மையிற் பிரசித்திபெற்றது. இந்தச்சனி ஸ்தாநப்ரஷ்டம் தநஷயம் மரணம் முதலிய பெருந்தீங்குகளைச் செய்யுமென்பது, நூல்துணிபு. இங்கு, வேறிடத்தில் தனியே அழைத்துப்போய்ச்சூழ்ந்து மிகவருத்துதற்கு ஏற்ற உவமையாம். (40) 41.- இதுமுதல் மூன்று கவிகள் - சஞ்சத்தகர்கள் கூறும் வஞ்சினங்கள். அருளேவடிவுகொண்டனையோனருகங்கமரிலணுகாமல் உருளேரிதத்தருச்சனனையொருநாண்முழுதுந்தகைந்திலமேன் மருளேகொண்டுகுடிவருந்தமனுநூல்குன்றிவழக்கழியப் பொருளேவெஃகுமரசரைப்போற்புகுவேம்யாமுநரகென்றார். |
(இ- ள்.) 'அமரில்- போர்க்களத்தில், அங்கு - எதிர்ப்பக்கத்திலே, அருள்ஏ வடிவுகொண்டு அனையோன் அருகு - கருணையே ஒருபுருட வடிவங்கொண்டாற்போன்ற தருமபுத்திரனது சமீபத்தில், அணுகாமல் - சேரமுடியாதபடி, உருள் ஏர் இரதத்து அருச்சுனனை- சக்கரங்கள் (வலிய) அழகிய தேரையுடைய அருச்சுனனை, ஒரு நாள் முழுதுஉம் தகைந்திலம்ஏல்- நாளையொருதினம் முழுவதிலும் (நாங்கள் தடுத்திடோமாயின்,- குடி மருள் கொண்டு வருந்த - (தம் நாட்டுச்) சனங்கள் (இன்னது செய்வதென்று அறியாமல்) திகைப்பையே கொண்டு வருந்தவும், மனு நூல் வழக்கு குன்றி அழிய - மனுதர்ம சாஸ்திரத்தின் நீதி குறைபட்டு அழியவும், பொருளே வெஃகும்- (குடிகளின்) செல்வத்தையே(கவர) விரும்புகிற, அரசரை போல் -கொடுங்கோன் மன்னர்களைப்போல, யாம்உம் நரகு புகுவேம் - நாங்களும்நரகத்திற்சேர்வோம்,' என்றார்- என்று (திரிகர்த்தன் முதலியோர்) சபதங்செய்தார்கள்;(எ-று.) தருமச்செய்கைகளுக்கும் மறுமைநற்கதிக்குங் காரணமான கருணையை இயல்பில் மிகுதியாகவுடையனென்பார், 'அருளே வடிவு கொண்டனையோன்' என்றார். பகைவரே இங்ஙனம் தருமனைச் சிறப்பித்துக் கூறின ரென்றது கொண்டு, அவனது நற்குணவமைதியை நன்கு உணர்க. (41) 42. | மறனிற்சிறந்தபுயவலியால்வரைபோன்றனிலன்மைந்தனெனப் புறனிற்பானைத்தம்முனிடைப்போகாவண்ணந்தகைந்திலமேல் அறனிற்கொண்டதன்மனையாளமளித்தலத்தினழுதிரங்கப் பிறனிற்றேடும்பெரும்பாவிபெறும்பேறெமக்கும்பேறென்றார். |
(இ -ள்.) 'அனிலன் மைந்தன் என - வாயுவின் குமாரனென்று சொல்லப்பட்டு, புறன் நிற்பானை- (எப்பொழுதும் தருமன்) பின்னே (பாதுகாவலாய்) நிற்பவனான வீமனை, தம்முனிடை போகா வண்ணம் - (அங்ஙனம் துணைசெய்தற்குத்) தமையனான யுதிட்டிரனிடத்துச் செல்லவொட்டாதபடி, மறனில் சிறந்த புயம் வலியால்- பராக்கிரமத்தோடுகூடிச் சிறப்புற்ற (எங்கள்) தோள்களின் வலிமையால், வரைபோன்று- மலை ( குறுக்கிட்டு வழிதடுத்தல்) போல, தகைந்திலம் ஏல்- தடுத்திடோமாயின்,- அறனின் கொண்ட - தருமமாக மணஞ்செய்துகொள்ளப்பட்ட, தன் மனையாள் - தனக்குஉரிய |