யென்றுமென்றுநாநுகர்புனலன்றுநல்லின்னமுதிதுவென்பார் தென்றலந்தடஞ்சோலையிற்கரைதொறுஞ்சேர்ந்துதம்விடாய்தீர்வார். |
(இ-ள்.) சென்ற சென்ற - (இங்ஙனம்) மிகுதியாகப் புறப்பட்டுப்போன, வெம் சேனைகள் - கொடிய (துரியோதனனது) சேனையிலுள்ளார், இளைப்பு அற - (தமது) இளைப்புத்தணியும்படி, தெய்விகத்தினில் வந்த மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி - (அருச்சுனன் எய்த அஸ்திரத்தினது) தெய்வத்தன்மையா லுண்டான பரிமளமுள்ள அழகிய பெரிய தடாகத்தின் நீரைக் குடித்து, அ பொய்கையின் வளம்நோக்கி - அக்குளத்தினது வளப்பத்தைப் பார்த்து, 'இது-இக்குளத்தின் நீர், என்றுஉம்என்றுஉம் நாம் நுகர் புனல் அன்று - இத்தனைகாலமாக நாள்தோறும் நாம் குடித்துவந்த நீர்போல்வதன்று; நல்இன் அமுது - சிறந்த இனிய அமிருதம் போல்வதாம்,'என்பார் - என்று வியந்து சொல்வார்கள்; (மற்றும்), கரை தொறுஉம்- (அத்தடாகத்தின்) கரைகளிலுள்ள, தென்றல் அம் தட சோலையில் - தென்றற்காற்று உலாவப் பெற்ற அழகிய பெரியசோலைகளில், சேர்ந்து - தங்கி, தம் விடாய் தீர்வார்- தங்கள் தாபந்தணியப்பெறுவார்கள்; ( எ -று.) 'சேனைகள்' என்பது- சொல்லால் அஃறிணையாயினும், இங்கு உயர்திணைப்பொருளின்மேலதாதலால், 'என்பார்,' 'தீர்வார்' என்ற உயர் திணைப்பன்மைமுற்றுக்களைக் கொண்டது. (465) 69. | மத்தவாரணங்கொண்டுசெந்தாமரைவனங்கலக்குறுவிப்பார் தத்துபாய்பரிநறும்புனலருத்துவார்தாமுநீர்படிகிற்பார் கைத்தலங்களிலளியினமெழுப்பிமென்காவிநாண்மலர்கொய்வார் இத்தலந்தனிலிம்மலர்ப்பரிமளமில்லையென்றணிகிற்பார். |
(இ-ள்.) (மற்றும் அத்துரியோதனன்சேனையார்), மத்தம் வாரணம்கொண்டு - (தங்கள் தங்கள்) மதயானைகளால், செந் தாமரை வனம்-( அந்நீர்நிலையிலுள்ள) செந்தாமரைத் தொகுதியை, கலக்குறுவிப்பார்- கலக்குவிப்பார்கள்; தத்து பாய்பரி - தாவிவிரைந்துசெல்வனவானகுதிரைகட்கு, நறும்புனல் அருத்துவார் - சுகந்தமுள்ள அக்குளத்தினீரைக்குடிப்பிப்பார்கள்; தாமும் நீர்படிகிற்பார் - தாங்களும் அந்நீரில் மூழ்குவார்கள்; கைத்தலங்களில் - கைகளினால், அளி இனம் எழுப்பி -(மிகுதியாக மொய்த்துள்ள) வண்டின்கூட்டங்களை ஓட்டிவிட்டு, மெல் காவி நாள் மலர் கொய்வார் - மென்மையான நீலோற்பலத்தின் அன்றுமலர்ந்த பூக்களைப் பறிப்பார்கள்; ' இ மலர் பரிமளம் - இந்தப்பூக்களுக்குஉள்ள அவ்வளவு நறுமணம்,இ தலந்தனில் - இவ்வுலகத்தில், இல்லை - (வேறு எதற்கும்) இல்லை,' என்று -என்று கொண்டாடி, அணிகிற்பார் - (அக்கருங்குவளைமலர்களைச்) சூட்டிக்கொள்வார்கள்; ( எ - று.) (466) 70.- யாவரும் தன்னைச்சூழ்ந்ததை அருச்சுனன் காணுதல். இன்னவாறுதம்மசைவொழிந்தியாவருமிபரததுரகத்தோ டன்னவாவியைவளைத்தனர்கடல்வளையாழிமால்வரையென்னத் |
|