பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்307

இருவர்உம்-, தம் தேர் சிலை யாவைஉம் இழந்தார்-(தங்களுடைய) தேர் வில்
முதலியஎல்லாவற்றையும் (அப்போரில்எதிரம்புகளால்) இழந்தார்கள்; இருவரும்-,
பெரும்பொழுது அமர் திளைத்தனர்-நெடு நேரம் இடைவிடாது போர்செய்து,
இளைத்தார்-, (எ - று.)

     துரோணன் விடாது போர்தொடங்கியதனாற் சாத்தகியும் எதிரம்பு
தொடுக்கவேண்டியதாயிற்று பி-ம்: பகழிகளெதிரெதிர். அமர்விளைத்தனர்.  (504)

108.- சாத்தகி இளைப்புத்தீர்ந்து அப்பாற்செல்லுதல்.

இளைத்துவேதியனிற்பமன்னவனிளைப்பாறி
யுளைத்தடம்பரித்தேருமற்றொன்றுமேல்கொண்டு
வளைத்தவில்லொடுமன்னணிகலக்கிமேல்வருவோன்
கிளைத்தபல்பெருங்கிரணனில்வயங்கொளிகிளர்ந்தான்.

     (இ-ள்.) வேதியன்-முனிவனாகிய துரோணன், இளைத்து நிற்ப-சோர்ந்துநிற்
கையில்,-மன்னவன் - அரசனாகிய சாத்தகி, இளைப்பு ஆறி - சோர்வுதீர்ந்து,
உளை தட பரிதேர்உம் மற்று ஒன்று மேல்கொண்டு - பிடரிமயிரையுடைய
பெரியகுதிரைகள்பூட்டிய வேறொருதேரி லேறி, வளைத்த வில்லொடுஉம்-(கையில்)
வளைத்துப்பிடித்த(வேறொரு) வில்லுடனே, மன் அணி கலக்கி -  பெரிய
(பகைவர்)சேனையைக்கலங்கச்செய்துகொண்டு, மேல்வருவோன் - மேலிடத்து
வருபவனாய்,-கிளைத்த பல்பெருங்கிரணனில் - நிறைந்துபெருகிய அநேகமான
பெரியஒளிகளையுடைய சூரியன்போல, வயங்கு ஒளி கிளர்ந்தான் - (இயல்பிலே)
விளங்குகிற தேககாந்தி மிக்குத்தோன்றினான்; (எ - று.)

     கிரகணம் பிடிக்கப்பட்ட சூரியன் அதனினின்று மீண்டபின்பு மிக்குவிளங்கி
இருளையழித்துக்கொண்டு மேற்செல்லுமாறுபோல, இளைப்படைந்த சாத்தகி
அவ்விளைப்புத்தணிந்தவுடன் பகைவர் சேனையைக் கலக்கிக்கொண்டு
விசேஷகாந்திவிளங்க மேற்சென்றன னென்று கருத்துக்கொள்க.           (505)

109.-துச்சாசனன் சேனையுடன் சாத்தகியை யெதிர்த்துத் தோற்றல்.

யானைதேர்பரிவீரரீரொன்பதுநிலத்துத்
தானையோடுதுச்சாதனனடுத்தெதிர்தடுத்தான்
சோனைமேகமொத்திவன்பொழிதொடைகளாற்கலங்கிப்
பூனைபோலழிந்திருபதஞ்சிவந்திடப்போனான்.

     (இ-ள்.) யானை-யானைகளும், தேர்-தேர்களும், பரி-குதிரைகளும், வீரர் -
காலாள்வீரர்களும் ஆகிய ஈர்ஒன்பது நிலத்து தானையோடு - பதினெட்டுத்
தேயங்களினின்றும் வந்த சதுரங்க சேனைகளுடனே, துச்சாதனன்-, எதிர் அடுத்து-
எதிரிலேவந்து நெருங்கி, தடுத்தான்- (சாத்தகியைத்) தடுத்து, சோனை மேகம்
ஓத்துஇவன் பொழி தொடைகளால் கலங்கி - விடாப்பெருமழை பொழியும்
மேகம்போன்றுஇச்சாத்தகி சொரிந்த அம்புகளினால் உறுதிநிலைகலங்கி,
அழிந்து-தோற்று, இரு பதம்சிவந்திட -