பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்323

     கர்ணன் எதிர்த்துவருகிற உக்கிரத்தன்மைபற்றி அவனைத் தான்
கொல்லவேண்டுவது அவசியமாயினும், தனதுதம்பியான அருச்சுனனது சபதத்தைப்
பொய்யாக்காமைப்பொருட்டு அங்ஙன்கொல்லாதுவெல்லுதல்
மாத்திரஞ்செய்துஉயிரோடுவிடவேண்டியிருத்தலின், வீமன் இங்ஙன்
கூறினான். இனி, வநவாச அஜ்ஞாத வாசங் கடந்தபின்பு கொடுப்பதாக
உறுதிகூறியுள்ள அரசாட்சியை அங்ஙனங்கொடாமலொழிந்து தொடங்கிச்செய்யும்
போர் அக்கிரமப்போரே யாதலால், அதுபற்றி, 'ஆறல்வெஞ்சமம்' என்றதாகவுங்
கொள்ளலாம். அருச்சுனன், துரியோதனனுடைய துஷ்டச்செயலுக்குப்
பெருந்துணையாய் நின்ற கர்ணனைப் போரிற் கொல்வே னென்று சபதஞ்
செய்துள்ளதனை, கீழ்ச் சூதுபோர்ச் சருக்கத்திற் காண்க.              (533)

137.-அப்போரிற் கர்ணன் வீமனைத் தேரழித்தல்.

இலக்கமற்றவெங்கணைகளாலிருவருமெதிரெதிரமராடிக்
கலக்கமுற்றபின்றினகரன்மதலையக்காற்றின்மைந்தனைச்சீறி
யலக்கணுற்றிடப்பலபெருங்கணைதொடுத்தவன்விடுங்கணையாவும்
விலக்கிவச்சிரத்தேரும்வெம்புரவியும்விறற்றுவசமும்வீழ்த்தான்.

     (இ-ள்.) இருவர்உம்-(வீமன் கர்ணன் என்ற) இரண்டுபேரும், இலக்கம்
அற்றவெம் கணைகளால்-எண்ணிக்கையில்லாத கொடிய அம்புகளினால், எதிர்
எதிர்அமர் ஆடி-ஒருவர்க்கொருவர் எதிரிலேபோரை மிகுதியாகச்செய்து, கலக்கம்
உற்றபின்-இளைப்படைந்த பின்பு, தினகரன் மதலை-கர்ணன், அ காற்றின்
மைந்தனை-அவ்வீமனை, சீறி-மிகுதியாகக் கோபித்து, அலக்கண் உற்றிட-(அவன்)
துன்பமடையும்படி, பலபெருங் கணைதொடுத்து-அநேகம் சிறந்த பாணங்களை
(அவன்மேற்)பிரயோகித்து,அவன் விடும்கணை யாஉம் விலக்கி-அவன்
(தன்மேல்)விடும் அம்புகளையெல்லாம் (தனது எதிரம்புகளினால்) தடுத்து,
(அவ்வீமனுடைய) வச்சிரம் தேர்உம்-வச்சிரம்போல் உறுதியான தேரையும்,வெம்
புரவிஉம்-வேகமுள்ள குதிரைகளையும், விறல் துவசம்உம்-வெற்றிக்கு அறிகுறியான
(சிங்கக்) கொடியையும், வீழ்த்தான்-பிளந்துதள்ளினான்; (எ - று.)

     அலக்கண்-சஞ்சலப்பட்ட கண்களையுடைமை என்ற காரியத்தின் பெயர்
காரணமான துன்பத்தின்மேல் நிற்கும்; அலம் - சஞ்சலம்.              (534)

138.- வேலெறிந்த கர்ணன்மேல் வீமன் கதைவீசுதல்.

காலினால்வருங்காலின்மைந்தனைக்கடுங்கதிரவன்றிருமைந்தன்
வேலினாலடர்த்தெறிதலுமெறிந்தசெவ்வேலிருதுணியாகக்
கோலினாலவன்றுணித்துமீளவுமழல்கொளுத்தியதொருதண்டு
நாலினான்முழமுடையதுகன்னன்மேலெறிந்தனனகைசெய்தான்.

     (இ-ள்.) காலினால் வரும் -(தேரிழந்ததனாற்) கால்களால் நடந்துமேல்
வருகிற,காலின் மைந்தனை - வாயுபுத்திரனான வீமனை, கடுங் கதிரவன்
திருமைந்தன் -உஷ்ணமானகிரணங்களையுடைய