பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்347

பொருபகழிக்கிரையாகப்போக்குகின்றே னெனமெழிவைபோர்வல்லோர்க
ளுருவழியத்தம்வலிமையுரைப்பரோ வெனவுரைத்தானுரையான்மிக்கோன்.

     (இ-ள்.) நிருபனுடன் - துரியோதனராசனுடனே, இரவி மகன் -
சூரியகுமாரனான கர்ணன், புகன்ற - சொன்ன, உரை - அந்த வார்த்தையை,
கேட்டு-, அருகே நின்ற - சமீபத்திலே நின்ற, உரையால் மிக்கோன் - புகழினாற்
சிறந்தவனான, வில் கை கிருபன் - வில்லையேந்திய கையையுடைய கிருபாசாரியன்,
மிக நகைத்து - மிகுதியாகச் சிரித்து, (கர்ணனை நோக்கி), 'எதிரே கிட்டினால்
முதுகு இடுவை - (அருச்சுனன்) எதிரிலே கிட்டினாற் புறங்கொடுப்பாய்;
(அவன்கிட்டாதபொழுது), கிருடீதன்னை பொரு பகழிக்கு இரை ஆக
போக்குகின்றேன் என மொழிவை-அருச்சுனனைப் போர் செய்கிற அம்புக்கு
உணவாம்படி ஒழிக்கின்றேனென்று வீரவாதங்கூறுவாய்; போர் வல்லோர்கள் உரு
அழிய தம் வலிமை உரைப்பர்ஓ - போர்செய்தலில் வல்லமையுள்ளவர் (தமது)
பெருமைகெடத் தம்வலிமையைத் தாமே எடுத்துச் சொல்லுவார்களோ?' என -
என்று, உரைத்தான்-; (எ-று.)

     இப்பாட்டின் இடையடிகளை இச்சருக்கத்து 59 - ஆம் பாட்டின்
முதலிரண்டடிகளோடு ஒப்பிடுக. தற்புகழ்தல் தனது பெருமைக்குக் குறைவாதலால்,
'உருவழியத்தம்வலிமையுரைப்பரோ' என்றான்.                         (577)

181.-கர்ணன் அருச்சுனனை யெதிர்த்துத் தோற்றல்.

அம்மொழிகன்செவிசுடப்போயக்கணத்தேவிசயனுடனங்கராசன்
வெம்முனைசெய்போரழிந்துதேரழிந்துவென்னிட்டான்மீண்டுமீண்டும்
அம்முறையிற்பற்குணனாலாவியொழிந்தவரரசரனேககோடி
யெம்மொழிகொண்டுரைப்பரிதாலுரைக்கவெமக்காயிரநாவில்லைமாதோ.

     (இ-ள்.) அ மொழி-கிருபாசாரியன் கூறிய அந்தவார்த்தை, தன் செவி சுட -
தனது காதுகளை மிகவும் வருத்தியதனால், அ கணததுஏ-அந்த க்ஷணத்திலேயே,
அங்க ராசன் - அங்கதேசத்தரசனான கர்ணன்,-விசயனுடன்-அருச்சுனனுடனே,
போய் - (போருக்குச்) சென்று, (விரைவிலே அருச்சுனனால்), வெம் முனைசெய்
போர் அழிந்து-கொடிய போர்க்களத்திற் செய்கிற (தனது) போர்த்திறம் அழிபட்டு,
தேர் அழிந்து - தேர் அழிபட்டு, மீண்டு உம் மீண்டுஉம்-பலமுறை, வென்
இட்டான் - பறங்கொடுத்தான்; அ முறையில் - அச்சமயத்திலே, பற்குனனால் ஆவி
ஒழிந்தவர் அரசர்-அருச்சுனனால் உயிரொழிந்த அரசர்கள், அனேக கோடி -
பலகோடிக்கணக்கினராவர்; (இப்படிப்பட்ட அருச்சுனனது போர்த்திறம்), எம்
மொழிகொண்டு உரைப்பு அரிது-எமது வாக்கினாற் சொல்லுதற்கு அரியது;
(ஏனெனில்,-) உரைக்க எமக்கு ஆயிரம் நாஇல்லை - பேசுதற்கு எமக்கு
ஆயிரம்நாக்கு இல்லை; (எ-று.)-ஆல், மாது ஓ-ஈற்றசைகள். ஆயிரம் நாக்கு
இருந்தாலன்றி அது சொல்லமுடியா தென்பதாம். பின்னிரண்