பக்கம் எண் :

284பாரதம்துரோண பருவம்

துன்னுமாமணித்தேரினின்றிழிந்துதன்சுவேதமாநீரூட்டு
மன்னுவார்கழன்மகபதிமதலையவ்வரூதினிக்கடல்கண்டான்.

     (இ-ள்.) இன்ன ஆறு - இந்தப்படி, தம் அசைவு ஒழிந்து - தங்கள்
இளைப்புத்தீர்ந்து, யாவர்உம் - துரியோதனசேனையாரெல்லாரும், இபரத
துரகத்தோடு -யானைதேர்குதிரைகளுடனே, கடல் வளை மால் ஆழி வரை
என்ன -சமுத்திரத்தைச்சூழ்ந்துள்ளபெரிய சக்கரவாளமலை போல, அன்ன
வாவியைவளைத்தனர் - அந்தக் குளத்தைச் சூழ்ந்துகொண்டார்கள்; துன்னும் மா
மணிதேரினின்று - நிறைந்த சிறந்த இரத்தினங்கள் பதித்த (தனது) தேரிலிருந்து,
இழிந்து -(அக்குளத்தில்) இறங்கி, தன் சுவேதம் மா நீர் ஊட்டும் - தனது
வெள்ளைக்குதிரைகளை நீர்பருகுவிக்கிற, மன்னுவார் கழல் மகபதி மதலை -
பெருமை பொருந்திய நீண்டவீரக்கழலையுடைய இந்திர குமாரனான அருச்சுனன்,
அவரூதினி கடல் கண்டான் - அந்தச் சேனா சமுத்திரத்தைப் பார்த்தான்; (எ-று.)

     'தன்சுவேதமாநீருட்டும்' என்றது -ஏவுதற்கருத்தாவின் வினைதனது சாரதியான
கண்ணனைக்கொண்டு தேர்க்குதிரைகட்கு நீருட்டுகிற என்று கருத்துக்கொள்க.
துரியோதனசேனையாரனைவரும் அக்குளத்தை விளைத்ததற்கு, கடல்வளை
ஆழிமால்வரை உவமை - பி-ம்: இபதுரகதத்தோடும்.                (467)

71.- அருச்சுனன் தேரில் ஏறாமலே அவர்களுடன் போர்செய்யத்துணிதல்

கண்டபோதுமுன்காண்டவமழித்தவன்கடவுள்வாவியினன்னீ
ருண்டவாசியைத்தேருடன்பிணித்துவில்லோரிமைப்பினில்வாங்கி
வண்டுழாய்மதுமாழையாய்வளைந்துமேல்வருவரூதினிதன்னை
யண்டரூர்புகவிடுத்தபின்றேரின்மேலாகுமாறாருளென்றான்.

     (இ-ள்.) கண்ட போது.(அந்தப்பகைவரது சேனைத்தொகுதியைப்)
பார்த்தபொழுது,- முன் காண்டவம் அழித்தவன்- முன்பு காண்டவவனத்தை
அழியச்செய்தவனான அருச்சுனன்,- (கண்ணனைநோக்கி),-'வள்துழாய் மது
மாலையாய் - செழிப்பான திருத்துழாயினாலாகிய தேனையுடைய மாலையை
யுடையவனே! கடவுள் வாவியின் நல் நீர்உண்ட வாசியை தேருடன் பிணித்து -
தெய்வத்தன்மையுள்ள இந்தக்குளத்தின் நல்ல நீரைக் குடித்த குதிரைகளை (நீ)
தேரிலே கட்டிவிட்டு,- வில் வாங்கி-(நான்) வில்லை வளைத்து, வளைந்து மேல்
வருவரூதினி தன்னை - சூழ்ந்து (நம்மேல்) நெருங்கிவருகிற இச்சேனையை, ஓர்
இமைப்பினில் -ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே, அண்டர் ஊர் புக விடுத்த பின் -
வீரசுவர்க்கஞ் சேரும்படி (கொன்று)செலுத்தியபின்பு, தேரின்மேல் ஆகும்ஆறு -
தேரின் மேல் ஏறும்படி, அருள் - கருணைசெய்வாய்,' என்றான் - என்று
சொன்னான்; (எ-று.)

     அருச்சுனன் வரூதினி கண்டபொழுது, கீழ்நின்றவாறே பொருது அவற்றைத்
தொலைத்துப் பின்பு தேரிலேற நினைத்துக் கண்ணனுக்கு அக்கருத்தைத் தெரிவித்து
அநுமதிபெற்றா னென்க. பி -ம்: கண்டபோது பின் கண்டிலனக்கடவுள்வரவியை.