பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்345

சமகாலத்திலே இருவரும் இறக்கும்படி அழித்தானென்ற கருத்துமாம். உடன்று சீறி-
ஒருபொருட்பன்மொழி.                                          (573)

177.-கடோற்கசன்மகனை அசுவத்தாமன் கொல்லுதல்.

இகலிடிம்பன்மருமகனுந்திருமகனுங்குருமகனோடெதிர்ந்துபல்கா
லகலிடஞ்செஞ்சேறாகவமரருடனசுரரைப்போலமர்செய்காலைப்
பகலுடன்காரிருள்பகைத்தாற்பலிக்குமோவஞ்சனபன்மனையப்
                                          போதிற்
புகலிடம்பொன்னுலகாக்கிப்போக்கினானொருகணையாற்
                                      புரவித்தாமா.

     (இ-ள்.) இகல்-வலிமையையுடைய, இடிம்பன் மருமகன்உம்-இடிம்பனது
உடன்பிறந்தவளின் புத்திரனான கடோற்கசனும், திரு மகன்உம்-(அக்கடோற்கசனது)
சிறந்த புத்திரனான அஞ்சநபத்மனும், குரு மகனோடு-துரோணாசாரியனது
புத்திரனான அகவத்தாமனுடனே, பல் கால் எதிர்ந்து - பலமுறை எதிரிட்டு, அகல்
இடம் செம் சேறு ஆக-பரந்த போர்க்களத்தினிடம் (இரத்தப்பெருக்கினாற்)
சிவந்தசேறாகும்படி, அமரருடன் அசுரரை போல் அமர் செய் காலை-தேவர்களுடன்
அசுரர்கள் (போர்செய்தல்) போலப் போர் செய்தபொழுது,-பகலுடன் கார் இருள்
பகைத்தால் பலிக்கும்ஓ-சூரியனுடனே கரிய இருள் பகைமைகொண்டாற்
பயன்படுமோ? (பயன்படாது); (அவ்வாறே), அ போதில் - அப்பொழுது,
புரவித்தாமா- அசுவத்தாமன், (தன்னோடு மாறுபட்டு எதிர்த்த), அஞ்சனபன்மனை-,
ஒருகணையால்-ஓரம்பினால், புகல் இடம் பொன் உலகு ஆக்கி போக்கினான்; -
(அவன்) செல்லுதற்கு உரிய இடம் வீரசுவர்க்கமாம்படி (எ - று.)

     இடிம்பன் மருமகன் இடிம்பனது உடன்பிறந்தவளாகிய இடிம்பியினிடம்
வீமசேனனுக்குப் பிறந்த கடோற்கசன், பூதேவனான அசுவத்தாமனுக்குத் தேவரும்,
அரக்கரான கடோற்கசனுக்கும் அவன்மகனுக்கும் அசுரரும் உவமைகூறப்பட்டனர்.
பின்னிரண்டடியில்-எடுத்துக்காட்டுவமையணி. 'மருமகனுந்திருமகனுங்
குருமகனோடு'-பிராசம்.                                    (574)

178.-கடோற்கசனை அசுவத்தாமன் அடித்துவீழ்த்துதல்.

மகன்பட்டசினங்கதுவவரையுறழ்தோட்கடோற்கசன்மாமலைகள்வீசி
யகன்பட்டநுதல்வேழமன்னான்மேலெறிந்தெறித்திட்டார்த்தகாலைக்
குகன்பட்டந்தனக்குரியகோமுனிவன்மாமைந்தன்வீமன்கையிற்
பகன்பட்டபாடெல்லாம்படுத்தியொருகதாயுதத்தாற்படியில்வீழ்த்தான்.

     (இ-ள்.) (பின்பு), வரை உறழ் தோள் கடோற்கசன் - மலையையொத்த
தோள்களையுடைய கடோற்கசன், மகன் பட்ட சினம் கதுவ - (தனது) புத்திரன்
கொல்லப்பட்டதனா லாகிய  கோபம் மிகமூள, அகல் பட்டம் நுதல் வேழம்
அன்னான்மேல்-அகன்ற பட்டமணிந்த நெற்றியையுடைய யானைபோல
வலியவனானஅசுவத்தாமன்மேல், மா மலைகள் வீசி எறிந்து எறிந்திட்டு-பெரிய
மலைகளையெடுத்து வேகமாக மிகுதியாய்எறிந்து, ஆர்த்த காலை -
ஆராவரித்தபொழுது,-குகன் பட்டந்தனக்கு