கையிற் சிறைவைத்து, வருணன் குடையையும் மந்தரகிரிச்சிகரமான இரத்தினபருவதத்தையும் தேவர்கள்தாயான அதிதிதேவியின் குண்டலங்களையுங் கவர்ந்து போனதுமன்றி, இந்திரனுடைய ஐராவதயானையையும் அடித்துக் கொண்டடுபோகச் சமயம்பார்த்திருக்க, அஞ்சி வந்து பணிந்து முறையிட்ட இந்திரனதுவேண்டுகோளினால், கண்ணபிரான் கருடனை வரவழைத்து, பூமிதேவியம்சமானசத்தியபாமையுடன் தான் கருடன்மேலேறி, அந்நகரத்தை அடைந்து சக்கராயுதத்தைப்பிரயோகித்து, அவன்மந்திரியான முரன் முதலிய பல அசுரர்களையும் இறுதியின்அந்நரகாசுரனையும் அறுத்துத் தள்ளியழித் திட்டனனென்பதாம். சக்கரப்படையால்நரகன்தலையைத் துணித்ததாகப் பாகவதம் முதலிய பலநூல்களிலும் கூறியிருக்கவும்,இங்கு 'நரகன்ற னுயிர்கொண்டதொரு வேல்' என்றது, புராணாந்தர கல்பாந்தரகதைப்போக்கைப்பற்றிய தென்க. என்றளவில் - தொகுத்தல். பி - ம்: உந்தும்,உயிர்கொண்றது, மானவச்சிரன். பெற்றனம். (486) 90.- அருச்சுனன் துரியோதனன் கவசத்தை யழித்தல். மாறுபட்டிவளையின்றுயிர்கவர்ந்துவிடின்மாமருத்தின்மகன் வஞ்சினமழிந்துவிடு, மூறுபட்டவெருவும்படியெறிந்தமரினோடுவிப்பதுபெருந் தகைமையென்றுகொடு, நூறுபட்டமகவின்றலைவனெஞ்சமிகநோதகக்கடிதெறிந்த னனெறிந்தளவி, னீறுபட்டதுபருங்கவசம்வந்தவழிநேர்படத்திருகினன் சமரினின்றிலனே. |
(இ-ள்.) 'இவனை- இத்துரியோதனனை, மாறுபட்டு - எதிர்த்து, இன்று - இப்பொழுது, உயிர் கவர்ந்துவிடின் - கொன்றுவிட்டால், மா மருத்தின் மகன் வஞ்சினம் அழிந்துவிடும் - சிறந்த வாயுதேவனுக்குக் குமாரனான வீமனது சபதம் தவறிப்போய்விடும்; (ஆதலால், இவனைக் கொல்லாமல்), ஊறுபட்டு வெருவும்படி- (இவன்) விரணப்பட்டு அஞ்சும்படி, எறிந்து - (இந்த வேலாயுதத்தை இவன்மேல்) வீசி, அமரின் ஒடுவிப்பது - போரிலே (இவனைப்) புறங்கொடுத்தோடும்படிசெய்வது, பெருந் தகைமை - மேலான செய்கையாம்,' என்று கொடு - என்று எண்ணிக்கொண்டு, (அருச்சுனன்), நூறு பட்ட மகவின் தலைவன் நெஞ்சம் மிக நோதக - நூறென்னுந்தொகை பொருந்திய (திருதராட்டிர) புத்திரருள் தலைவனான துரியோதனனது மனம் மிகவும் வருந்தும்படி, கடிது எறிந்தனன்- வேகமாக (வேற்படையை அவன்மேல்) வீசினான்; எறிந்த அளவில் - (அங்ஙனம்) வீசியளவளவிலே, பெருங் கவசம் - சிறந்த அந்தக்கவசமானது, நீறுபட்டது - பொடியாய் விட்டது: (உடனே துரியோதனன்), வந்த வழி நேர்பட திருகினன் -தான்வந்தவழியே நேராகத் திரும்பிப்போய்விட்டான் ; சமரில் நின்றிலன் - போரில்(சிறிதும்) எதிர்நின்றானில்லை; (எ-று.) (487) 91.- அருச்சுனன் அசுவத்தாமனாதியரை வென்று ஒட்டுதல். ஆறு பத்திருப தைம்பதுபெ ரும்பகழி யாக விட்டுவரி வன்சிலையும் வெம்பரிவு, மேறு பைத்தலைநெ டுத்துவச மும்புதிய வேழுதட்டிரத முந்துணிசெய்தங்கருகு, சீறு தற்குவரு திண்குருவின் மைந்தனொடு தேர ருக்கன்மக னுஞ்சகுனியும்பலரும், |
|