பக்கம் எண் :

310பாரதம்துரோண பருவம்

     (குறிப்புரை,) கலிங்கரும் ***கொப்பளதேசத்தவரும் முதலானவர்களாய்க்
குறுக்கிட்டவர்களை (இறந்து) வீரசுவர்க்கமடையும்படி ஒழித்துக்கொண்டு, (வீமன்),
அப்பால் (வியூகத்தினுள்)விரைவாசகச்சென்றான்; (எ - று.)

115.-துரியோதனன்தம்பியர்பலர் வீமனை இடைஇடையே தடுத்தல்.

உரங்கவெங்கொடியுயர்த்தகாவலன்றனக்கிளையோர்
துரங்கமாதிகொள்பலபெருஞ்சேனையிற்சூழ்ந்தோர்
இரங்குமாழ்கடல்பேருகவிறுதியிலெறியுந்
தரங்கநேரெனவிடையிடைதனித்தனிதகைந்தார்.

     (இ-ள்.) துரங்கம் ஆதி கொள் - குதிரைமுதலியவற்றைக் கொண்ட,
பலபெருஞ்சேனையின்-பல பெரியசேனைகளினால், சூழ்ந்தோர்,
சூழப்பட்டவர்களாகிய, வெம்உரங்கம் கொடி உயர்த்த காவலன் தனக்கு
இளையோர்-பயங்கரமானபாம்புக்கொடியை உயர நிறுத்தின துரியோதனராசனது
தம்பியர்,-இரங்கும் ஆழ்கடல் பேருகம் இறுதியில் எறியும் தரங்கம்  நேர் என-
ஒலிக்கின்ற  ஆழ்ந்த கடல்மகாகற்பமுடிவுகாலத்தில் (உலகையழிக்குமாறு) வீசுகிற
அலைகள் (தமக்கு)ஒப்பென்னும்படி, இடை இடை, தனி தனி தகைந்தார் -
(வீமசேனனை) நடுவிலேநடுவிலே தனித்தனியே தடுத்தார்கள் (எ-று.)-உரங்கம்-
உரகம் என்பதன்விகாரம்.'பேருகவிறுதி' என்பது-பிரமனது ஆயுளின்முடிவை;
ஊழிக்காலத்துப்பொங்கியெழும்பெருங்கடலினலைகளை உவமை கூறியதனால்,
அவர்களுடைய சேனைப்பெருக்கம்விளங்கும்.                     (512)

116.- அவர்கள் வீமன்மேற் படைக்கலம் வழங்குதல்.

முல்லைமல்லிகையுற்பலங்குமுதமாமுளரி
பல்லம்வாளயில்சூலமென்பனமுதற்பகழி
யெல்லையில்லனவிடையறாவகைதொடுத்தெதிர்ந்தார்
வில்விதங்களில்யாவையும்பயின்றகைவிறலோர்.

     (இ-ள்.) வில் விதங்களில் - விற்போர் வகைகளிலே, யாவைஉம் பயின்ற -
எல்லாவற்றையும் பழகித்தேர்ந்த, கை விறலோர்-கைத்திறமையை
யுடையவர்களானஅத்துரியோதனனதுதம்பிமார்,-முல்லை மல்லிகை உற்பலம்
குமுதம் மா முளரி -முல்லை முதலியவற்றின் அரும்புபோன்ற முனையையுடைய
அம்புகளும், பல்லம் -பல்லமென்னும் அம்புவிசேடங்களும், வாள் - வாளும், 
அயில் - வேலும், சூலம் -சூலமும், என்பன முதல்- என்கிற இவை முதலான,
பகழி - ஆயுதங்களை, எல்லைஇல்லன-அளவில்லாதனவாக, இடை அறா வகை
தொடுத்து - இடைவிடாமல்மேன்மேற் பிரயோகித்துக்கொண்டு, எதிர்ந்தார் -
(வீமனை) எதிரிட்டார்கள்;

     'முல்லை' முதலியன-அந்தந்தஅரும்புபோலக் கூர்நுனி யமைக்கப்பட்ட
அம்புகளை யுணர்த்தின, முளரி-, "தாமரைத்தலையவாளி" என்றார் கம்பரும்;
இது - வடமொழியில் 'நாளீகாஸ்த்ரம்' எனவும், தமிழில் 'மொட்டம்பு' எனவும்படும்.
பகழி என்ற அம்