பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்265

39.- ஸஹஸ்ரபாஹூ அருச்சுனன்மேல் அம்பெய்தல்.

உரங்களாயிரம்பொலங்கிரியனையனவோரொருகுனிவிற்கள்
கரங்களாயிரங்கொடுவளைத்தாயிரங்கண்ணன்மைந்தனைநோக்கி
வரங்களாயிரமறையொடும்பெற்றவன்மதிவகிர்முகமான
சரங்களாயிரமாயிரமொருதொடைதனிலெழும்படியெய்தான்.

     (இ -ள்.) ஆயிரம் - மிகப்பலவான, வரங்கள் - வரங்களையும,் மறையொடு
உம்- (அஸ்திரங்களுக்கு உரிய) மந்திரங்களையும், பெற்றவன் - பெற்றவனான
அந்தஆயிரவாகு,- ஆயிரம் உரங்கள் பொலம் கிரி அனையன - மிகப்பலவான
வலிமைகளையுடைய பொன்மயமான மகாமேருகிரியைப் போன்றனவான, ஒர் ஒரு
குனி விற்கள் - வளையுமியல்பையுடைய விற்கள் ஒவ்வொன்றையும், கரங்கள்
ஆயிரம் கொடு - (தனது) ஆயிரங்கைகளால், வளைத்து - வணக்கி நாணேற்றி,-
ஆயிரம் கண்ணன் மைந்தனை நோக்கி - ஆயிரங்கண்களையுடையவனான
இந்திரனதுகுமாரனாகிய அருச்சுனனைக்குறித்து, மதிவகிர் முகம் ஆன சரங்கள் -
சந்திரனதுபிளப்புப்போன்ற நுனியுடையனவான ( அர்த்தசந்திர) பாணங்களை, ஒரு
தொடைதனில் ஆயிரம் ஆயிரம் எழும்படி- தொடுக்குந்தரமொவ்வொன்றிலும்
மிகப்பல ஆயிரக்கணக்காக மேற்சொல்லும்படி, எய்தான் - பிரயோகித்தான்; (எ-று.)

     ஆயிரங்கைகளுள் இடப்பக்கத்துள்ள ஐந்நூறுகைகளில் வில்வளைத்துப்
பிடித்துக்கொண்ட வலப்பக்கத்துள்ள ஐந்நூறுகைகளால் அம்பெய்தன னென்க; இது,
அடுத்த கவியால் விளங்கும். மேருமலைபோன்ற சிறப்புடை விற்கள் என்பதற்கு,
'பொலங்கிரி யனையன விற்கள்' என்றார். பி- ம்:  குனிவிற்செங்.        (436)

40.- அருச்சுனன் ஆயிரவாகுவின் அம்புகளை விலக்கல்.

எடுத்தபோதிலொன்றருங்குதைநாணிடையிசைத்தபோதொருபத்துத்
தொடுத்தபோதினூறுகைத்தபோதாயிரமெனவருஞ்சுடர்வாளி
யடுத்தபோர்முடிமன்னவன்விடும்விடுமநேகமாயிரமம்புந்
தடுத்தபோதொருதனுவுமைஞ்ஞூறடற்றனுவுடனெதிர்நின்ற.

     (இ-ள்.) எடுத்த போதில் - (தொடுக்கும்பொருட்டுக் கையில்) எடுத்த
பொழுதில், ஒன்று- ஒன்றும், அருங் குதை நாணிடை - அருமையான வில்லின்
நாணியிலே, இசைத்த போது - வைத்த பொழுதில், ஒரு பத்து - பத்தும், தொடுத்த
போதில் - (வில்லினால்) தொடுத்தபொழுதில், நூறு - நூறும், உகைந்த போது -
(எதிரியின் மேற்)  செலுத்தியபொழுது, ஆயிரம் என - ஆயிரமுமாக இருக்கும்
படி,அருஞ்சுடர் வாளி - பெறுதற்கரியனவும் ஒளியுள்ளனவுமான அம்புகளை,
(அருச்சுனன் ஏவி அவற்றால்), போர் அடுத்த முடி மன்னவன் விடும் விடும்
அநேகம் ஆயிரம் அம்புஉம் தடுத்தபோது - போரில்நெருங்கின கிரீடாதிபதியான
ஸஹஸ்ரபாகுஎன்னும் அரசன் (தன்மேல்) மிகுதியாகப்பிரயோகித்த பல
ஆயிரக்கணக்கான அம்புகளையெல்லாம் தடுத்தபொழுது, ஒரு தனுஉம் - (அருச்