பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்291

களைச் செலுத்துபவர்கள், பட்டனர் - இறந்தார்கள்; நெடுந் துவசம் -
நீண்டகொடிகள், மறிந்தன - முறிந்துவிழுந்தன; மோதுதற்கு எதிர் முனைந்தவர் -
தாக்கிப்போர்செய்தற்பொருட்டு அருச்சுனனெதிரில் உக்கிரமாக வந்தவர்களுடைய,
சிரங்கள் - தலைகள், பொழி -(உடைப்பட்டு) வெளிச்சொரிந்த, மூளையின் -
மூளைகளினால், களம் அடங்கலும் - போர்க்களம்முழுவதும், நெகிழ்ந்து - நெகிழ்ச்சி
பெற, அரசர் - பகையரசர்களது, ஆதபத்திரம் - குடைகள், அழிந்தன-;- இவன்
தனுடன் தரத்தொடு சரம்தொட இயைந்தவர் - இவ்வருச்சுனனுடன் வலிமையோடு
(எதிர்த்து) அம்புதொடுக்கத் தொடங்கினவர்கள், ஆர்-யாவர்? [எவருமில்லை];
(எ-று.)

     மதங்கஜம் என்பதற்கு - மதங்கமுனிவனிடத்தினின்றும் (ஆதிகாலத்தில்)
உண்டானதென்று காரணப்பொருள். பி -ம்:- ஆர்சரத்தொடு, ஆதரத்தொடு.   (478)

82.- அருச்சுனன்முன் பகைவீரர்பலர் தோற்றல்.

ஆரமர்க்கண்மிகநொந்திரவிமைந்தனெடிதாகுலத்தொடு
                           மிரிந்தனன்விரிந்தமணி,
வார்கழற்சகுனியுந்துணைவருந்தமுகமாறியிட்டனர்மறிந்தனர்
                                  கலிங்கர்பலர்,
சீருடைக்கிருதனுங்கிருபனும்பழையசேதிவித்தகனுமஞ்
                             சினரொடுங்கினர்கள்,
பூரிபட்டிலனெருங்கியணிநின்றுபொருபூபர்பட்டன
                           ரொழிந்தவர்புறந்தரவே.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) ஆர் அமர்க்கண் - அருமையான அப்போரிலே,- இரவி மைந்தன் -
சூரியகுமாரனான கர்ணன், மிக நொந்து - மிகவும் வருந்தி, நெடிது
ஆகுலத்தொடுஉம் - மிக்க கலக்கத்துடனே, இரிந்தனன் - தோற்றுஓடிப்போனான்;
விரிந்த மணி - ஒளிவீசுகிற இரத்தினங்கள் பதித்த, வார் கழல் - நீண்ட
வீரக்கழலையுடைய, சகுனியும்-, துணைவர்உம்- (அவனது) தம்பிமார்களும், தம்
முகம் மாறி யிட்டனர் - தமதுமுகம்மாறிப் புறங்கொடுத்திட்டார்கள்; கலிங்கர் பலர் -
கலிங்கதேசத்து அரசர்பலரும், மறிந்தனர் - தோற்றுத்திரும்பினார்கள்; சீர் உடை -
சிறப்புடைய, கிருதன்உம் - கிருதவர்மாவும், கிருபன்உம்- கிருபாசாரியனும், பழைய
சேதி வித்தகன்உம்- பழமையான சேதிதேசத்து அரசனும், அஞ்சினர் ஒடுங்கினார்கள்
- பயந்து ஒடுங்கினார்கள்; பூரி - பூரிசிரவாவென்பவன், பட்டிலன் - இறந்தானில்லை
[உயிர்மாத்திரத்தோடு மீண்டானென்றபடி]; நெருங்கி அணி நின்று பொரு பூபர் -
நெருக்கங்கொண்டு படைவகுப்பிலே நின்று போர்செய்த அரசர்களில், பட்டனர்
ஒழிந்தவர் - இறந்தவர்கள்போகஎஞ்சியவரெல்லாம், புறம் தர - முதுகுகொடுக்க,-
(எ -று.)-"தரணிமண்டலதுரந்தரன்முனைந்தனன்" என வருங்கவியோடு தொடரும்.

     இரிந்தனன், முகம்மாறியிட்டனர், மறிந்தனர், அஞ்சினர் ஒடுங்கினர்கள்,
பட்டிலன், புறந்தர என்ற பல சொற்களில் தோற்றுச் செல்லுத லென்ற ஒரு
பொருளேவந்தது, பொருட்பின்வருநிலையணி. கலிங்கம் எழுவிதப்படுதலால்,
கலிங்கர்பலரென்றதென்பர்.                                      (479)