பக்கம் எண் :

282பாரதம்துரோண பருவம்

திருமாலின் கட்டளைப்படி பிரமனுடன் மந்தரமலையையடைந்து சிவபிரானைச்
சரணம்புக, அப்பெருமான் தனது மேனியினின்று தோன்றிய தொரு சிறந்த கவசத்தை
மந்திரபலத்துடனே அளித்தருள, எந்த ஆயுதத்தாலும் அழிக்கப்படாத அதனைத்
தரித்துத் தேவேந்திரன் விருத்திரனை யெதிர்த்துப் பொருது கொன்றனனென்றும்,
அதன்பின் இந்திரன் அக்கவசத்தை அங்கிரசுக்குக் கொடுக்க, அங்கிரசு தன்
குமாரனான பிருகஸ்பதிக்குத் தர , பிருகஸ்பதி அக்நிவேச்யமுனிவனுக்கு அருள,
அம்முனிவன் தன் மாணாக்கனான துரோணனுக்கு ஈந்தருளின னென்றும்,
முதனூலில் விவரங் கூறப்பட்டுள்ளது. அங்கரா = அங்கிரா: அங்கிரஸ் என்பவன்
-தேவகுருவான பிருகஸ்பதியின் தந்தை.

     இதுமுதற் பத்துக்கவிகள் - இச்சருக்கத்தின் 34- ஆம் கவிகள் போன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்                     (463)

67.- துரியோதனனும் மற்றும்பலரும் அருச்சுனனுடன் போர்க்குஎழுதல்

இட்டபொற்பெருங்கவசமோடெழுந்தனனிராசராசனுமுள்ள
பட்டவர்த்தனர்மகுடவர்த்தனர்களும்பலபடைஞருங்கூடி
யெட்டிபத்தின்வெஞ்செவிகளுஞ்செவிடுறப்பல்லியமெழுந்தார்ப்ப
முட்டவிட்டனர்தனஞ்சயனின்றமாமுனையில்வேன்முனையொப்பார்.

     (இ-ள்.) இட்ட - (துரோணன்) பூட்டின, பொன் பெருங்கவசமோடு -
பொன்மயமான பெரிய கவசத்துடனே, இராசராசன் உம்- அரசர்கட்குஅரசனான
துரியோதனமகாராசனும், எழுந்தனன் - (போர்க்குப்) புறப்பட்டான்;  வேல்
முனைஒப்பார் - வேலாயுதத்தின் நுனிபோலக் கொடியவர்களாகிய, உள்ள-
(அவன்சேனையில்) உள்ள, பட்டவர்த்தனர் - பட்டவர்த்தனர்களும்,
மகுடவர்த்தனர்களும்-, பல படைஞர்உம் - மற்றும் பல சேனைவீரர்களும், கூடி -
ஒருங்குசேர்ந்து,- எட்டு இபத்தின் வெம் செவிகள்உம் - எட்டுத்திக்குயாரனைகளின்
கொடிய காதுகளும், செவிடுஉற - (மிக்கஒலியைக் கேட்டலாற்) செவிடாம்படி, பல்
இயம் - பலவகைவாத்தியங்கள், எழுந்து ஆர்ப்ப - மிக்கு ஒலிக்க,- தனஞ்சயன்
நின்ற மா முனையில் - அருச்சுனன் நின்றுள்ள பெரிய போர்க்களத்தினிடத்திலே,
முட்ட விட்டனர்- சென்றுநெருங்கும்படி (தம்தம் வாகனங்களைச்) செலுத்தினார்கள்;

     பல அரசர்களை வென்று தலைமைபூண்டுநின்றதனால், 'ராஜராஜன்'என்று
துரியோதனனுக்குஒருபெயர். பலபடைஞர் - மண்டலீகர், மந்திரிகள், தந்திரிகள்,
சாமந்தர் முதலிய வகுப்பினர். திக்குயானைகளின் செவிகளும் மிக்கஒலியதிர்ச்சியாற்
புலனழிகின்றன எனவே, நிலவுலகத்து மற்றையபிராணிகள் செவிடுபடுதல்
கூறவேண்டாதாயிற்று;  இது, உயர்வுநவிற்சி.                         (464)

68.- இருகவிகள் - ஒருதொடர்: கௌரவசேனை அருச்சுனனுண்டாக்கிய
தடாகத்தில் இளைப்பாறுதலைக் கூறும்.

சென்றசென்றவெஞ்சேனைகளிளைப்பறத்தெய்விகத்தினில்வந்த
மன்றலம்பெரும்பொய்கைநீர்பருகியப்பொய்கையின்வளநோக்கி