கும் நாளையதினத்தில், முனி போரின்- கோபித்துச் செய்யும் யுத்தத்தில், மறித்திலம்ஏல்- (தருமனருகிற் சேராதபடி அவர்களைத்) தடுத்திடோமாயின்,- எ நன்றியின் உம்- எல்லாத்தருமங்களுள்ளும், செய் நன்றி - (தமக்குப் பிறர்) செய்த உபகாரத்தை, கொன்றார் தமக்கு- அழித்தபாவிகளுக்கு, யாம்உம் கூட்டு - நாங்களும்இனமாவோம்,' என்றார் - என்றும் (அவர்கள் சபதஞ்) செய்தார்கள்: (எ - று.) பசுவதை, சிசுவதை, பிராமணவதை முதலியபெரும்பாதகங்களைச் செய்தார்க்காயினும் அப்பாவத்தினின்று நீங்கத்தக்க பிராயச் சித்தங்கள் உண்டு; செய்ந்நன்றிமறந்தவனுக்கோ எவிவிதபரிகாரமுமில்லை என்பது, நூல் துணிபு. " எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றி கொன்றமகற்கு" என்ற திருக்குறளையும் காண்க. இனி, தாள் தடக்கை - முழங்காலளவும் நீண்ட பெரிய கை [ஆஜானுபாகு] எனினுமாம்; இது - உத்தம விலக்கணம். அன்றி, வலிய கால்களையும் பெரியகைகளையு முடைய என்றலு மொன்று. 'சூரியனுதிக்கிறநாளை' என்றது, உலகவழக்கு; ஆனது பற்றி,' என்று ஆம் நாளை' என்றார். எல் - ஒளி; அதனையுடையது என்று எனச் சூரியனுக்குக் காரணப்பெயர். 'மறித்திலமே யென்றானாளை' எனப் பாடங்கொண்டு, 'மறித்திலமே யென்றால்' என்று பதம் பிரித்து உரைப்பது தகுதியாம். நன்றி கொல்லுதல் - நன்றியை மறத்தலும், கைம்மாறு செய்யாமையும், தீங்கு செய்தலும். குரு என்பவன் - சந்திரகுலத்தில் பிரசித்திபெற்ற ஓரரசன்; அவனால், அக்குலம் குருகுல மென்றும், அந்நாடு குருநாடு என்றம் குருக்ஷேத்திர மென்றும், அக்குலத்திற்பிறந்தவர் கௌரவரென்றுங் கூறப்படுதல் காண்க. கன்றால் விளவின்கனியுதிர்த்த கதை: கம்சனாலேவப்பட்ட கபித்தாசுரன், விளாமரத்தின்வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும் பொழுது மேல்விழுந்து கொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனையறிந்து, கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னைமுட்டிக் கொல்லும் பொருட்டுக் கன்றின்வடிவங்கொண்டு தான் மேய்க்குங் கன்றுகளோடு கலந்திருந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேலெறிய, இருவரும் இறந்து தமது அசுரவடிவத்துடனே விழுந்திட்டனரென்பதாம். இதனால், பகைகொண்டு பகையையழித்த கண்ணனது விசித்திர சக்தி விளங்கும் (43) 44.- வஞ்சினமுரைத்த வேந்தர்க்குச் சிறப்புச்செய்து ஆசிரியனையும் விடுத்துத் துரியோதனன் தன்கோயி லடைதல். இவ்வாறுரைத்தவேந்தர்தமக்கெய்துஞ்சிறப்புச்செய்தகற்றிக் கைவார்சாபமுனிவரன்றன்கழற்கால்வணங்கியேகுகெனச் செவ்வாய்மலர்ந்துமானத்தாற்றிறலால்வாழ்வாற்செகத்தொருவர் ஒவ்வாவரசன்றன்கோயிலடைந்தான்விபுதர்க்கொப்பானே. |
(இ -ள்.) மானத்தால் - பெருமையினாலும், திறலால்- வலிமையினாலும், வாழ்வால் - செல்வாழ்க்கையாலும், செகத்து ஒருவர் |