பக்கம் எண் :

316பாரதம்துரோண பருவம்

களையுடைய, நெடுங்கடல் - பெரியகடலினால், ஊழிஉம் பெயர்கின்றது எனும்
படி -கற்பம் மாறுகிறதென்று  சொல்லும்படி, ஓதை விஞ்ச - ஆரவாரம்
அதிகப்பட,-உடன்று -  பகைத்து, சினம் கொடு -  கோபங்கொண்டு, எண்
திசைஉம் -எட்டுத்திக்குகளிலும், படை சூழ - சேனைகள் சூழ வந்து வளைந்தனர்-வந்து(வீமனைச்) சூழ்ந்துகொண்டார்கள்;-(எ - று.)

     பிரளயப்பெருங்கடலின் பேரொலிக்கு ஒப்பான ஆரவாரத்தைச்செய்துகொண்டு
கொடிய பலவீரர்கள் சேனைகளோடும் வீமனை ஒருங்குசூழ்ந்தன ரென்க. அந்தகன்
- (பிராணிகட்கெல்லாம்) அழிவைச் செய்பவனென்று பொருள், கடலூழியும் -
கடலும்ஊழியும் என்று கூறுவாரு முளர்.                             (522)

126.-பூரியையும் அவந்திராசனையும் வீமன் வெல்லுதல்.

காரிலைந்துமடங்குபுலம்பின காகளஞ்சுரிசங்குமுழங்கின
பேரிபம்பினகொம்புதழங்கின பேரியங்கள்பெயர்ந்துகறங்கின
பூரியும்பொருதஞ்சியவந்தியர் பூபனும்புறமன்றிடவெங்கணை
மாரிசிந்திமலைந்தனன்வெஞ்சின மாறமுன்பவனன்றிருமைந்தனே.

     (இ-ள்.) (அப்பொழுது),-காரில் ஐந்து மடங்கு -  மேகங்களினும் ஐந்துபங்கு
அதிகமாக, காகளம் - எக்காள மென்னும் ஊது கருவி, புலம்பின - ஒலித்தன; சுரி
சங்கு-உட்சுழிந்த சங்கவாத்தியங்கள், முழங்கின - ஒலித்தன;  பேரி - பேரிகைகள்,
பம்பின-ஒலித்தன; கொம்பு - ஊதுகொம்புகள், தழங்கின - ஒலித்தன;  பேர்
இயங்கள் - பெரிய (மற்றும்பல) வாத்தியங்கள், பெயர்ந்து கறங்கின-
கிளர்ந்துஒலித்தன; பூரிஉம் - பூரி என்னும் அரசனும், அவந்தியர் பூபன்உம் -
அவந்திதேசத்தவரரசனும், பொருது-(தன்னுடன்) போர்செய்து, அஞ்சி - பயந்து,
அன்று புறம் இட - அப்பொழுதே முதுகுகொடுக்கும்படி, பவனன் திரு மைந்தன்-
வாயுவினது சிறந்தகுமாரனான வீமன், வெம் கணை மாரி சிந்தி - கொடிய
அம்புமழையைப்பொழிந்து, வெம் சினம் மாற - (தனது) கடுங்கோபம் அடங்க,
முன்- எதிர்நின்று, மலைந்தனன்-போர்செய்தான்;

     பொருட்பின்வருநிலையணி,'
'புலம்பல்' என்பது தொனித்த லென்னும்
பொருளதாதலை "முழங்கல் தழங்கல் கத்தல் புலம்பல்" என்ற பிங்கலந்தையினாலும்
உணர்க. பூபன்-பூமியைக் காப்பவன்; வடசொல்.                        (523)

127.-வீமனுடன் கர்ணன் போர்செய்யத் தொடங்குதல்.

மாசுணந்தலைநொந்துசுழன்றன மாதிரங்கண்மருண்டுகலங்கின
வீசுதெண்டிரையம்புவெதும்பின மேலையண்டமும்விண்டுபகிர்ந்தன
பூசலின்கணுடன்றுகழன்றவர் போர்தொடங்கநினைந்துபுகுந்தனர்
ஆசுகன்றிருமைந்தனுடன்சுட ராதபன்குமரன்சமர்முந்தவே.

     (இ-ள்.) ஆசுகன் திரு மைந்தனுடன் - வாயுவினது சிறந்த குமாரனான
வீமனோடு, சுடர் ஆதபன் குமரன் - பிரகாசத்தை