பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்295

87.- கண்ணன் அதுகண்டு சங்கநாதஞ்செய்தல்.

கோமணிக்குரலுகந்துபுறவின்கணுயர்கோவலர்க்குநடுநின்று
                               முன்வளர்ந்தமுகில்,
காமனுக்கினியதந்தைசமரம்பொருதுகாதன்மைத்துனனயர்ந்த
                                  நிலைகண்டுபல,
தாமரைக்குளொருதிங்களெனவங்குலிகொடாழ்தடக்
                      கைகளிரண்டொருமுகம்பயில,
மாமணிக்குழன்மணங்கமழ்செழும்பவளவாயில்வைத்
                        தனனலந்திகழ்வலம்புரியே.

     (இ-ள்.) கோ - பசுக்களினுடைய, மணி - (கழுத்திலே கட்டப்பட்டுள்ள
அடிக்கும்) மணிகளின், குரல் - ஓசையை, உகந்து- விரும்பிக்கேட்டுக் கொண்டு,
புறவின்கண் - முல்லைநிலத்திலே, உயர் கோவலர்க்கு நடு நின்று - சிறந்த
இடையர்கட்கு நடுவிலே நின்று, முன் - முன்பு[இளமையில்], வளர்ந்த-, முகில் -
மேகம் போன்றவனும், காமனுக்கு இனிய தந்தை- மன்மதனுக்குப் பிரியமுள்ள
பிதாவுமான கண்ணன்,- காதல் மைத்துனன் சமரம் பொருது அயர்ந்த நிலை
கண்டு- ( தனது) அன்புக்கு இடமான மைத்துனனாகிய அருச்சுனன் போர்செய்து
சோர்வடைந்த நிலைமையைப் பார்த்து,- பல தாமரைக்குள் ஒரு திங்கள் என - பல
தாமரைமலர்களின் இடையிலே ஒருசந்திரன்(விளங்கினாற்)போல,- அங்குலி கொள்
தாழ் தட கைகள்இரண்டு - விரல்களின் அழகைக் கொண்ட நீண்ட பெரிய (தனது)
திருக்கைகளிரண்டும், ஒரு முகம் பயில-(தனது) ஒப்பற்றமுகத்திலேபொருந்த,
(அக்கைகளில்), நலம் திகழ் வலம்புரி -சிறப்பு விளங்குகிற (பாஞ்சசன்னிய மென்னுந்
தனது) வலம்புரிச்சங்கத்தை, மா மணி குழல் மணம் கமழ் செழும் பவளம் வாயில்
வைத்தனன் - சிறந்த அழகிய வேய்ங்குழலின் பரிமளம் வீசப்பெற்ற செழிய
பவழம்போல மிகச்சிவந்த (தனது) திருவாயிலே வைத்து ஊதினான்; (எ -று.)

     அருச்சுனன் சோர்ந்து போரொழிந்ததைக் கண்டு, கண்ணபிரான்,
பகையழித்தற்பொருட்டும் அருச்சுனன்சோர்வை ஒழித்தற்பொருட்டும் தனது
திவ்வியசங்கத்தை வாயில்வைத்து முழக்கத் தொடங்கின னென்க,
செந்தாமரைமலர்கள்போன்ற தனது இரண்டுகைகளினாலும் செந்தாமரைமலர்போன்ற
தனது வாயிலே வெள்ளியசங்கத்தை வைத்ததற்கு, பல தாமரைமலர்களினுள்ளே
பொருந்திய வெண்டிங்கள் உவமை யெனக் காண்க. சந்திரன்சமீபித்தபொழுது
தாமரைமலர் குவிதல்போலச் சங்கத்தையெடுத்து வாயில்வைத்துக்கொண்டு
ஊதுகையிற் கைகளும் வாயும் குவிதல் இயல்பு. குழலின் இனிய ஒலி
வெளியெழுந்துவிளங்கப்பெற்ற வாய் என்ற பொருளில் 'குழல்மணங்கமழ் வாய்'
என்றது - ஒருபுலனின்தன்மையை மற்றொருபுலனின்மேல் ஏற்றிக்கூறின
உபசாரவழக்காம். பசுக்கள்களிப்போடு தலையசைத்துக்கொண்டிருக்கையில்
க்ருஷ்ணன்அவற்றினருகிற்செல்லும்பொழுது கழுத்திடுமணியோசையைக் கேட்டுத்
திருவுளமகிழ்ந்தருள்வனென்பார், 'கோமணிக்குரலுகந்து' என்றார். புறவு - காடும்
காடுசார்ந்தஇடமுமாகியமுல்லைநிலம். கண்ணபிரான் முல்லைநிலத்திலே கோகுல
மெனப்படுகிற ஆயர்பாடியில் இடையர்கள் நடுவிலே வளர்ந்த