170.-இதுவும், அடுத்தகவியும்-சேனையிலுள்ளார்வார்த்தை. விரியோதநெடுங்கடலில்வீழ்வதன்முன்விரைந்துரகன் விழுங்கினானோ வெரியோடிமகனிறக்குமெனமகவான் மறைக்க முகிலேவினானோ கரியோன்கைத்திகிரியினான்மறைத்தனனோவிருள் பரந்தகணக்கீதென்னோ பெரியோர்கடிருவுள்ளம்பேதித்தா லெப்பொருளும் பேதியாதோ. |
(இ-ள்.) விரி-பரவுகின்ற, ஓதம் - அலைகளையுடைய, நெடுங்கடலில்-பெரிய கடலிலே, வீழ்வதன்முன்-வீழுந்து அஸ்தமிப்பதன் முன்னே, (சூரியனை), உரகன் - பாம்புவடிவமான ராகு அல்லது கேது, விரைந்துவிழுங்கினான் ஓ- விரைவாகவந்துவிழுங்கிப் பின்பு உமிழ்ந்தனனோ? (அன்றி), மகவான் - இந்திரன், மகன் எரி ஓடி இறக்கும் என்-தன்பிள்ளையான அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ் செய்து இறப்பனே யென்பதைப் பற்றி, (அங்ஙனம் இறவாமைப் பொருட்டு) மறைக்க முகில் ஏவினான்ஓ-(சூரியனை) மறைத்தற்கு மேகங்களைச் செலுத்தினானோ? (அல்லது), கரியோன்-கிருஷ்ணன், கை திகிரியினால் மறைத்தனன்ஓ-(தன்) கைவசப்பட்ட சக்கரத்தைக்கொண்டு (சூரியனை) மறைத்திட்டானோ? இருள் பரந்த கணக்கு ஈதுஎன்ஓ - (சூரியன் உண்மையாக அஸ்தமிப்பதற்குமுன்னமே இடையில்) இருள்பரவியவிதம் யாதுகாரணத்தா லானதோ? பெரியோர்கள் திரு உள்ளம் பேதித்தால் எ பொருள்உம் பேதியாதுஓ-பெரியோர்களுடைய சிறந்த மனம் மாறினால் எந்தப்பொருளும் மாறுபடாதோ? (எ - று.) ஈற்றடி - கண்ணன்முதலான மகான்களுடைய மனம் துரியோதனன் செய்த கொடுமையால் மாறுபட்டிருத்தலாற் பகலும் இரவாக மாறியதுபோலுமென்ற சிறப்புப்பொருளைப் பொதுப்பொருளால் விளக்கியவாறு: வேற்றுப்பொருள்வைப்பணி. (567) 171. | உந்திரதத்தனிவலவனுபாயத்தால்வருணன்மகனுயிரைமாய்த்தான் மந்திரமொன்றறிவித்துவயப்புயமாயிரத்தோனைமடிவித்திட்டான் தந்திரமெய்ம்மயங்கிவிழத்தன்சங்கமுழக்கினான்றபனன்மாய விந்திரசாலமுஞ்செய்தானிந்திரன்சேய்வெல்லாமல்யார் வெல்வாரே. |
(இ-ள்) இரதம் உந்து தனி வலவன் - (அருச்சுனனது) தேரைச் செலுத்துகின்ற ஓப்பற்ற சாரதியான கண்ணன், உபாயத்தால்-ஒரு தந்திரத்தால், வருணன் மகன் உயிரை மாய்த்தான்- வருணனதுகுமாரனான சுதாயுவின் உயிரைப்போக்கினான்; (பின்பு) மந்திரம் ஒன்று அறிவித்து-ஒருமந்திரத்தை (அருச்சுனனுக்கு) உபதேசித்து, வய புயம் ஆயிரத்தோனை மடிவித்திட்டான்- (அதனால் அருச்சுனன்) வலிய ஆயிரவாகுவைக் கொல்லும்படி செய்தான்; (அதன்பிறகு), தந்திரம்-பகைவர்சேனை, மெய் மயங்கிவிழ-உடம்பு (தெரியாமல்) மயக்கமடைந்து விழும்படி, தன் சங்கம் முழக்கினான்-தனது பாஞ்சசன்னியத்தை ஒலிப்பித்தான்; (இவையல்லாமல்), தபனன் மாய இந்திரசாலம்உம் செய்தான் - சூரியன் மறையும்படிபெருமாயையையுஞ் செய்தான்; (ஆதலால்), இந்திரன் சேய் வெல்லாமல் யார்வெல்வார்- (அக்கண்ணபிரானது உதவி |