பக்கம் எண் :

320பாரதம்துரோண பருவம்

     மகாபலசாலிகளான மதுகைடபரென்ற அசுரரிருவரும், ஆதி
சிருஷ்டிகாலத்தில்தோன்றியவர்; இவர்கள் செருக்கிக்கடலிலிழிந்து திருமாலை
யெதிர்த்துப் பெரும்போர்புரிய இவர்களை அப்பெருமான் தனதுதுடைகளினால்
இடுக்கிக் கீழேதள்ளிக் கால்களால் மிதித்துத் துவைத்துக் கொன்றான். (இவர்களது
உடம்பினின்று வெளிப்பட்ட கொழுப்பினால் நனைந்தமைபற்றி, பூமிக்கு 'மேதிநீ'
என்று ஒருபெயர் வழங்கும்.)                                    (529)

133.-பின்பு கர்ணன் வீமனைக்கொல்வதாகச் சபதஞ் செய்தல்.

தனதுகண்ணெதிரிருவருமழிந்தபின்றபனன்மைந்தனுநொந்து
கனதுரங்கமமுடுகுதேர்வயப்படைக்காவலன்முகநோக்கி
யுனதுதம்பியரிருவரைச்செற்றவன்முடித்தலையொடியேனேல்
எனதுபுன்றலையவன்கையிற்கொடுப்பானென்றேறினானொரு
                                      தேர்மேல்.

     (இ-ள்.) தனது கண் எதிர் - தன்னுடைய கண்களுக்கு எதிரிலே,
இருவர்உம்அழிந்த பின் - (தனக்குத் துணையாகவந்த) அத்துரியோதனன் தம்பிய
ரிரண்டுபேரும் (வீமனால்) இறந்தவுடனே, தபனன் மைந்தன்உம் - சூரியகுமாரனான
கர்ணனும், நொந்து - வருந்தி, கன துரங்கமம் முடுகு தேர் வய படை காவலன்
முகம் நோக்கி - சிறந்த குதிரைகள் விரைவாக நடத்தப்பெற்ற தேரையும் வலிய
சேனைகளையுமுடைய துரியோதனராசனது முகத்தைப் பார்த்து, 'உனதுதம்பியர்
இருவரை செற்றவன் முடி  தலைஒடியேன்ஏல் - உன்னுடைய தம்பிமா
ரிரண்டுபேரை (என்முன்னிலையில்) அழித்திட்டவனான வீமனது கிரீடந் தரித்த
தலையை (நான் இப்பொழுது) துணித்திடாமற் போவேனானால், எனது புன்தலை
அவன் கையில் கொடுப்பன்-என்னுடைய அற்பமான தலையை அவ்வீமனது
கையிலே யிழப்பேன்,' என்று-என்று சபதங் கூறி, ஒரு தேர்மேல் ஏறினான்-;
(எ -று.)

     இப்பொழுது நான் எதிர்த்துப்பொருது வீமனைக்கொல்வேன்: அங்ஙனம்
இயலாதாயின், அவன்கையாற் கொல்லப்படுவேன்; இவ்விரண்டிலொன்று தவறேன்
என்று பிரதிஜ்ஞைசெய்தனன் கர்ணனென்பதாம். அருச்சுனனை யொழிந்த
மற்றைப்பாண்டவர் நால்வரையுங்கொல்வதில்லை என்று தாய்க்கு வாக்குத்தத்தஞ்
செய்துள்ளதற்கு மாறாகக் கர்ணன் இப்பொழுது வீமனைத்தான் கொல்வதாகச்
சபதஞ்செய்வது, "எல்லாம், வெகுண்டார்முற்றோன்றாக்கெடும்" என்றபடி
அனைத்தையும் மறக்கச்செய்கிற கோபவேசத்தின்காரியம்.              (530)

134.- கர்ணன் போர்மூண்டு வீமனெதிரில் வீரவாதஞ்செய்தல்.

குனித்தசாபமுந்தொடுத்தசாயகங்களுங்குலவுமால்வரைத்தோளுந்
துனித்தநெஞ்சமுமுரிந்தனபுருவமுமெரிந்தகண்களுந்தோன்றப்
பனித்ததேரொடும்போருடன்றெழுதரும்பரிதியின்விரைந்தெய்தி
யினித்தராதலமுரககேதனற்கெனவிளவலோடிகல்செய்தான்.

     (இ-ள்.) குனித்த சாபம்உம் - வளைத்த வில்லும், தொடுத்த சாயகங்கள்உம் -
எய்கிற அம்புகளும், குலவு மால் வரை தோள்