158.-அருச்சுனன் அரிதின்உடன்பட்டு அவனைத் தோள்துணித்தல். இருவருமுனைந்தபோரிலிளைத்தவற்குதவியாகப் பொருவதுகடனன்றென்றுபோற்றியவிசயன்றன்னை வெகுவரமுனைந்துசீறிமீளவும்விளம்பமாயன் றிருவுளமறிந்துதெவ்வன்றிண்புயந்துணியவெய்தான். |
(இ-ள்.) (அதுகேட்டு), 'இருவர்உம் முனைந்த போரில் இரண்டு பேரும் தொந்தயுத்தமாகத் தொடங்கிச்செய்த போரில், இளைத்தவற்கு உதவி ஆக- இளைத்தவனுக்குச் சகாயமாக, பொருவது-(வேறொருவன்) போர்செய்வது, கடன் அன்று - முறைமையன்று,' என்று-என்று மறுத்துச்சொல்லி, போற்றிய-வணங்கின, விசயன் தன்னை-அருச்சுனனை, மாயன் - மாயவனான கண்ணன், பெருவர- (அவன்)அஞ்சும்படி, முனைந்து சீறி-மிகக் கோபித்து, மீளஉம் விளம்ப-மறுபடியுஞ் சொல்ல,-(அருச்சுனன்), திருஉளம் அறிந்து-(கண்ணபிரானுடைய) சிறந்த மனக்கருத்தையுணர்ந்து, தெவ்வன் திண் புயம் துணிய'எய்தான்-பகைவனான பூரிசிரவனது வலியதோள் அறும்படி பாணம்பிரயோகித்தான்; (எ - று.) மற்போரிற் பூரிசிரவன் சாத்தகியைக் கீழே தள்ளி அவன்மார்பின்மேலிருந்து உடைவாளை வலக்கையிலெடுத்துச் சாத்தகியின் தலையைத் துணித்தற்கு ஓச்சுமளவில், அங்ஙனமோச்சிய கையை அருச்சுனன் தோளளவுந் துணித்திட்டனனென்க. (555) 159.-சாத்தகி பூரிசிரவனைத் தலைதுணிக்க, துரியோதனன் இகழ்தல். புயந்துணிவுண்டபூரிசவாவினைப்புரிந்துதள்ளிச் சயம்புனைவாளிற்றும்பைத்தார்புனைதலையுங்கொய்து வயம்புனைந்திளவனிற்பமன்னறமன்றிப்போரென் றியம்பியவிராசராசற்கெதிர்மொழியியம்பலுற்றான். |
(இ-ள்.) புயம் துணிவுண்ட-(அருச்சுனனம்பினால்) தோளறு பட்ட, பூரிசவாவினை-பூரிசிரவனை, இளவல்-கண்ணன் தம்பியான சாத்தகி, புரிந்து தள்ளி -மகிழ்ச்சிகொண்டு கீழேதள்ளி, சயம்புனை வாளின்-வெற்றிகொண்ட (தனது) உடைவாளினால், தும்பை தார் புனை தலைஉம் கொய்து-தும்பைப்பூமாலையைத் தரித்த (அவனது) தலையையும் அறுத்து, வயம்புனைந்துநிற்ப-வெற்றிகொண்டு நிற்க,- (அதுகண்டு), 'இ போர்-இந்த யுத்தம், மன் அறம் அன்று-இராசதருமமன்று,' என்று இயம்பிய-என்றுசொன்ன, இராசராசற்கு-அரசர்க்கசரசனான துரியோதனனுக்கு, எதிர் மொழி இயம்பல் உற்றான்-(கண்ணன்) விடைகூறத் தொடங்கினான்; (எ - று.)- அவ்விடையை, மேற்கவியிற் காண்க. (556) 160.- கண்ணன் துரியோதனனுக்கு ஏற்ற விடை கூறுதல். நென்னனீரபிமன்றன்னைநேரறவென்றபோரும் முன்னமேசுவேதன்றன்னைவீடுமன்முடித்தபோரும் மன்னறமுறைதவாமன்மலைந்தனிரென்றுநக்கான் றன்னைவந்தடைந்தோர்க்குற்றதளர்வெலாமொழிக்குந்தாளான். |
|