பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்271

இறந்தவர்களது தொகை அன்றைநாளில் இறந்தவர்களது தொகைக்கு
உறையிடுதற்கும் போதாது என்று, அன்று இறந்தவர்களது தொகைமிகுதியை
விளக்கியவாறு. நவகதி - குரங்கு, வேங்கை, யானை, நாய்,ஆடு , சிங்கம், நரி,
சாபம்,முயல் என்பவற்றின் கதி என்றலுமுண்டு. பட்டார் - பட்டவரின் தொகைக்கு,
ஆகுபெயர்: அதனால், 'போதும்' என்ற செய்யுமென்முற்றைக்கொண்டது:
இல்லாவிடின், போதுவர் என்றுமுற்றுவரவேண்டும்.                    (444)

48.- அருச்சுனனது விற்போர்த்திறச்சிறப்பு.

அநேக மாயிரம் பேர்படக் கவந்தமொன் றாடுமக் கவந்தங்க
ளநேக மாயிர மாடவெஞ் சிலைமணி யசைந்தொரு குரலார்க்கு
மநேக நாழிகை யருச்சுனன் சிலைமணி யார்த்ததக் களம்பட்ட
வநேக மாயிரம் விருதரை யளவறிந் தார்கொலோ வுரைக்கிற்பார்.

     (இ -ள்.) அநேகம் ஆயிரம் பேர் பட (போரில்) பலஆயிரம் பேர் இறக்க,
கவந்தம் ஒன்று ஆடும் - ஒருகவந்தம்[எழுந்துநின்று] கூத்தாடும்: அ கவந்தங்கள்
அநேகம் ஆயிரம் ஆட - அத்தன்மையனவான கவந்தங்கள் பல ஆயிரம் எழுந்து
கூத்தாட, வெம் சிலை மணி அசைந்து, ஒரு குலல் ஆர்க்கும்- பயங்கரமான
வில்லிற்கட்டியுள்ள மணி அசைந்து ஒருமுறை ஒலிக்கும்; அருச்சுனன் சிலை
மணி-(அத்தன்மையுள்ள) அருச்சுனனது காண்வவில்லின் மணி, அநேக நாழிகை
ஆர்த்தது- (அப்போது) பலநாழிகைப் பொழுது ஒலித்தது; (என்றால்),- அ களம்
பட்ட -அந்தப் போர்க்களத்தில் (அன்று) இறந்த, அநேகம் ஆயிரம் விருதரை -
பலஆயிரம் வீரர்களை, ஆர்கொல் - யார்தாம், அளவு அறிந்து உரைக்கிற்பார் -
(இவ்வளவென்று) தொகையறிந்து சொல்லவல்லார்? [எவருமில்லை யென்றபடி]; ஓ -
அசை.

     இப்பாட்டிற்கூறிய மரபை " ஆனையாயிரந்தேர்பதினாயிர மடர் பரியொரு
கோடி, சேனைகாவலராயிரம்பேர்படிற் செழுங்கவந்த மொன்றாடுங், கானமாயிர
மாயிர கோடிக்குக் கவின்மணி கணிலென்னும், ஏனையம்மணியேழரை நாழிகை
யாடிய தினிதன்றே" என்று கம்பராமாயணத்திலும் காண்க. இது, வடநூல்களிலுங்
கூறப்பட்டுள்ளது. கவந்தம் - கபந்தம் என்ற வடசொல்லின் திரிபு: இதற்கு -
தொழிலுடன் கூடின தலையற்ற உடலென்று பொருள். மணி - அடிக்கும்மணி,
கண்டை. மணியில் அடிக்கிற உறுப்பை 'நா' என்றல் மரபாதலின், அதன் ஒலியை
'குரல்' என்றார். சொற்பொருட்பின்வருநிலை.                      (445)

வேறு.

49.- படுகளச்சிறப்பு.

வெவ்வாசிநெ டுந்தேர்மிசை நிமிராவரி விற்கொண்
டிவ்வாறமர் புரிவேலையி லெழுசெங்குரு தியினா
லவ்வாடர வுடையானழி யாயோதன மந்திச்
செவ்வானக மெனசந்துசி வப்பேறிய தெங்கும்.