பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்273

மடைந்தபோது வெயில்மிக்கதனா லாகிய தாபத்தைப் பொறுக்க மாட்டாமல்
அத்தாமரையைவிட்டுப் பக்கங்களிலுள்ள சோலைகளிலிருக்கிற மரங்களின் நிழலில்
மலர்ந்த வேற்றுப்பூக்களை நாடியடைகின்றன என்று, அக்காலத்தின் வெயில்
மிகுதியை முன்னிரண்டடி விளக்கும். 'முருகார்' என்பது, வண்டுக்கு அடைமொழி;
முருகுஆர்தல் - நறுமணத்தை யுட்கொள்ளுதலும் அழகுநிரம்புதலும்
இளமைபொருந்துதலும் ஆம்.                                    (447)

51.- அருச்சுனன் அங்கு ஒருகுளம் உண்டாக்கல்.

விரவார்முனையடுதேர்நுகவெவ்வாசிகள்புனலுண்
டுரவாவிடிலோடாவினியென்றையனுரைப்ப
வரவாபரணன்றந்தருளருமாமறைவருணச்
சரவாய்வரவெய்தானவணெழலுற்றதொர்தடமே.

     (இ-ள்.) (அப்பொழுது),- ஐயன் - (யாவர்க்குந்) தலைவனான கண்ணன்,
(அருச்சுனனை நோக்கி), 'விரவார் முனை அடு - பகைவரது போரை அழிக்கவல்ல,
தேர் - (நமது) தேரினது, நுகம் - நுகத்தடியிற் பூட்டப்பட்டுள்ள, வெவ் வாசிகள் -
விரைந்து செல்லத்தக்க குதிரைகள், புனல் உண்டு உரவா விடில் - நீர்பருகி
வலிமையடையாவிட்டால் [இளைப்பாறாவிட்டால்], இனி ஓடா - இனிமேல்
ஓடமாட்டா,' என்று உரைப்ப - என்றுசொல்ல,- (உடனே அருச்சுனன்),- அரவு
ஆபரணன் தந்தருள் அரு மாமறை - நாகங்களை ஆபரணமாகவுடைய சிவபிரான்
(தனக்குக்) கொடுத்தருளிய (பிறர்க்கு) அருமையான சிறந்த உருத்திரமந்திரம்,
வருணம் சரவாய் வர - வாருணாஸ்திரத்திலே அமையும்படி, எய்தான் -
பாணப்பிரயோகஞ் செய்தான்; (அம்மாத்திரத்து,) அவண் - அங்கு, ஓர் தடம் -
ஒருதடாகம், எழல்உற்றது - உண்டாயிற்று; ( எ -று.)- வருணாச்சரம் -
நீர்க்கடவுளாகியவருணனைத் தெய்வமாகவுடைய அஸ்திரம்.           (448)

52.- இரண்டுகவிகள் - அக்குளத்தின் வருணனை.

ஆழம்புணரியினும்பெரிததினும்பெரிதகலஞ்
சூழெங்கணும்வண்டாமரைதுறையெங்கணுநீலங்
கீழெங்கணுநெடுவாளைவரால்பைங்கயல்கெண்டை
வாழுங்கரையருகெங்கணும்வளர்கின்னரமிதுனம்.

     (இ-ள்.) ஆழம் - (அக்குளத்தின்) ஆழம், புணரியின்உம் பெரிது - கடலின்
ஆழத்தினும் அதிகமானது; அகலம் -(அக்குளத்தின் அகலமும், அதின்உம்
பெரிது -கடலின் அகலத்தினும் அதிகமானது; சூழ் எங்கண்உம்- (அக்குளத்தில்)
சுற்றிலுமுள்ளஎவ்விடத்தும், வள் தாமரை - செழிப்பான தாமரைகளும்,- துறை
எங்கண்உம் -(அக்குளத்தின் இறங்கு) துறைகளிலெல்லாம், நீலம் -
கருங்குவளைகளும்,- கீழ்எங்கண்உம் - (அதன்) உள்ளிடம் முழுவதிலும், நெடு
வாளை - நீண்டவாளைமீன்களும், வரால் - வரால்மீன்