பக்கம் எண் :

34பாரதம்துரோண பருவம்

புரிந்து முடிவில் தாம்முன்புகருதிய பிரமவிருடிப் பட்டத்தைப் பெற்ற
பெருஞ்சிறப்புடைய னாதலால், கௌசிகன் 'பெய்யாத தவமுனி எனப்பட்டான்.
பயிர்செழித்தற்பொருட்டுக் களைபறித்தல் போலச் சிஷ்டபரிபாலநத்திற்காகத்
துஷ்டநிக்கிரகஞ்செய்தல் கருணையின் காரியமே யாதலால், 'அருளி' எனப்பட்டது.

     தாடகை- மலைகளில் சஞ்சரிப்பவள்; இவள் - சுகேது என்னும் யக்ஷனது
மகள்; சுந்தனென்பவனது மனைவி ; ஆயிரம்யானை வலிமைகொண்டவள். கணவன்
அகஸ்தியமகா முனியின் கோபத்தீக்கு இலக்காய்ச் சாம்பரானதை யறிந்த இவள்,
தன்புத்திரர்களாகிய சுபாகுமாரீசர்களுடனே அம்முனிவனை எதிர்த்துச் சென்ற
பொழுது, அவரிட்டசாபத்தால் தன் மக்களோடு இராக்கத்தன்மையடைந்தனள்.
பின்புமுனிவர்களது யாகாதிகளைக்கெடுக்கிற இவர்களை அழித்துத்
தன்வேள்வியைக்காக்கும்பொருட்டுவிசுவாமித்திர முனிவன் 
தசரதசக்ரவர்த்தியினியிடம்அனுமதிபெற்று இளம்பிராயமுடைய இராமலக்குமணரை
யழைத்துக்கொண்டுபோனபொழுது, அம்முனிவனாச்சிரமத்துக்குச் செல்லும்
வழியிடையிலேவந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவன் கட்டளைப்படி
பெண்ணென்றுபாராமற் பொருது கொன்றருளினான்.

     கையா லொருசாபம் வாங்கியது:- ஜனகமகாராசன் பரமசிவனாற்
கொடுக்கப்பட்டதொரு பெரிய வலிய வில்லையெடுத்து வளைத்தவற்கே தன்மகள்
சீதையைக் கலியாணஞ் செய்துகொடுப்ப தென்று கந்யாசுல்கம் வைத்திருக்க,
வேள்விமுடித்த விசுவாமித்திரனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமன் அவ்வில்லை
வளைத்துச் சானகியை மணஞ்செய்துகொண்டனனென்பதாம்.

     காலாலும் ஒருசாபம் வாங்கியது:- அகலிகை விருத்தாந்தம்; நான்காம்
போர்ச்சருக்கம் முதற்பாடலுரையிற்காண்க.

     இதுமுதற் பதினைந்து கவிகள்- பெரும்பாலும் நாற்சீர்களும் காய்ச்சீர்களாகிய
அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.                         (46)

2.- ஒற்றரால் துரியோதனன் பாசறையில் நிகழ்ந்தவையறிந்து
யுதிட்டிரன் உக்கிரமாகப் பொரக் கருதுதல்.

அற்றராபதிகருதியாசானோடுரைத்தவெலாம்
ஒற்றராலக்கணத்தேயுணர்ந்தமுரசக்கொடியோன்
மற்றராவணைதுறந்மாயனுக்கும்விசயனுக்குஞ்
சொற்றராபதநெருங்கத்தொடைத்தும்பைபுனைந்தானே.

     (இ -ள்.) அல் - (முந்தினநாளின்) இராத்திரியில், தரா பதி - பூமிக்கு
அரசனான துரியோதனன், கருதி - ஆலோசித்து, ஆசானோடு -
துரோணாசாரியனுடனே, உரைத்த எலாம்- சொன்ன வார்த்தைகளையெல்லாம்,
ஒற்றரால் - (தனது) வேவுகாரர்களால், அ கணத்துஏ - அந்த க்ஷணத்திலேயே,
உணர்ந்த- அறிந்த, முரசம் கொடியோன் - பேரிகையின்வடிவத்தை யெழுதிய
துவசத்தையுடைய தருமபுத்திரன், மற்று - பின்பு, அரா அணை துறந்த
மாயனுக்குஉம்- ஆதிசேஷனாகிய சயநத்தை விட்டுவந்த திருமாலாகிய
கண்ணபிரானுக்கும், விசயனுக்குஉம்- அருச்சுனனுக்கும்,சொற்று-