டடிகள் அருச்சுன்னாற் பலர்பட்டமைகூறுங் கவிக்கூற்று பி - ம்: ராயன். ஆவி யழிந்தவர். (578) 182.- அசுவத்தாமனது போரும்,சூரியாஸ்தனமும். அந்தமுனை தனின்மீண்டு மந்தணன்றன் றிருமதலை குத்தி போசன் மைந்தரிரு வரையிரண்டு வடிக்கணையான் மடிவித்தான் மாயோன் வன்கைச் செந்திகிரித னிலடங்கி முடங்கியதன் கிரணத்தின் சிறுமை நாணி யுந்துதிரைச் சிந்துவினி லோராழித் தேரோனு மொளித் திட்டானே. |
(இ-ள்.) மீண்டுஉம் - பின்பும், அந்த முனைதனில் - அந்தப் போர்க்களத்திலே, அந்தணன் தன் திரு மதலை - துரோணாசாரியனது சிறந்த குமாரன் (அகவத்தாமன்), குந்திபோசன் மைந்தர் இருவரை - குந்திபோசராசன் புத்திர ரிரண்டுபேரை, இரண்டு வடி கணையால் - கூரிய இரண்டு அம்புகளினால், மடிவித்தான் - அழியச்செய்தான்; (அப்பொழுது), ஓர் ஆழி தேரோன்உம் - ஒற்றைச்சக்கரமுள்ள தேரையுடையவனானசூரியனும்,-மாயோன்வல் கை செம் திகிரிதனில் அடங்கி முடங்கிய தன் கிரணத்தின் சிறுமை நாணி - கண்ணபிரானது வலிய திருக்கையிலுள்ள சிவந்தசக்கரத்தினுள் அடங்கி மறைந்த தனது ஒளிகளின் எளிமையைக் குறித்து வெட்கப்பட்டு, உந்து திரை சிந்துவினில் ஒளித்திட்டான் - வீசுகின்ற அலைகளையுடைய கடலிலே மறைந்திட்டான்; (எ - று.) குந்திபோசன்-குந்தியின்வளர்த்த தந்தை, சூரியன் அஸ்தமித்தல் மேல்கடலில் மூழ்கிமறைதல்போலத்தோன்றுகிற இயல்பினிடத்து, தன்கிரணம் கண்ணன்கைச்சக்கரத்தினுள் அகப்பட்டு மறைபட்ட அவமானத்துக்கு வெள்கிக் கடலிலொளித்தானென்று கவி தானாக ஒரு காரணங்கற்பித்துக் கூறினமையால், ஏதுத்தற்குறிப்பேற்றவணி. பி-ம்: வண்கை. (579) இனி, இராத்திரியுத்தம். வேறு. 183.-துரியோதனன் இரவிலும் போர்செய்யத் தொடங்குதல். இசையி னும்பெருக நன்றே னத்தனதி யற்கை யான்மிக வளர்த்திடும் வசையி னுங்கரிய விருள்ப ரந்துழிவ யங்கு தீபநெடு வாளினால் நிசையி னும்பொருது மென்று தெவ்வர்முனை நேர் நடந்தனனெருங்குகுன் றசையி னும்புடவி யசைவி னுஞ்சமரி லசைவி லாததனி யாண்மையான். |
(இ-ள்.) நெருங்கு குன்று அசையின்உம் - ஒன்றோடொன்று நெருங்கிய மலைகள் சலித்தாலும், புடவி அசையின்உம்-பூமி சலித்தாலும், சமரில் அசைவு இலாத - போரில் (தான்) சலித்தலில்லாத, தனி ஆண்மையான்-ஒப்பற்ற பராக்கிரமமுள்ளவனான துரியோதனன்,-இசையின்உம் பெருக நன்று என தனது இயற்கையால் மிக வளர்த்திடும் வசையின்உம் கரிய இருள் பரந்தஉழி- |