பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்259

கொல்லும்படி அவன்மேற் சுதாயு எறிந்த கதையைத் தன்மார்பில் ஏற்றுக்கொள்ள,
கையிலாயுதமில்லாத அப்பெருமான்மேல் அப்படைக்கலம் பட்டமாத்திரத்திலே
சுதாயுகீழ் விழுந்து இறக்க, அருச்சுனன் பிழைத்திட்டான் ; இங்ஙனம் அடியவனைக்
காத்தற் பொருட்டுச் சர்வஜ்ஞனாகிய கண்ணன் வரம்புகடந்து செய்த
பெருங்கருணைத்திறத்தைப் கொண்டாடித் தேவர்கள் பூமாரிசொரிந்து வாழ்த்துக்
கூறின ரென்பதாம். தூரகாரி - வெகுதூரத்தில் இனி வருஞ் செய்கையை முன்னமே
அறிந்து அதற்கு ஏற்ற பரிகாரஞ் செய்பவன் ; இங்கே, தூரமென்றது, காலத்தின்
சேய்மையை; வெகுகாலத்தின் முன்பு நடந்தவற்றை அறிந்து அவற்றிற்கேற்ற படி
தொழில்செய்பவ னென்ற பொருளும், 'தூரகாரி' என்ற பெயரில் அடங்கும், 'ஐயன்
மெய்யிலறையுமுன் தெவ்வனழிதல்'- விரைவுதோன்றக் காரணத்தின்முன் காரியம்
நிகழ்ந்ததாகக் கூறும் மிகையுயர்வுநவிற்சியணி.                    (429)

33.- தேவர்கள் கண்ணனுக்குக் கூறிய வாழ்த்து.

வாழி வாழி குந்தி மைந்தன் வலவன் வாழி வாழியே
வாழி வாழி யவனி யுய்ய வந்த நாதன் வாழியே
வாழி வாழி காள மேக வண்ணன் வாழி வாழியே
வாழி வாழி வாசு தேவன் வாழி வாழி வாழியே.

     (குறிப்புரை.)குந்தி மைந்தன் வலவன்- குந்திதேவியின் புத்திரனான
அருச்சுனனது தேர்ப்பாகன்; அவனி உய்ய வந்த நாதன் - பூமி தேவி (பாரந்தீர்ந்து)
வாழும்படி திருவவதரித்த தலைவன் ; காள மேக வண்ணன் - கார் காலத்து
நீலமேகம்போன்ற திருநிறமுடையவன். வாசுதேவன் - வசுதேவகுமாரன்; (எ -று.)

     குந்திமைந்தன்வலவன், அவனியுய்யவந்தநாதன், காளமேகவண்ணன்,
வாசுதேவன் என்ற நான்கும் - ஒருபொருள்மேற் பல பெயராய்வந்து தனித்தனி
ஒருவகை முடிக்குஞ் சொல்லைக் கொண்டன. மகிழ்ச்சி வரம்புகடந்ததனால்,
வாழியென்றசொல், "அசைநிலை பொருள்நிலை யிசைநிறைக்கு ஒருசொல், இரண்டு
மூன்று நான்கு எல்லை முறையடுக்கும் " என்ற அடுக்கிலக்கணவரம்புங் கடந்து
வந்த தென்க.                                                   (430)

வேறு.

34.- சுதாயு இறந்த காரணத்தை அருச்சுனன் கண்ணனை வினாவல்.

என்றி யாவருந் துதிசெய விரகினாலெதிர்த்தகாவலன்றன்னைக்,
கொன்ற போதுதன் னுயிர்பெறு தனஞ்செயன் கொண்டல்வண்
                                  ணனைப்போற்றி,
நின்றன் மேனியி லெறிகொடுங் கதைபடவெறிந்தவ
                                     னெடுவானிற்,
சென்ற மாயமொன் றிருந்தவா றடியனேன் றெளியுமா
                                   றுரையென்றான்.

     (இ-ள்.) என்று,- யாவர்உம் - எல்லோரும், துதி செய - தோத்திரம்
பண்ணும்படி, விரகினால் - தந்திரமாக, எதிர்த்த காவலன்தன்னை கொன்றபோது-
எதிர்த்துப் போர்செய்த சுதாயி என்னும் அரசனைக் ( கண்ணன்)
கொன்றருளியபொழுது, தன் உயிர்