பக்கம் எண் :

278பாரதம்துரோண பருவம்

     இப்பாட்டின் முன்னிரண்டடிகள் 'சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்,
சொல்லியவண்ணஞ் செயல்" என்றார்போலக் கொள்க. 'சேணாடுறும்' என்பதற்கு,
'சயத்திரதன்' என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது.                     (456)

60.-குனிநாணுடைவரிவிற்படைவிசயற்கெதிர்குறுகித்
தனிநானவனுயிர்கொள்ளுதறவிர்கிற்குதலல்லான்
முனிநாயகவேறார்விரகில்லைத்திருமுன்னே
யினிநாடியடும்போர்விரைவொடுகாணுதியென்றான்.

     (இ-ள்.) முனி நாயக - முனிவர்கட்குத் தலைவனே! குனி -
வளைக்கப்பட்டதும், நாண் உடை - நாணியை யுடையதுமாகிய, வரி வில் படை -
கட்டமைந்த (காண்டீவ) வில்லாகிய ஆயுதத்தையுடைய, விசயற்கு எதிர் -
அருச்சுனனுக்கு எதிரிலே, நான்-, தனி - தனியே, குறுகி - சமீபித்து (ப்போர்
செய்து),அவன் உயிர் கொள்ளுதல் - அவனது உயிரைக் கவர்தல், (அல்லது),
தவிர்கிற்குதல்-(அவனால்) இறந்தொழிதல், அல்லால் -என்னும் இவையே
யல்லாமல், வேறு ஓர்விரகு இல்லை- (இப்பொழுது செய்யத்தக்கது) வேறொருபாய
மில்லை; (ஆகையால்),திரு முன்னே -உனது எதிரிலே, இனி - இனிமேல், நாடி-
(நான்) முன்சென்று, அடும்- பகையழிக்கத் தொடங்கிச் செய்யப்போகிற, போர் -
போரை, விரைவொடு காணுதி- விரைவிற் பார்ப்பாய், என்றான்-; ( எ -று.)

     சிறந்தவில்வீரனான அருச்சுனனை எதிர்தடுத்துச் சைந்தவனைப்
பாதுகாப்பவர்எவருமில்லை யாதலால், இனிநானே தனியே அவன்முன் சென்று
ஒருகைபார்த்துவிடுகிறேனென்கிறான் துரியோதனன். இதனால், சேனைத்
தலைவனாகிய நீ அரசனாகிய நானே சென்று பொரும்படி விட்டுப் பகையழித்தலில்
உபேக்ஷைசெய் துள்ளா யென்று நிட்டூரமாகக் கூறியவாறாம்.              (457)

61-. இதுமுதல் ஐந்துகவிகள் - ஒருதொடர்: துரோணன் பலகூறிக்
கவசமளித்ததைத் தெரிவிக்கும்.

முனியுந்தரணிபனோடுசின்மொழிநன்கினுரைக்குந்
துனிகொண்டுளமழியாதொழிதுணிவுற்றனைமுதலே
யினியஞ்சிளைத்தெண்ணிடுமெண்ணந்தகவன்றால்
அனிகங்களழிந்தாலுநின்னாண்மைக்கழிவுண்டோ.

     (இ-ள்.) (இங்ஙனந்துரியோதனன்சொன்னவற்றைக் கேட்டு), முனிஉம்-
துரோணாசாரியனும், தரணிபனோடு - (துரியோதன) ராசனுடனே, சில்மொழி -
சிலவார்த்தைகளை, நன்கின் உரைக்கும் - நன்றாகச் சொல்வான்: - (நீ), முதலே -
முன்னமே, துனி கொண்டு உளம் அழியாது- (பகைவர்க்கு) அச்சங்கொண்டு
மனஞ்சோர்தலில்லாமல், ஒழி துணிவு உற்றனை - (அதற்கு) மாறான
துணிவையடைந்தாய்; இனி - இப்பொழுது, அஞ்சி - (பகைக்குப்) பயந்து,
இளைத்து- மெலிந்து. எண்ணிடும்- சிந்திக்கிற, எண்ணம் - சிந்தனை, தகவு
அன்று -தகுதியுடையதன்று; ஆல் - ஆதலால், அனிகங்கள்