பக்கம் எண் :

262பாரதம்துரோண பருவம்

வனாய்நின்று அவர்க்கு நேரும் பலவகைத்துன்பங்களையும் தவறாமல் ஒழித்தவருதல்
தோன்ற, ' செறிந்தவர்க் கொருசகாயனா யருந்துயர் தீர்த்திடுந்தேர்ப்பாகன்' என்றார்;
'தேர்ப்பாகன்' என்றதனால், கண்ணனது சௌலப்பியம் வெளியாம். பி - ம்:
அறிந்தநான். பெருமித மறந்தீண்டுச்.                                (433)

37.- பின்பு சதாயு அருச்சுனனை எதிர்த்து அழிதல்.

கதாயுதந்தனக்குரிய நாயகன்மிசைகதைபடச் சிதைவுற்றுச்,
சுதாயுவென்பவன் பலபெரும் படையுடன் றுறக்கமெய்திய
                                     பின்னர்ச்,
சதாயுவென்றவ னிளவன் மற்றவனினுஞ் சமர்புரிந்த
                      வன்றானுங்,கெதாயுவாயினன்,
கிரீடியோடெதிர்த்தவர் யாவரேகெடாதுய்வார்.

     (இ-ள்.) கதாயுதந்தனக்கு உரிய நாயகன்மிசை - கதாயுதத்துக்குஉரிய
தலைவனான கண்ணபிரான்மேல், கதைபட - (தனது) கதாயுதம் பட்டதனால்,
சுதாயுஎன்பவன்,- சிதைவு உற்று - அழிவடைந்து, பல பெரும் படையுடன் -
(மற்றும்அருச்சுனனாற் கொல்லப்பட்ட தனது) பெரிய பல சேனைவீரர்களுடனே,
துறக்கம்எய்திய பின்னர்- வீரசுவர்க்கமடைந்த பின்பு,- சதாயு என்ற அவன்
இளவல் -அவனது தம்பியான சதாயுஎன்பவன், அவனின்உம் - அந்தச்
சுதாயுவினும் மிகுதியாக,சமர் புரிந்து - (அருச்சுனனோடு) போர்செய்து,
அவன்தாம்உம்- அவனும், கெதஆயு ஆயினன் - கழிந்துபோன
ஆயுளுடையவனானான் [இறந்தான் என்றபடி];கிரீடியோடு எதிர்த்தவர் -
அருச்சுனனோடு எதிரிட்டவருள், யாவர்ஏ- எவர்தாம்,கெடாது உய்வார் -
அழியாமற் பிழைப்பவர்? ( எ -று.) - மற்று - அசை.

     கண்ணன் கௌமோதகியென்ற சிறந்த கதைக்கு உடையவனாதலால்,
'கதாயுதந்தனக்குஉரிய நாயகன்' எனப்பட்டான். சதாயு என்பது -  சதஆயுஸ் எனப்
பிரிந்து, மிக்கஆயுளுடையவ னென்று பொருள்படும்; சதம் - நூறு. இங்கே, மிகுதி.
'சதாயு என்ற அவன் இளவல் அவனினும் சமர்புரிந்து****கெதாயுவாயினன்' என்ற
விடத்து, 'அவன்தானும்' என்றது வேணடுவதன்றாயினும், தமையன்போலவே
தம்பியும் விரைவில் அழிந்தான் என்ற தன்மையை விளக்குதலால்,
தகுதிபற்றிவந்ததென்க. கதாயுஎன்பது, மோனைப் பொருத்தம்நோக்கி 'கெதாயு'
எனத்திரிந்துநின்றது. தீர்க்கமான ஆயுளுடையவன் அற்பமான
ஆயுளுடையவனானானென முரண் தோன்ற, 'சதாயு கெதாயுவாயினன்' என்றார்.
இது, அருச்சுனனதுஆற்றலை வியந்தது.                            (434)

38.- பின்பு ஹைஸ்ரபாஹூ என்பவன் அருச்சுனனைஎதிர்த்தல்.

ஆயிரம்பதின்மடங்குதேரிபமதன்மும்மடங்கடல்வாசி
யாயிரஞ்சதமதனின்மும்மடங்குகாலாளுடனணியாக்கி
யாயிரம்புயத்தருச்சுனனிகரெனவாழியாற்றுணிப்புண்ட
வாயிரம்புயத்தவனெனவெதிர்த்தனனாடலாயிரவாகு.