பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்279

அழிந்தால்உம் - (உனது) சேனைகள் அழிவடைந்தாலும், நின்ஆண்மைக்கு
அழிவுஉண்டுஓ - உனது பாராக்கிரமத்துக்கு அழிவுஉண்டாகலாமோ? (எ -று.) -
இப்பாட்டில், இரண்டாம்  அடி முதல் 65- ஆம் பாட்டிம் மூன்றாம் அடி
வரையில்துரோணன்வார்த்தை.

     "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவ மென்பது இழுக்கு"
என்றபடி நீ முன்னமே பகைவரது வல்லமையைக் கருதிச் சினந்தணிந்து
சமாதானப்படாமல், உயிர்போவதானாலும் இராச்சியங்கொடுப்பதில்லையென்று
கடுந்துணிபு கொண்டாய்; அங்ஙனந்துணிந்து போர்தொடங்கிவிட்டபின்பு
அஞ்சுதலிலும் சோர்தலிலும் சிந்தித்தலிலும் பயனென்னை? சேனையழிந்தாலும்
உனது தைரியங் குறையாலாகாது என்றனன்.                       (458)

62.உரனால்வருதேரொன்றினிலுற்றோரிருவரையு
நரநாரணரிவரென்பர்கண்ஞானத்தினுயர்ந்தோர்
அரனார்திருவருளான்முனையடல்வாளிகள்பலவும்
வரனாலுயர்மறையும்பிறர்மற்றார்நனிபெற்றார்.

     (இ-ள்.) உரனால் வரு - வலிமையோடு வருகிற, தேர் ஒன்றினில் - ஒரு
தேரிலே, உற்றோர் இருவரைஉம் - பொருந்தியவரான ( அருச்சனன் கிருஷ்ணன்
என்ற) இருவரையும், ஞானத்தின் உயர்ந்தோர் - தத்துவஞானத்தாற்சிறந்த
பெரியோர்கள், நர நாரணர் இவர் என்பர்கள் -' நரனும் நாராயணனுமே இவர்கள்'
என்று சொல்வார்கள்; (அன்றியும் அவ்விருவர்போல,) அரனார் திரு அருளால் -
சிவபிரானது சிறந்த கருணையினால், முனை அடல் வாளிகள் பலஉம்- போரிற்
பகையழித்தற்குஉரிய அம்புகள் பலவற்றையும், வரனால் உயர் மறைஉம்-
வரமாகச்சிறந்த மந்திரங்களையும், பிறர் ஆர் நனி பெற்றார் - வேறு எவர்
மிகுதியாகப் பெற்றவர்? [எவருமில்லை யென்றபடி]; ( எ -று.)

     வரனாலுயர்மறை - மிகவிரும்பித் தவம்முதலிய பெருமுயற்சி செய்து
பெறப்படும் மந்திரம், 'மற்றார்நனிபெற்றார்'-- பிராசம். மற்று - அசை;
வினைமாற்றுமாம். பி -ம்: ஞாலத்தில்.                            (459)

63.தவரோடவனின்றால்விதிதானுந்தரமல்லன்
எவரோமலையோடும்பொருதிருதோள்வலிபெற்றார்
உவரோதநிறத்தோனவன்விரைதேர்தனியூர்வா
னவரோடினியமர்வெல்லுதலாராயினுமரிதால்.

     (இ-ள்.) அவன்- அந்த அருச்சுனன், தவரோடு நின்றால் - (காண்டீவ)
வில்லுடன் எதிர்நின்றால், விதி தான்உம் தரம் அல்லன் - படைத்தற்கடவுளான
பிரமனும் (அவனையெதிர்க்கத்) தகுதியுடையானல்லன்; மலையோடுஉம் பொருது -
மலையுடனே தாக்கிப் போர்செய்து, இரு தோள் வலி பெற்றார் - தமது
இரண்டுதோள்களின்வலிமையை அழியாமற்பெற்றவர்கள், எவர்ஓ - யார் தாமோ?
[எவருமில்லை யென்றபடி]; (அதுபோலவே),- அவன் விரை தேர் தனி ஊர்வான் -
அவ்வருச்சுனனது விரைந்துசெல்லுந் தேரை