பக்கம் எண் :

286பாரதம்துரோண பருவம்

     தங்களாலியன்றவளவும் கொடிய விற்போரைச்செய்தனரென்பதாம்.
வரங்கொள்வாளிகள் - (தேவர்களிடம்) வரமாகப்பெற்ற அஸ்திரங்களுமாம்.   (470)

74.-அத்தனைபேரோடும் அருச்சுனனொருத்தன் பொருதல்.

கைதவன்குலக்கன்னிகேள்வனுமொருகணைக்கொருகணையாக
வெய்துவெங்கணையாவையும்விலக்கிமேலிரண்டுநாலெட்டம்பால்
வெய்தினேமியந்தேரொடுகொடிகளும்வில்லும்வாசியும்வீழக்
கொய்துகொய்துபல்பவுரிவந்தனன்விறற்குன்றவில்லியொடொப்பான்.

     (இ-ள்.) (அப்பொழுது), விறல் குன்றம் வில்லியோடு ஒப்பான் -
வலிமையையுடைய மேருமலையை வில்லாகவுடையவனான சிவபிரானோடு
ஒப்பவனாகிய, கை தவன் குலம் கன்னி கேள்வன்உம் - பாண்டியனுடைய
குலத்திலே பிறந்த (சித்திராங்கதையென்ற) பெண்ணுக்குக்கணவனான
அருச்
சுகுனனும்,ஒரு கணைக்கு ஒரு கணை ஆக எய்து - (அப்பகைவர்கள்
தன்மேல் தொடுத்த) அம்பு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றாக எதிரம்புதொடுத்து,
வெம் கணை யாவைஉம் விலக்கி - கொடிய அவர்களம்புகளையெல்லாம்
(தன்மேற்படாதபடி) இடையிலே தடுத்திட்டு,- மேல் - பின்பு, இரண்டு நால் எட்டு
அம்பால் - சிலசில அம்புகளினால், வெய் தின் - விரைவிலே, நேமி அம்
தேரொடு- சக்கரவலிமையுள்ள அழகிய (அவர்களுடைய) தேர்களும்,
கொடிகள்உம் -தேர்த்துவசங்களும், வில்உம்- விற்களும், வாசிஉம் - குதிரைகளும்,
வீழ-(துணிபட்டு) விழும்படி, கொய்து கொய்து - மிகுதியாகத்துணித்து, பல் பவுரி
வந்தனன் - பலமுறை தான் சுழன்றுகொண்டு நின்றான்;

     'இரண்டுநாலெட்டம்பு' என்ற தொடரைப் பண்புத்தொகையாகவும்
உம்மைத்தொகையாகவும் கொண்டு விகற்பித்தால், அறுபத்துநாலென்றும்
நாற்பத்தெட்டென்றும் முப்பத்துநாலென்றும் பதினாறென்றும் பதினாலென்றும்
பலவாறு பொருள்படும். பி-ம்: வெய்தினெய்தவரவரவர்கொடிகளும்.    (471)

75.- பகைவரம்பு அருச்சுனன்மேலும், அருச்சுனனம்பு பகைவர்
மேலும் வருதல்.

தேரி னின்றவர் பாரினின் றவன்மிசை விடுகணைத்
                             திரண்மின்னுக்
காரி னின்றுபா தலமுற வுரகமேற் கனன்றுவீழ் வனபோன்ற
பாரி னின்றவன் றேரினின் றவர்மிசை விடுகணை பாதாலத்
தூரி னின்றுரு மையும்விழுங் குவமென வுரகமே றுவபோன்ற.

     (இ-ள்.) தேரில் நின்றவர் - தேர்களில் நின்ற கிருபன் முதலியோர், பாரில்
நின்றவன்மிசை - (தேரில் ஏறாமல்) தரையில்நின்ற அருச்சுனன் மேல், விடு -
பிரயோகித்த, கணை திரள் - அம்புகளின் தொகுதிகள்,- காரினின்று -
மேகங்களினின்று, பாதாலம்உற - பாதாளலோகத்திலே பொருந்த, உரகம்மேல் -
நாகங்களின்மேல், கனன்று வீழ்வன - கொதித்துக் கொண்டு விழுவனவாகிய,
மின்னு-