(தனது) இரண்டுகால்களும் சிவக்க, பூனைபோல் போனான் - பூனைபோல (ஒடுங்கித்தந்திரமாகத் தப்பியோடி)ச் சென்றான்;(எ - று.) 110.-சாத்தகி பலரையும் வென்று அருச்சுனனைச் சார்தல். இடையில்வந்துவந்தெதிர்த்தவர்யாரையுங்கடந்து புடைவருந்தனதனீகினிநிழலெனப்போதத் தடையறும்படிதருக்குடன்சார்பெரும்பருவ விடைநடந்தெனநடந்தனன்விசயனின்றுழியே. |
(இ-ள்.) (இங்ஙனந் துச்சாதனனை வென்ற சாத்தகி),- இடையில் வந்து வந்துஎதிர்த்தவர் யாரைஉம் கடந்து - நடுவிலே மிகுதியாகவந்து எதிர்த்தவர்களெல்லாரையும் வென்று,-புடை வரும் தனது அனீகினி நிழல் என போத - பக்கங்களிலேவருகிற தனதுசேனை நிழல்போல விடாமல்தொடந்துவர,- தடை அறும்படி-தடையில்லாமல், தருக்குடன் சார் பெரும் பருவம் விடை நடந்து என - களிப்போடு பொருந்திய சிறந்த காளைப்பருவத்தையுடைய எருது சென்றாற்போல, விசயன் நின்ற உழிநடந்தனன்- அருச்சுனனுள்ள இடத்திற் சென்றான்; (எ - று.)-அநீகம் - குதிரை முதலியவற்றின் கூட்டம்:அதனையுடையது அநீகிநீ. (507) 111, 112. -இவ்விரண்டுகவியும்-குளகம்:பின்பு தருமன் வீமனையும் ஏவுதலைத் தெரிவிக்கும். பின்னருங்கொடிமுரசுடைப்பெருந்தகைவருந்தி முன்னநின்றவாயுவின்மகன்முகனுறநோக்கி மன்னரெண்படுவடுரூதினிவாரியினாப்ப ணென்னராயினரும்பியுமெம்பெருமானும்.தகலருந்திறற்சாத்திகிதன்னையும்விடுத்தேம் பகலுமேற்றிசைப்பட்டதுபாஞ்சசன்னியமும் புகலுகின்றதுபோர்முகத்ததிர்குரல்பொம்ம விகல்வலம்படநீயுமங்கேகுதியென்றான். |
(இ-ள்.) (111) பின்னர்உம் - (சாத்தகியை யனுப்பின) பின்பும்,-கொடி முரசுஉடை பெருந்தகை - துவசத்திலே முரசவாத்தியவடிவத்தையுடைய பெருமைக்குணமுள்ளவனான தருமபுத்திரன்,-வருந்தி -(அருச்சுனன் விஷயத்திலுண்டான சங்கையால் முன்போல) வருத்தமடைந்து,-முன்னம் நின்ற வாயுவின் மகன் முகன் உற நோக்கி-(தன்) எதிரில்நின்ற வாயுகுமாரானான வீமசேனனுடைய முகத்தை அன்புபொருந்தப் பார்த்து,-'மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண் - அரசர்களுடைய பெருந்தொகைபெற்ற சேனையாகிய கடலின் நடுவிலே, உம்பிஉம் எம்பெருமான்உம் - உனது தம்பியான அருச்சுனனும் எமது தலைவனான கண்ணபிரானும், என்னர் ஆயினர் - எத்தன்மையரானார்களோ? (112) தகல் அருந்திறல் சாத்தகிதன்னைஉம் விடுத்தேம்-தகுதியுள்ள அருமையான வலிமையையுடைய சாத்தகியையும் யாம் அனுப்பினோம்: பகல்உம் மேல்திசை பட்டது - சூரியனும் |