99.- சாத்தகி அருச்சுனனாற்றலைத் தருமனுக்குக் கூறுதல். கண்ணுற நில்லார் கடவுளர் முதலாம் விண்ணவ ரேனும் விசயன் வெகுண்டான் மண்ணிலெ திர்க்கு மன்னவர் யாரோ. தண்ணளி நெஞ்சுந் தருமமு மிக்கோய். |
இதுவும் அடுத்த கவியும் - ஒரு தொடர். (இ-ள்.)'தண் அளி நெஞ்சுஉம் - குளிர்ந்த கருணையுள்ள மனமும், தருமம்உம்- அறச்செய்கையும், மிக்கோய் - மிகுந்த யுதிட்டிரனே! விசயன் வெகுண்டால் -அருச்சுனன் கோபங்கொண்டால், கடவுளர் முதல் ஆம் விண்ணவர் ஏன்உம் -தேவர்கள் முதலான வானுலகத்தவர்களேயாயினும், கண் உற நில்லார் - அவன்கண்ணுக்கு எதிராக நிற்கவும் மாட்டார்கள்; (அங்ஙனமிருக்க), மண்ணில் எதிர்க்கும்மன்னவர் யார்ஓ - இப்பூலோகத்தில் (அருச்சுனனை) எதிர்க்கவல்ல அரசர் எவரோ? [எவருமில்லை]; அருச்சுனனை எதிர்க்கவல்லார் தேவரிலுமில்லை யென்றதனால் மனிதரிலில்லை யென்பது எளிதிற் சாதிக்கப்பட்டமையால், இது - தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. கடவுளரென்றது - தேவர்களைக் குறிப்பதென்றும், விண்ணவ ரென்றது - அவரினத்தவரான யக்ஷர் கந்தருவர் வித்தியாதரர் கிந்நரர் கிம்புருஷர்முதலிய கணங்களை யுளப்படுத்திய தென்றும் கொள்க; இனி, 'கடவுளர் முதலாம் விண்ணவர்' - திருமூர்த்திகள் முதலான தேவர்கள் என்றுமாம். ஐந்துகவிகள், 92 - ஆங் கவிபோன்ற கலிவிருத்தங்கள். 100.- சாத்தகி தருமன்கட்டளைப்படி செல்லுதல். என்றறன்மைந்தனேவறலைக்கொண் டன்றொருதேர்மேலதிரதரோடுஞ் சென்றனன்வெய்திற்றேவகிமைந்தன் றுன்றியசெருவிற்றூசிபிளந்தே. |
(இ-ள்.) என்று - என்று (தருமபுத்திரனுக்குத் தைரியஞ்) சொல்லி,- தேவகிமைந்தன் - தேவகியின்மகனான சாத்தகி,- அறன் மைந்தன் ஏவல் தலைக்கொண்டு - தருமபுத்திரனதுகட்டளையைத் தலைமேற்கொண்டு,- அன்று - அப்பொழுது, ஒரு தேர்மேல்- ஒப்பற்றதொரு தேரின்மேலே, அதிரதரோடுஉம் - (பல) அதிரத வீரர்களுடனே,- துன்றிய செருவில் தூசி பிளந்து - நெருங்கிய போரிற்(பகைவரது) முற்படையை (த் தனது ஆயுதங்களினாற்) பிளந்துகொண்டு, வெய்தினசென்றனன் - விரைவாகச்சென்றான்; தேவகி - வசுதேவனது மனைவி; கண்ணனைப்பெற்ற தாய். சத்தியகனதுபுத்திரனான சாத்தகியை 'தேவகிமைந்தன்' என்றது- நற்குணநற்செய்கைகளிற் சிறந்த அத்தேவகி, தனது அருமைத் திருமகனான கண்ணனிடம் பேரன்புடையவனும் அவனுக்குத் தம்பிமுறையாகின்றவனுமான சாத்தகியினிடம் புத்திரவாஞ்சை |