பக்கம் எண் :

328பாரதம்துரோண பருவம்

செய்வரோ? [செய்யார் என்றபடி]; (எ - று.)-என்று வீமன் கூறினா னென்க.

     'துரியோதனன் முதலியோர்போ லன்றிச் சபையில் நியாயம் பேசின
விகர்ணன்விஷயத்தில் வீமன் நன்றிமறவாமையோடிருந்தன னாதலாற்போர்செய்யே
னென்றான்'என்ற சிறப்புப்பொருளை, சிறந்த நீதிமுறையை யுணர்ந்தவர் செய்ந்நன்றி
சிதைப்பரோஎன்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கியது - வேற்றுப்பொருள்
வைப்பணி -
பார்என்பது -  உலகமென்பதுபோல உயர்ந்தோரைக்காட்டு
மென்னலாம்;பாரறிந்தபழி-உலகோர் பழியென்றறிந்த குற்றமென்க. பி- ம்:
பாரறிந்து.                                                     (542)

146.-விகர்ணன் போர்தொடங்குதல்.

வீமனிப்படிச்சொல்லவும்வேரியந்
தாமமுற்றதடவரைத்தோளினான்
மாமணிச்சிலைவாங்கியவ்வீமன்மேற்
றீமுகக்கணையுஞ்சிலசிந்தினான்.

     (இ-ள்.) வீமன் இப்படி சொல்லவும்-, (கேளாமல்), வேரி அம்தாமம் உற்ற
தடவரை தோளினான் - வாசனையுள்ள அழகிய (போர்) மாலைபொருந்திய
பெரியமலைபோலுந் தோள்களையுடையவனான விகர்ணன்,-மா மணி சிலை
வாங்கி-பெரிய சிறந்த வில்லை வளைத்து, அவ்வீமன்மேல்-,தீ முகம் கணைஉம்
சிலசிந்தினான்-நெருப்புப்போலக் கொடிய கூர்நுனியுள்ள சில பாணங்களையும்
பிரயோகித்தான்; (எ - று.)-இச்செய்யுளில் 'சிலைவாங்கி' என்பது, கீழ்143- ஆஞ்
செய்யுளில் "சிலைவாங்கலும்"என்றதன் அநுவாத மென்க. பி-ம்: சிந்தியே. (543)

147.- விகர்ணன் வீமனை வலியப் போர்க்கு அழைத்தல்.

எம்முனோர்களெனைவருமுங்கையில்
வெம்முனைக்கணையால்விளிந்தேகவும்
உம்முன்யாரனொருவேனுமுய்வேன்கொலோ
வம்மின்வார்சிலைவாங்குகென்றோதினான்.

     (இ-ள்.) 'எம் முன்னோர்கள் எனைவர்உம் - எனது தமையன்
மார்களெல்லாரும், உம் கையில் - உமது கையினாலெய்யப்படுகிற, வெம்முனை
கணையால் - கொடிய நுனியையுடைய அம்புகளினால், விளிந்து ஏகஉம் - இறந்து
போகவும், உம் முன் - உமது முன்னிலையில், யான் ஒருவேன் உம் உய்வேன்
கொல்ஓ - நானொருத்தன்மாத்திரம் பிழைத்திருப்பேனோ? வம்மின் - (போர்க்கு)
வருவீராக; வார் சிலை வாங்குக - நீண்ட வில்லை வளைப்பீராக,' என்று
ஓதினான்-என்று (வீமனைநோக்கி வீகர்ணன்) சொன்னான்;

     'எனைவரும் விளிந்தேகவும்' என்றது-பலர் வீமனால் இறந்ததனாலும்,
மற்றையோரும்இறப்ப ரென்ற துணிவினாலு மென்க. உம்கையில் என்பது
முதலியன - தமையனைநோக்கித் தம்பி கூறிய உயர்வுப்பன்மை.         (544)