பக்கம் எண் :

338பாரதம்துரோண பருவம்

     இச்சயத்திரதனது தந்தையான வ்ருத்தக்ஷத்ரன் அருமையாக
இவனைப்பெற்றபின் இவனது தலையைக் கீழே தள்ளுபவனது  தலை பொடியாச்
சிதறிவிடுமென்று ஆகாயவாணிவரமருளவும் பெற்று மகிழ்ந்து அப்பால்இவனுக்குப்
பட்டாபிஷேகஞ் செய்து விட்டு வனம்புகுந்து ஸ்யமந்தபஞ்சக மென்ற மடுவின்
கரையில் தன்மகனது ஆக்கம் முதலியவற்றைக் குறித்து அரியதவத்தைச்
செய்துகொண்டிருக்கின்றான்; இவன் தலையை நீ நேரிற் கீழேதள்ளாமல் தக்க
அம்புகளை ஒன்றன்மேலொன்று விடாது தொடுத்து அவற்றால் அத்தலையை
உடம்பினின்று வேறாக்கி அப்பாற் செலுத்தி, சூரியாஸ்தமநமாய்விட்டதென்று
கருதிவிரைவாக மாலைக்கடன் கழிக்கத்தொடங்கி  அருக்கியசலமேந்தியுள்ள
அத்தந்தையின் கையில் விழச்செய்வாயாயின், அவன் அத்தலையைத் தன்கையாற்
கீழேயெறிந்து அதனால் தன் தலை வெடித்து இறப்பான்; உன் தலைக்கு
அபாயமும்இலதா மென்று கண்ணன் அருச்சுனனுக்கு நல்லுபாய மறிவுறுத்தின
னென்பதாம்.பரசுராமன் இருபத்தோர்கால் அரசரைக் களையறுத்தபின் தருப்பிக்க
அவர்குருதிகொண்டு நிருமித்த ஐந்துமடுக்கள் ஸ்யமந்த பஞ்சகமெனப்படும்: இது,
குருக்ஷேத்திரத்திலுள்ளது.                                        (563)

அருச்சுனன் முதலில் எரிபாய்வேனென்று சென்று கிருஷ்ணன்
சினந்துசீறப் பிறகு கணைதொடுக்கக் கருதுதல்.

*என்னுமொழிதனைக்கேட்டுகாண்டீபமெடேன்கணையுமினித்
                                    தொடன்யான்,
சொன்னமொழிபிழையேனென்றெதிர்நடந்தான்
                        சுடரெரியிற்றோய்வேனென்ன.
வன்னதுகேட்டாழிமாலதிகோபமுடன் சீறவதனாற்பார்த்தன்,
றன்னசிலைதனையெடுத்துக் கணைதொடுக்க
                        மதித்தான்சொற்றவறிலாதான்.

     (இ-ள்.) என்னும் மொழிதனை கேட்டு - என்று (ஸ்ரீக்ருஷ்ணன்) சொன்ன
வார்த்தையைக்கேட்டபிறகு, (அருச்சுனன்), 'யான்-, இனி-, காண்டீபம் எடேன் -
காண்டீவமென்னும் வில்லை யெடுத்து, கணைஉம் தொடேன் - அம்பும்
தொடுக்கமாட்டேன்;  சொன்ன மொழி பிழையேன் -(சூரியாஸ்தமனத்திற்குள்
சயத்திரதனைக் கொல்லாவிடின் அக்கினியிற்புகுவேன் என்று) பிரதிஜ்ஞைசெய்த
சொல்லைத் தவறமாட்டேன்', என்று-என்று சொல்லி, எதிர் நடந்தான் -
(அக்கினியுள்ள இடத்தைநோக்கி) எதிராக நடந்து, 'சுடர் எரியில் தோய்வேன்-
சுவாலையுள்ள நெருப்பில் மூழ்குவேன்', என்ன - என்று உறுதியாகஇருக்க,-
அன்னதுகேட்டு - அந்த (அருச்சுனன்) மொழியைக் கேட்டு, ஆழி மால் -
சக்கராயுதத்தையுடைய க்ருஷ்ணன், அதிகோபமுடன் சீற-,அதனால்-, (பிறகு)
பார்த்தன் - அருச்சுனன், சொல்தவறு இலாதான் - (க்ருஷ்ணன்சொன்ன)
சொல்லைத்தட்டாதவனாய், தன்ன சிலைதனை எடுத்து தன்வில்லை யெடுத்து,
கணை தொடுக்க- (செயத்திரதன் மீது) அம்பு தொடுத்தற்கு, மதித்தான் -
எண்ணினான்; (எ - று.)-ஆழிமால்-கருத்துடையடைமொழி.


     * இச்செய்யுள் சங்கப்பிரதியிலுள்ளது.