தொரு கதாயுதத்தை மந்திரபூர்வமாக மைந்தனுக்குக்கொடுத்து, இதுதவறாமற் பகையழிக்க வல்லது: ஆனால், போர்செய்யாது நிற்பவன்மேல் இது பிரயோகிக்கப்படின் அவனைக்கொல்லாமல் மீண்டு வந்து பிரயோகித்தவனையே கொன்றிடும்' என்று கூறியிருந்தான்; அங்ஙனமிருந்தும், காலம் சமீபித்ததனால் சுருதாயுதன் அவ்வருணன்கட்டளையைக் கருதாமற் போரிற் கோபத்தோடு கதையைவீச அதுபோர்செய்தலின்றிப் பாகனாய்நின்ற கண்ணனுடம்பிற்பட்டதனால், அப்பரமனை யாதுஞ்செய்யலாற்றாது திரும்பிச்சென்று அவனையே வதைத்துக் கீழ்விழுந்தது என்றும், பின்பு காலிங்கரானச்ருதாயு அசயுதாயு என்ற ரிருவரும் அவர்கள் புத்திரரான நியுதாயு தீர்க்காயு என்ற இருவரும் முறையே அருச்சுனனுடன்எதிர்த்து மாண்டனரென்றும் வியாசபாரதம் கூறுகின்றது. பி - ம் : பலபெரும்படையொடும். (432) 36. | எறிந்த வெங்கதைகொன்றிடும்படைக்கலனெடுத்த வருடற்பட்டா, லறிந்துநானிடையேற்றலினவனுயிரழிந்ததென்றருள் செய்தான், பிறிந்தயோனிகளனைத்துமாய் முதலுமாய் பெருமித மனத்தோடு, செறிந்தவரக்கொருசகாயனாயருந்துயர்தீர்த்திடுந் தேர்ப்பாகன். |
(இ-ள்.) எறிந்த வெம் கதை - (இவன்) பிரயோகித்த கொடிய கதாயுதம், படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் - (கையில்) ஆயுதம் ஏந்தியுள்ளவருடைய உடம்பிற் பட்டால், கொன்றிடும் - (அவர்களைத்) தவறாமற் கொன்றுவிடும்; (அப்படிப்பட்ட ஆயுதத்தை) நான் அறிந்து இடை ஏற்றலின் - (கையிற்படைக்கலமில்லாத) யான் (அவன்செய்தியை) உணர்ந்து நடுவில் ஏற்றுக்கொண்டதனால், அவன் உயிர் அழிந்தது - அவனது உயிர் இறந்திட்டது, என்று-, அருள்செய்தான் - சொல்லியருளினான்: (யாவனெனில்) - பிறிந்த யோனிகள்அனைத்துஉம் ஆய்- (பலவாறாகப்) பிரிவுபட்ட பிறப்பு வகைகளையுடையஎல்லாச்சராசரங்களின் வடிவமாய், முதல்உம் ஆய்- (அவற்றிற்கெல்லாம்)மூலகாரணமுமாய், பெருமிதம் மனத்தோடு - பெருந்தன்மையையுடைய மனத்துடனே,செறிந்தவர்க்கு ஒரு சகாயன் ஆய் - (தன்னை) அடைந்தவர்க்கு ஒரு துணைவனாய்,அருந்துயர் தீர்த்திடும் - (அவர்களது) ஒழித்தற்கரிய துன்பத்தை ஒழித்திடுகிற, தேர்ப்பாகன் - (பார்த்த) சாரதியான கண்ணபிரான்: (எ - று.) பிரி என்பது போலப் பிறி என ஒரு தனிவினை உள்ளது. 'யோனிகளனைத்துமாய்' என்றது - அநாதியாய்த் தொடர்ந்துவருகிற கருமத்துக்கு ஏற்றபடி பலவகைப் பிறப்புக்கொள்ளுகிறசகலஜீவாத் மாக்களுள்ளும் அந்தராந்மாவாய் நின்று அவற்றைக்கொண்டு தொழில்செய்பவனாய் என்றபடி. 'முதலுமாய்' என்றதில், அவற்றைப்படைத்தல் காத்தல் அழித்தல் செய்து அவற்றிற்கெல்லாந் தலைமைபூணுந்தன்மை தோன்றும். எம்பெருமான் சரணமடைந்தவரைப் பாதுகாக்குந்தன்மை, ஈற்றடியால் விளங்கும். கண்ணன், தன்னையடுத்த பாண்டவர்க்கு ஒப்பற்ற தனித்துணை |