யைப் பலவாற்றலும் கொண்ட) அருச்சுனன் வெற்றிகொள்ளாமல் (வேறு) யார் (போரில்) வெற்றி கொள்வர்? (எ - று.)-31, 32, 35, 36, 41, 88, 164-இக்கவிகள், இங்குநோக்கத்தக்கன. (568) 172.-இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்: துரியோதனன் சிலகூறிச் சேனையோடுஞ் சென்ற போர்தொடங்குதலைக் குறிக்கும். முடையெடுத்தநவநீதந்தொட்டுண்டுங் கட்டுண்டு முதனாணாகக் குடையெடுத்துமழைதடுத்தும்வஞ்சனைக்கோர்கொள்கலமாங் கொடியபாவி படையெடுத்துவினைசெய்யேனெனப்புகன்றமொழிதப்பிப் பகதை்தபோரி னிடையெடுத்தநேமியினால்வெயின்மறைத்தானின்னமிவனென் செய்யானே. |
(இ-ள்.) முடை எடுத்த - முடைநாற்றம் பொருந்திய, நவநீதம்-வெண்ணெயை, தொட்டு உண்டுஉம்- கையாலெடுத்துத் தின்றும், கட்டுண்டுஉம் - (அதற்காக ஆய்ச்சியராற்) கட்டப்பட்டும், முதல் நாள் - இளம்பிராயத்திலேயே, நாகம் குடை எடுத்து மழை தடுத்துஉம் - (கோவர்த்தந) மலையைக் குடையாக எடுத்துப் பிடித்து அதனால் (இந்திரன்பெய்வித்த) மழையைத் தடுத்தும், வஞ்சனைக்கு ஓர் கொள்கலம் ஆம் - வஞ்சனைக்கட்கு ஓர் இருப்பிடமாகவுள்ள, கொடியபாவி-கொடும்பாவியான கண்ணன், படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி - '(போரில்) ஆயுதமேந்தித் தொழில்செய்யேன்' என்று (என்னுடன்)சொன்ன சபதவார்த்தை தவறி, பகைத்த போரினிடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் - (ஒருவரோடொருவர்) பகைத்துச்செய்கிற போரின்நடுவிலே தான் ஏந்திய சக்கராயுதத்தைக்கொண்டு சூரியனை மறைத்திட்டான்; இன்னம் இவன் என் செய்யான்-இன்னமும் இந்தக்கண்ணன் எந்த அநீதிதான் செய்ய மாட்டான்? (எ-று.)-பி-ம்:முன்னாள்-என்செய்வானோ. நவநீதம் என்ற வடசொல்லுக்கு-புதிய தயிரினின்று கடைந்தெடுக்கப்பட்ட தென்று காரணப்பொருள் கூறுவர். கொள்கலம்- பாத்திரம்; (569) 173. | ஒற்றைநெடுந்திகிரியினன்மறைவதன்மு னைவரையுமுடனே மோதிச். செற்றிடுதல்யான்படுதறிண்ணமெனச்சேனையொடுஞ்சென்று சூழ்ந்தான், கொற்றவனதுரைகேட்டுக்கொடிநெடுந்தேர் நரபாலர்சபதங்கூறி, மற்றவரோடொருகணத்தில்வம்மினெனத்தனித்தனிபோய் மலைதலுற்றார். |
(இ-ள்.) 'ஒற்றை நெடுந் திகிரியினன் - பெரிய ஒற்றைத் தேராழியை யுடையவனான சூரியன், மறைவதன் முன் - (இனி உண்மையாக) அஸ்தமிப்பதன்முன்னே, ஐவரைஉம் உடனே மோதி செற்றிடுதல் - பாண்டவரைந்துபேரையும் ஒருசேரத்தாக்கி (யான்) கொன்றிடுதலாவது, யான் படுதல் - (அங்ஙனம் அது கூடாவிட்டால் அவர்களால்) யான் இறத்தலாவது, திண்ணம் - (இரண்டில் ஒன்று) நிச்சயம்,' என - என்று வீரவாதஞ்செய்து கொண்டு, (துரியோதனன்), சேனையொடுஉம் சென்று சூழ்ந் |