னோன் - இரண்டு மருதமரங்களை உதைத்து அருள்செய்தவனான கண்ணபிரான், செலுத்து - (பாகனாயமைந்து) ஓட்டுகிற, தேரவன் - தேரையுடைய அருச்சுனன், சென்றான் - (அப்பாற்) போயினான்; ( எ -று.) - ஏத்தச் சென்றான் என்க. எடுத்துக்காட்டுவமையணி. மழுவீரன் - பரசுராமன். 'அன்றுஅருச்சுனன் ஆயிரம்புயங்களும் அரியப்பட்டனன்': இன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களையும் அரிந்தனன்' என்றுசொற்போக்கில் தொடைமுரண் தோன்றக் கூறியது, கவிசமத்காரம். வெண்ணிறத்தையுணர்த்தும் அர்ஜூநமென்ற வடசொல் - மூன்றாமடியில், இலக்கணையாய், சுத்தமென்றபொருளில் வந்தது. இனி, அருச்சுனன் என்ற வடசொல்திரிபு எதுகைநயத்துக்காக அருச்சுனமென விகாரப் பட்டதாகக்கொண்டு, அருச்சுனம் - சுவாமிபூசைக்கு உதவிகிற அல்லது பூசிக்கத்தக்க, மறை யென்று உரைத்தலும் ஒன்று: 'அசேதனமாகிய உரலோடு சகலஞானங்கட்கும் ஆதாரமான வேதங்களுந்தொடர' என்றதனால், திருமாலினருள்பெற்றால் அசேதநங்களும் சேதநங்களோடு ஒப்புமைபெறு மென்பது தோன்றும். (440) 44.- பின்பு பல அரசர் திரண்டு அருச்சுனனை எதிர்த்தல். கடிகைமுப்பதுஞ்சிந்துவுக்கரசனைக்காக்குமாறறைகூவி யிடியிடித்தெனப்பல்லியமார்த்தெழவெழுகடற்படையோடும் படிநடுக்குறப்பணிக்குலநெளித்திடப்பட்டவர்த்தனருள்ளார் முடிதரித்தவரனைவருந்திரண்டொருமுனைபடவெதிர்சென்றார். |
(இ-ள்.) பட்டவர்த்தனர் உள்ளார் - (கிரீடமில்லாமல்) நெற்றிப்பட்டம் மாத்திரம்தரித்து அரசாளும் பட்டவர்த்தனர்களாக உள்ளவர்களும், முடி தரித்தவர் -கிரீடத்தைதரித்து அரசாளும் மகுடவர்த்தனர்களாக உள்ளவர்களுமாகிய, அனைவர்உம் - எல்லா அரசர்களும்,- திரண்டு- ஒருங்கு கூடி , கடிகைமுப்பது உம்-(அன்றைப்பகல்) நாழிகைமுப்பதும், சிந்துவுக்கு அரசனை - சிந்துதேசத்து அரசனாகிய சயத்திரதனை, காக்கும் ஆறு - (தாம்) பாதுகாக்கும்படி ( நிச்சயித்து),- அறைகூவி - (அருச்சுனனை) வலியப் போர்க்கு அழைத்துக்கொண்டு,- பல் இயம் - அநேகவித வாத்தியங்கள், இடி இடித்து என - இடியிடித்தாற்போல, ஆர்த்து எழ - ஆரவாரித்து மிக முழங்க,- எழு கடல் கடையோடுஉம் - ஏழுசமுத்திரங்கள்போன்ற சேனைகளுடனே,- படி நடுக்குஉற -(பாரமிகுதியாற்) பூமி நடுக்கமடையவும், பணி குலம் நெளித்திட- (மற்றும் அதனால் பூமியைத்தாங்குகிற) பாம்புகளின்கூட்டம் (சுமக்கமாட்டாது) தலையசைக்கவும் ஒரு முனை பட - ஓரேநோக்கமாக, எதிர் சென்றார் - அருச்சுனனெதிரில் வந்தார்கள்; ( எ -று.) பதினான்காநாட்பகல் முழுவதும் அருச்சுனன்கையிற்படாத படி சயத்திரதனைத்தாம் பாதுகாப்பதாக மிகப்பல அரசர் ஒன்று கூடித் தம் சேனைகளோடுபூமிநடுங்கும்படி அருச்சுனனுக்கு எதிரே சென்றா ரென்க. ஆயிரந்தலைகளையுடையஆதிசேஷன் |