இதுமுதற் பன்னிரண்டு கவிகள்-பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். (540) 144.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: மற்றும் வீமன் விகர்ணனை நோக்கிக் கூறுவன. சுடுவுரைக்கனலன்னதுச்சாதனன் வடுவுரைக்கவுமன்னுறைமன்றிடை நடுவுரைக்குநன்னுவுடையாயுனைக் கொடுவுரைக்கணையேவினுங்கொல்லுமோ. |
(இ-ள்.) கனல் அன்ன-நெருப்பையொத்த, சுடு உரை- கொடுஞ்சொற்களையுடைய, துச்சாதனன்-, மன் உறை மன்றுஇடை - அரசர்கள் தங்கியசபையின் நடுவிலே, வடு உரைக்கஉம்-நிந்தையான வார்த்தைகளைக்கூறவும், நடு உரைக்கும் - (அங்கு) நடுவு நிலைமையாகப் பேசிய, நல் நாஉடையாய் - சிறந்தநாக்கையுடையவனே! கொடு உரை கணை ஏவின்உம்-கொடியசாபச் சொற்போலத்தவறாமல் அழிக்கவல்ல அம்புகளை (நான் உன்மேற்) பிரயோகித்தாலும், உனைகொல்லும்ஓ- (அவை) உன்னைக் கொல்லுமோ; நான் கொடியஅம்புகளை உன்மேல் ஏவி உன்னைக் கொல்ல மாட்டேனென்ற பொருளை, துணிவுதோன்ற இங்ஙனம் அம்பின் மேல் வைத்துக் கூறின னென்க. முனிவரதுவாயினின்று வருங்கோபச்சொல் தவறாமல் அழிவுசெய்தலில் அம்புக்கு உவமைகூறப்படுதலை, "வைவனமுனிவர் சொல்லனைய வாளிகள்" எனக் கம்பராமயணத்திலுங் காண்க. சூதுபோர்ச்சருக்கத்தில் "தன்னேரில்லா நெறித்தருமன்தனவென் றுரைக்கத் தக்கவெலாம், முன்னே தோற்றுத் தங்களையு முறையேதோற்றுமுடிவுற்றான், சொன்னேருரைக்குத்தான்பிறர்க்குத் தொண்டாய்விட்டுச்சுரிகுழலைப், பின்னே தோற்கவுரிமையினாற் பெறுமோ வென்றுபேசீரே" என்பது, நிஷ்பக்ஷபாதமாக விகர்ணன் கூறிய நீதிமொழி. (541) 145. | பாரறிந்தபழிக்குட்படாதநின் னேரறிந்தும்பொரநெஞ்சியையுமோ போரறிந்துபொருகவென்றானெடுஞ் சீரறிந்தவர்செய்ந்நன்றிகொல்வரோ. |
(இ-ள்.) பார் அறிந்த பழிக்கு-உலகத்தார் அறிந்த குற்றத்துக்கு, உள் படாத-உள்ளாகாத, நின்-உனது, நேர்-நீதிநெறியை, அறிந்துஉம் - தெரிந்திருந்தும், நெஞ்சு -(எனது) மனம், பொர இயையும்ஓ-(உன்னோடு) போர்செய்யச் சம்மதிக்குமோ?(ஆதலால்), அறிந்து போர் பொருக,- (வேறு யாருடனாயினும்) ஆராய்ந்துபோர்செய்வாயாக, என்றான் - என்று (விகர்ணனை நோக்கி வீமன்) கூறினான்:நெடுஞ் சீர் அறிந்தவர் செய் நன்றி கொல்வர்ஓ - சிறந்த நல்லெழுக்கமுறைமையையுணர்ந்தவர் (தமக்குப் பிறர்) செய்த நன்மையை மறந்து அவர்க்குத் தீங்கு |