(இ-ள்.) தன்னை வந்து அடைந்தோர்க்கு - வந்து தன்னைச் சரணமடைந்தவர்கட்கு, உற்ற தளர்வு எலாம் ஒழிக்கும் - நேர்ந்த துன்பங்களை யெல்லாம் நீக்கியருளுகிற, தாளான் - திருவடியை யுடையவனான கண்ணபிரான்,- (துரியோதனனைநோக்கி),-'நென்னல் - நேற்று, அபிமன் தன்னை - அபிமந்யுவை, நீர் - நீங்கள், நேர் அற - தடையில்லாமல், வென்ற - சயித்த, போர்உம் - போரையும், முன்னம்ஏ - முதல் நாளிலேயே, சுவேதன் தன்னை - சுவேதனை, வீடுமன் முடித்த - பீஷ்மன் கொன்ற, போர்உம் - போரையும், மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர் - இராசதரும முறைமை தவறாமற்செய்தீர்கள்,' என்று-, நக்கான் - சிரித்தான்; (எ -று.) நகுதல்- எள்ளல் பற்றியது. பி - ம். நேருற. (557) 161.-அருச்சுனன் வீமனுடன் சாத்தகியுடனும் பகைவர்சேனையை நெருங்குதல். பின்னரும்விசயனிற்பப்பேணலார்பின்னிட்டோட மன்னரின்மலைந்தோர்தம்மைவாளியால்வானிலேற்றி முன்னவனோடுமந்தமுகில்வண்ணனிளவலோடுந் தன்னுரைவழுவாவண்ணந்தரியலர்படையைச்சார்ந்தான். |
(இ-ள்.) பின்னர்உம் - பின்பும், விசயன் - அருச்சுனன் நிற்ப - (போரில்) நிலைநிற்றலால், பேணலர் - பகைவர்கள், பின் இட்டுஓட - புறங்கொடுத்துஓடிப்போக,- (அவ்வருச்சுனன்),- மன்னரில் மலைந்தோர்தம்மை வாளியால் வானில் ஏற்றி - பகையரசர்களில் (புறங்கொடாது) எதிர்த்துப்போர்செய்தவர்களை (த் தனது) அம்புகளினால் வீரசுவர்க்கத்திற் செலுத்திக்கொண்டு, முன்னவனோடுஉம் - (தனது) முன்பிறந்தவனான வீமனுடனும், அந்தமுகில் வண்ணன் இளவலோடுஉம் - காளமேகம்போலுந் திருநிறமுடையனானகண்ணபிரானது திருத்தம்பியாகிய அச்சாத்தகியுடனும், தன் உரை வழுவா வண்ணம்- தனது சபத வார்த்தை தவறாமல் நிறைவேறுதற் பொருட்டு, தரியலர் படையைசார்ந்தான் - பகைவர்களது உட்சேனையை நெருங்கினான்; தன்னுரை வழுவாவண்ணம் - சயத்திரதனைக் கொல்லுதற் பொருட்டென்க. இங்கே, 'தரியலர்படை' என்றது, பின்னணிச் சேனையை. (558) 162. எதிரிகள் சயத்திரதனை நிலவறையுள் மறைத்துவைத்துப் பாதுகாத்தல். அருக்கனோர்கணத்திலத்தமடையுமவ்வளவுங்காக்கிற் செலுக்கிளர்விசயனின்றேதீயிடைவீழ்தறிண்ணம் நெருக்குபுநின்மினென்றுநிலவறையதனிலந்த மருக்கமழ்தொடையலானைவைத்தனர்மருவலாரே. |
(இ-ள்.) 'அருக்கன் - சூரியன், ஓர் கணத்தில் - ஒருக்ஷணப் பொழுதிலே [மிகவிரைவிலே என்றபடி], அத்தம் அடையும் - அஸ்தகிரியை அடைவான் [அஸ்தமிப்பான்]; அ அளவுஉம்- |