பக்கம் எண் :

292பாரதம்துரோண பருவம்

83.- துரியோதனன் அருச்சுனனை எதிர்த்தல்.

தேவருக்கரசனுந்துகனபந்திகர்தேரிடைப்பணிநெடுங்கொடி
                                   நுடங்கியெழ,
மாவுகைத்துவலவன்றிறலுடன்கடவமாமுடிக்கண்மகுடந்தி
                                 கழவன்றுபெறு,
காவன்மெய்க்கவசமுந்தனிபுனைந்துசிலைகால்வளைத்தவிர்
                     பெரும்பிறைமுகஞ்செய்கணை,
தூவியுற்றெதிர்முனைந்தனனனந்தவொளிதோய்கழற்றரணி
                             மண்டரதுரந்தரனே.

     (இ -ள்.) அனந்தம் ஒளி தோய் - அளவில்லாத பிரகாசம் பொருந்திய,
கழல் -வீரக்கழலையுடைய, தரணி மண்டல துரந்தரன்- பூமண்டலமுழுவதையும்
அரசாள்பவனான துரியோதனன்,- தேவருக்கு அரசன் உந்து - தேவராசனான
இந்திரன் தூண்டிச்செலுத்துகிற, கன பந்தி - மேகராசியை, நிகர் - ஒத்த
[மிகவிரைந்துசெல்லுகிற], தேரிடை- தேரிலே, பணி நெடுங்கொடி -
பாம்புவடிவமெழுதின உயர்ந்தகொடி, நுடங்கி எழ - அசைந்துவிளங்கவும்,-
வலவன்- சாரதி, திறலுடன் - வல்லமையுடனே, மா உகைத்து - குதிரைகளைத்
தூண்டி, கடவ - (தேர்) செலுத்தவும்,- மா முடிக்கண்- இழ- அன்றைத்தினத்தில்
(துரோணாசாரியனிடத்தினின்று தான்) பெற்ற, மெய் காவல் கவசம்உம் -
உடம்பைக்காத்ததற்குஉரிய கவசத்தையும், தனி புனைந்து - ஒப்பில்லாதபடி
தரித்துக்கொண்டு, சிலை கால் வளைத்து - (தனது) வில்லைக் கோடிகள்
வளையச்செய்து,- அவிர் - விளங்குகிற, பெரு - பெரிய, பிறைமுகம்செய்கணை -
அர்த்த சந்திரபாணங்களை, தூவி -மிகுதியாகப் பிரயோகித்துக்கொண்டு, எதிர்
உற்றுமுனைந்தனன் - அருச்சுனனெதிரில் வந்து உக்கிரமாகப் போர்செய்தான்;
(எ -று.)

     இந்திரன் மேகவாகன னாதலால், 'தேவருக்கரச னுந்துகன பந்தி' என்றது.
தேவராஜனால் வச்சிராயுதங்கொண்டு வலிய அடித்து விரைவிற்
செலுத்தப்படுகிறமேகவர்க்கம்போலவிரைந்து செல்லுவது ராஜராஜனது
தேரென்க.இனி. ஏழுதட்டிரதத்துக்குக் கனபந்தி உவமையென்னலுமாம்.  (480)

84.-அருச்சுனனம்புகளினால் துரியோதனன்கவசம் பிளவுபடாமை.

கோமகக்குரிசின்முந்தவிடுமம்புபலகோறொடுத்தெதிர்விலங்கி
                                    விசயன்றனது,
தீமுகக்கணையானந்தநிலையொன்றின்முனைசேரவிட்டனன்
                         விடும்பொழுதினந்தவிறன்,
மாமணிக்கவசமெங்குமுடனொன்றியொருமால்வரைப்
                        புயலினுண்டுளி விழுந்தபரி,
சாமெனத்தலைமழுங்கியவையொன்றுமவனாகமுற்றிலவசைந்
                                திலன சஞ்சலனே.

     (இ-ள்.) (இவ்வாறு), கோமகன் குரிசில் - (அரசர்கட்கெல்லாம்) அரசனான
துரியோதனராசன், முந்த விடும் - முற்படச் செலுத்திய, அம்பு பல - அநேக
பாணங்களை, விசயன் - அருச்சுனன், கோல் தொடுத்து - (தனது) அம்புகளைப்
பிரயோகித்து, எதிர் விலங்கி - எதிரெதிரே தடுத்து, (மற்றும்), தனது தீ முகம்
கணைஅனந்தம் - நெருப்புப்போலக் கொடிய நுனியையுடைய தனது