற்
பட்டால்மாத்திரம் தான் இறந்திடும்படி விலக்கும் பெற்றவனாதலால், யாவுமறிந்த
கண்ணபிரான், அருச்சுனனைத் தவறாமற்.