78.- அதுகண்டு அருச்சுனன் கண்ணனை வினாவுதல். யோதனத்திலிவனென்கணெதிரின்றளவும்யோசனைக்குமிடை நின்றிலன்முனைந்துசமர், மோதுகைக்குநினைவுண்டுகொலெதிர்ந்துமிகமோகரித்து வருகின்றதுதெரிந்ததிலை, யாதுபெற்றனனெடுஞ்சிலைகொல்வெங்கணைகொலேதமற்றகவ சங்கொலிரதங்கொலென, மாதவற்கிடைவணங்கியிதுவென்கொலென வாசவக் கடவுண்மைந்தனுரைதந்தனனே. |
(இ-ள்.) 'இன்றுஅளவுஉம் - இன்றைத்தினம் வரையிலும், இவன் - இத்துரியோதனன், யோதனத்தில் - யுத்தத்திலே, என் கண் எதிர் - எனது கண்ணுக்கு எதிரிலே, யோசனைக்குஉம் இடைநின்றிலன்-யோசனைத்தூரத் தினுள்ளும்நின்றானில்லை; (அப்படிப்பட்டவன் இப்பொழுது), எதிர்ந்து- (என்னை) எதிர்த்து, மிகமோகரித்து வருகின்றது - மிகவும் வீராவேசங்கொண்டுவருகிறசெயல், முனைந்துசமர் மோதுகைக்கு நினைவு உண்டுகொல். - உக்கிரங்கொண்டு தாக்கிப்போர்செய்தற்கு எண்ணமுண்டானதனாலேயோ? (வேறு எதனாலேயோ?) தெரிந்ததுஇலை - தெரியவில்லை; (அன்றியும்), நெடுஞ் சிலை கொல் - சிறந்த வில்லையோ, வெங் கணை கொல் - கொடியஅம்புகளையோ, ஏதம் அற்ற கவசம் கொல் - அழிவில்லாத கவசத்தையோ, அரதம் கொல் - அப்படிப்பட்ட) தேரையோ, யாது பெற்றனன் - (இவற்றில்) எதனைப் பெற்றனோ?' என - என்று எண்ணி, - வாசவன்கடவுள் மைந்தன் - தேவேந்திரனது குமாரனான அருச்சுனன்,- மாதவற்கு இடைவணங்கி - கண்ணபிரானது முன்னிலையிலே தொழுது,- இது என்கொல் என உரைதந்தனன் - இது என்னகாரணத்தாலோ? என்று வினாவினான்; (எ-று.) அங்ஙனம் துரியோதனன் மிக்கயுத்தாவேசத்தோடு படையெடுத்து வந்ததனைக் கண்ட அருச்சுனன், கண்ணபிரானைத் தொழுது அதன்காரணத்தைக் கேட்டன னென்பதாம். (475) 79.- அதற்குக் கண்ணன் விடைகூறுதல். ஈசனப்பொழுதுணர்ந்தருளிவென்றிவரியேறுவிற்குரியபற் குனனுடன்பழைய, வாசவற்கயன்வழங்குகவசந்துவசமாசுணற்கருளினன் கலசசம்பவனு, மாசுகத்தினிலொழிந்தபலதுங்கமுனையாயுதத்தினிலழிந்திடு வதன்றதனை, நீசெகுத்திடுதியென்றுதுரங்களையுநேர்படக்கடவினன்கதி விதம்படவே. |
(இ-ள்.) ஈசன் - (யாவர்க்குந்) தலைவனான கண்ணபிரான்,- அப்பொழுது-, உணர்ந்தருளி - (நடந்தசெய்தியைத் தனது முற்றுணர்வினால்) அறிந்து,- வென்றி வரிஏறு விற்கு உரிய பற்குனனுடன் - வெற்றியைத் தருகிற கட்டமைந்த சிறந்த (காண்டீவ) வில்லுக்கு உரிய அருச்சுனனுடனே,-'வாசவற்கு அயன் வழங்கு - தேவேந்திரனுக்குப் பிரமன்(முன்பு) கொடுத்த, பழைய கவசம் - பழமையானகவசத்தை, கலச சம்பவன்உம் - துரோண கும்பத்தினின்று தோன்றியவனான துரோணனும், துவசம் மாசுணற்கு - கொடியிற் பெரும்பாம்புவடிவமுடையவனான துரியோ |