பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்267

42.-துணிப்புண்ட கைகள் கீழ்விழுதல்.

மீதலுந்தனக்கிறைவன்வச்சிரத்தினால்வெற்பினஞ்சிறகற்றுப்
பூதலந்தனில்விழுவபோல்விழுந்தபுயங்களாயிரமும்போய்க்
காதலங்கனைதடம்படிந்தேகுதல்கண்டுகாமுகனாகிப்
பாதலம்புகுந்தின்பமெய்தியவிறற்பார்த்தன்வெங்கணையாலே.

     (இ-ள்.) காதல் - விரும்பப்படுதற்குஉரிய, அங்கனை - அழகியவளான
உலூபி,தடம் படிந்து - நீர்நிலையிலே நீராடி, ஏகுதல் - செல்லுதலை, கண்டு -
பார்த்து,காமுகன் ஆகி - (அவளிடத்து) ஆசைகொண்டவனாய், பாதலம் புகுந்து -
(அவளுடன்) பாதாளலோகத்தைச் சேர்ந்து, இன்பம் எய்திய - (அவளோடு)
சுகம்பெற்ற, விறல் பார்த்தன் - வலிமையையுடைய அருச்சுனனது, வெம் கணையால்
- கொடிய அம்புகளினால்,- புயங்கள் ஆயிரம்உம் - (சகசிரவாகுவின்)
ஆயிரந்தோள்களும்,- மீதலந்தனக்கு இறைவன்- மேலுலகமான சுவர்க்கத்துக்குத்
தலைவனான இந்திரனது, வச்சிரத்தினால் - வச்சிராயுதத்தினால், வெற்பின் அம்
சிறகு- மலைகளின் அழகிய இறகுகள், அற்று பூதலந்தனில் விழுவபோல் -
அறுபட்டுப்பூமியில் விழுவனபோல, போய் விழுந்தன- துணிபட்டுக் கீழ்
விழுந்திட்டன; ( எ -று.)- பி -ம்: விழுந்தபோல்.

     உவமையணி. இந்திரகுமாரனான அருச்சுனனுக்கு - இந்திரனும்,
அருச்சுனனது வலிய அம்புகட்கு - வலிய வச்சிராயுதமும், வலிய பெரிய
ஆயிரவாகுவுக்கு - மலையும், அவன்தோள்கட்கு - மலையிறகுகளும்
உவமையெனக்காண்க. வெற்புஇனம் சிறகற்று விழுவ போல் என எடுத்து
உரைத்தால், மலைகள் தோள்களுக்கு உவமையாம். மீதலம் - சுவர்க்கம்.

     அங்கநா - அழகிய அங்கமுடையாள்: வடசொல்.             (439)

43.- அருச்சுனனைத் தேவர்கள் கொண்டாடுதல்.

அன்றருச்சுனனாயிரம்புயங்களுமரிந்தனன்மழுவீரன்
இன்றருச்சுனனிவன்புயமரிந்தனனென்றிமையவரேத்தத்
துன்றருச்சுனநான்மறையுரலுடன்றொடரமுன்றவழ்ந்தோடிச்
சென்றருச்சுனமிரண்டுதைத்தருளினோன்செலுத்துதேரவன்சென்றான்.

     (இ -ள்.) 'அன்று - அந்நாளில், அருச்சுனன் ஆயிரம் புயங்கள்உம் -
கார்த்தவீரியார்ச்சுனனது ஆயிரம் தோள்களையும், மழுவீரன் -
கோடாலிப்படையையுடைய மகாவீரனான பரசுராமன், அரிந்தனன் - அறுத்திட்டான்:
( அதுபோலவே), இன்று - இந்நாளில், அருச்சுனன் - இந்த அருச்சுனன், இவன்
புயம் அரிந்தனன் - இந்த ஆயிரவாகுவின் தோள்களை யறுத்திட்டான்', என்று-
என்றுசொல்லி, இமையவர் - தேவர்கள், ஏத்த- புகழ,-. துன்று - விடாதுநெருங்கிய,
அருச்சுனம் - பரிசுத்தமான, நூல் மறை - நான்கு வேதங்களும், உரலுடன் -
உரலுடனே, தொடர - பின் தொடர்ந்து வர, முன் தவழ்ந்து ஓடி சென்று -
முன்னேதவழ்ந்து கொண்டு விரைவாகப்போய், இரண்டு அருச்சுனம் உதைத்தருளி