புறங்கொடுத்துத் தோற்றோடிய பகையரசர்களெல்லாரும், திருகி வந்து- திரும்பிவந்து, ஆங்கு எதிர் ஆகி - அவ்விடத்தில் (அவர்கட்கு) எதிரிலே எதிரிலே பொருந்தி, சூழ்ந்தார்-((எ - று.) பி-ம்: அடர்ந்து சூழ்ந்தார். இதுமுதல் ஒன்பது கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (552) 156.-சாத்தகியும் பூரிசிரவசும் பொருதல். சாத்தகிதானும்பூரிசவாவும்வெஞ்சாபம்வாங்கிக் கோத்தனர்பகழிசென்றுகுறுகினதேருந்தேருஞ் சேர்த்தனர்மலைந்தகாலைச்சிலைதுணிவுண்டுதேர்விட் டேத்தருந்தடக்கைகொட்டியிருவருமல்லினின்றார். |
(இ-ள்.) (அப்பொழுது), சாத்தகிதான்உம் - சாத்தகியும், பூரிசவாஉம்- பூரிச்ரவஸ்என்பவனும், வெம் சாபம் வாங்கி-கொடியவில்லை வளைத்து, பகழி கோத்தனர்.அம்பு தொடுத்தார்கள்; (அச்சமயத்தில்), தேர்உம் தேர்உம் - (அந்தஇரண்டுபேருடைய) தேர்களும், சென்று குறுகின - எதிர்த்துப்போய் நெருங்கின; சேர்த்தனர்-(இவ்வாறு தேர்களை) நெருங்கச்செலுத்தி, மலைந்த காலை -போர் செய்தபொழுது, இருவர்உம்-இரண்டுபேரும், சிலை துணிவுண்டு- வில்துணிபட்டு, (பின்பு) தேர் விட்டு - தேரைவிட்டு (இறங்கி), ஏ தரும் தட கை கொட்டி- (இதுவரையில்) அம்பைத் தொடுத்த பெரிய (தங்கள்) கைகளைத் தட்டிக்கொண்டு,மல்லில் நின்றார்-மற்போர்செய்தலில் முயன்றுநின்றார்கள்; ( எ - று.) - பி ம்: மல்லினேர்ந்தார். (553) 157.-பூரிசிரவனைக் கொல்லும்படி கண்ணன் அருச்சுனனுக்குக் கூறுதல். மல்லினின்வென்றுவீழ்த்திமாயவன்றம்பிதன்னைக் கொல்லுவான்முனைந்துமற்றைக்கோமகனடர்த்தனோக்கிக் கல்லினின்மாரிகாத்தோன்கண்டுவில்விசயனோடுஞ் சொல்லினன்பகைவன்றன்னைச்சுடர்முடிதுணித்தியென்றே. |
(இ-ள்.) மாயவன் தம்பிதன்னை-கண்ணபிரானுடைய தம்பியான சாத்தகியை மற்றை கோமகன் - பகையரசனானபூரிசிரவன், மல்லினின் வென்று வீழ்த்தி- மற்போரினாற்-சயித்துக் கீழேதள்ளி, கொல்லுவான் முனைந்து-(அவனைக்) கொல்ல முயன்று, அடர்த்தல்-வருத்துதலை, கல்லினில் மாரிகாத்தோன் - (கோவர்த்தன) மலையைக் கொண்டு மழையைத் தடுத்தவனான கண்ணன், கண்டு-பார்த்து, நோக்கிஆலோசித்து, வில் விசயனோடுஉம்-வில்லில்வல்ல அருச்சுனனுடனே, பகைவன்தன்னை சுடர் முடி துணித்தி என்று சொல்லினன்-'பகைவனான பூரிசிரவனைஒளியையுடைய தலையைத் துணித்திடுவாய்' என்று சொல்லியருளினான்; (எ - று.) - இங்ஙனஞ் சொன்னது, சாத்தகியை உயிர்பிழைப்பிக்க வேறு வகையில்லாமையாலென்க. (554) |