பக்கம் எண் :

340பாரதம்துரோண பருவம்

என்றுசிந்தித்து, பிழைப்பட்டான் போல்-(குறித்த  இலக்குத்) தவறியவன்போல,
விசயன் எரி பட்டான் என எண்ணி நின்றான் அரவு உயர்த்தோன் என்
பட்டான்-அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்செய்து இறந்தானென்று எண்ணி
மகிழ்ந்துநின்றவனான துரியோதனன் என்ன வருத்தமடைந்தான்! (மிக
வருந்தினான்என்றபடி); (எ - று.)

     முடிவில் - அப்பகலிற் பெரும்பான்மையும் மறைந்து தப்பி நின்று அதன்
இறுதியிலே யென்க, 'இது' என்றது-தன்கையில் தன்மைந்தன் தலைவிழச் செய்ததை,
'மாயன் மாய மிதென் றறியாமல்' என்றது, 'அவன் தந்தை பட்டான்' என்பதனோடு
இயையும் 'இனிப்பட்டாரெவரும்' என்றது, இனியாவரும் தவறாமல் அழிந்திடுவ
ரென்ற துணிவினால். சூரியன் அஸ்தமிக்குமளவும் சயத்திரதன் அருச்சுனனுக்குப்
புலப்படாமல் நின்றதனால், அருச்சுனன் சபதப்படி தீக்குதித்து இறந்திடுவது தவறா
தென்று எண்ணித் துரியோதனன் களித்துநின்றான்; அந்த எண்ணம் தவறிப்போய்
வேறுவகையாய் முடிந்தமைபற்றி, 'பிழைப்பட்டான் போல்' என்றார்; 'போல்'-
ஒப்பில்போலி: (கையிற் கிடைத்த பொருள்) தவறப்பெற்றவன்போல மிக
வருந்தினனென்க.                                               (565)

169.- கண்ணன் திருவாழி விலகச் சூரியன் விளங்குதல்.

கன்னசவுபலர்முதலாங்காவலருஞ்சுயோதனனுங்கரந்தான்வெய்யோன்
சொன்னமொழிபிழைத்தான்வெஞ்சுவேததுரங்கமனென்றுதுள்ளி
                                         யார்த்தார்
அன்னபொழுதெம்பெருமான்பணிகொண்டசுடராழியகற்றநோக்கி
னின்னமொருபனைத்தனைப்போழ்துண்டெனநின்றனனெழுபேரி
                                     வுளித்தேரோன்.

     (இ-ள்.) கன்ன சவுபலர் முதல் ஆம் காவலர்உம்-கர்ணனும் சகுனியும்
முதலான அரசர்களும், சுயேதனன்உம் - துரியோதனனும்,-'வெய்யொன் கரந்தான்-
சூரியன் அஸ்தமித்தான்; (அதன் பின்பு சயத்திரதனைக் கொன்றதனால்), வெம்
சுவேத துரங்கமன் சொன்ன மொழி பிழைத்தான் - கொடிய (நான்கு)
வெள்ளைக்குதிரைகளையுடையவனான அருச்சுனன் (முந்தினநாட்) சொன்ன சபத
வார்த்தை தவறினான்,' என்று-என்று எண்ணியும் சொல்லியும், துள்ளி ஆர்த்தார்-
குதித்து ஆராவாரஞ்செய்தார்கள்; அன்னபொழுது-அவ்வளவிலே, எம் பெருமான்-
எமக்குத்தலைவனான கண்ணபிரான், பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற- (தனது)
கட்டளையை நிறைவேற்றிய விளங்குகிற சக்கராயுதத்தை விலகச்செய்ய,-நோக்கின்-
பார்க்குமிடத்து,-எழு பேர் இளிவுதேரோன்-ஏழு பெரிய குதிரைகளையுடைய
தேரையுடையவனான சூரியன், இன்னம் ஒரு பனை தனை போழ்து
உண்டுஎனநின்றனன்-(அஸ்தமிப்பதற்கு) இன்னமும் ஒருபனைமரத்தளவு
இடங்கொண்ட பொழுது உண்டென்றுசொல்லும்படி நின்றான்; (எ - று.)-
பனைத்தனைப்போழ்து-சூரியனிருக்குமிடத்துக்கும் அஸ்தமிக்கச்செல்ல வேண்டிய
இடத்துக்கும் இடைப்பட்ட இடம் ஒருபெரியபனைமரம் எவ்வளவுநீளம்
இருக்குமோஅவ்வளவுதூரம் என்க.                               (566)