பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்35

(அச்செய்தியைச்) சொல்லி,- அராபதம் நெருங்க- வண்டுகள் நெருங்கிமொய்க்க,
தும்பை தொடை புனைந்தான்- (போருக்குரிய) தும்பைப்பூமாலையைச் சூடினான்;
(எ - று.) - உக்கிகரமாகப் போர் செய்ய நிச்சயித்தான் என்பதாம்.  

    ஆங்காங்கு நடப்பவற்றை ஒற்றியறிந்துவருவதால், ஒற்றர் என்று பெயர்;
ஒற்றுதல்-அடுத்து நின்று உண்மையைக் கிரகித்தல். இவர் - தூதரினும்
வேறுபட்டவர்;வடமொழியில், 'சாரர்' எனப்படுவர். அராபதம்- அறுபதம் என்பதன்
விகாரம்போலும்."பனிக்கடலுள் பள்ளிகோளைப் பழகவிட் டோடிவந்து, என் மனக் 
கடலுள்வாழவல்ல மாயமணாளநம்பீ" என்றார்போல, 'அராவணைதுறந்த மாயன்'
என்றார் ; இது - உபசாரம், 'படஞ்செய் நாகணைப் பள்ளி நீங்கினான் " என்றார்
கம்பரும். 'அராத்துறந்த' என்னாது 'அராவணைதுறந்த' என்றதனால்,
அவ்வாதிசேஷன்இங்குப்பலராமனாய் அவதரித்துள்ள தன்மை தொனிக்கும்.
ஆசான் -ஆசார்யன்என்னும் வடசொல்லின் விகாரம்.               (47)

3.- பாண்டவசேனை மண்டலவியூகமாக வகுக்கப்படுதல்.

கருங்களவின்கனிவண்ணன்கனைகழற்கால்வேந்தரொடும்
பெருங்களஞ்சென்றெய்தியபின்பேணார்கள்வெருக்கொள்ள
இருங்களிறுதேர்பரியாளிருமருங்கும்புடைசூழ
வருங்களிகொள்வரூதினியைமண்டலமாவகுத்தானே.

     (இ-ள்.) கரு களவின் கனி வண்ணன் - கரிய களாப்பழம் போன்ற
திருமேனிநிறத்தையுடைய கண்ணன், - கனை கழல் கால் வேந்தரொடுஉம் -
ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த பாதத்தையுடைய அரசர்களுடனே, பெருகளம்
சென்று எய்திய பின் - பெரிய போர்க்களத்தைப் போய் அடைந்த பின்பு, இரு -
பெரிய, களிறு - யானைகளும், தேர்- தேர்களும். பரி - குதிரைகளும், ஆள் -
காலாள்களும்,(ஆகிய சதுரங்கமும்), இரு மருங்குஉம் - இரண்டு பக்கங்களிலும்,
புடைசூழ- திரண்டு சூழ்ந்துநிற்க, வரும் -வருகிற, களிகொள் - (போரில்)
உற்சாகத்தைக்கொண்ட, வரூதினியை - (பாண்டவ) சேனையை, பேணார்கள் வெரு
கொள்ள - பகைவர்கள் (கண்டு) அச்சங்கொள்ளும்படி, மண்டலம் ஆ
வகுத்தான் -மண்டலமென்னும் வியூகமாக அணிவகுத்தான்; (எ -று.)

     மண்டலம் - வியூகத்தின் வகை நான்கனுள் ஒன்றென்பர். நாற்புறத்தும்
வட்டமாகச் சேனையை நிறுத்துவது மண்டல மென்றும், அது ஸர்வதோபத்ரம்
துர்ஜயம் என இரண்டுவகைப்படு மென்றும் காமந்தக மென்னும் வட நூல் கூறும்,
களா- ஓர்செடி. புடை சூழ என்பதில், 'புடை' என்னும்பகுதியே புடைத்து என
வினை யெச்சப்பொருள்பட்டது.                                     (48)

4.- அந்த வியூகத்தின் முன்புறம் முதலியவற்றில்
அருச்சுனன் முதலோர் நிறுத்தப்பட்டமை.

பின்னிறுத்திமாருதியைப்பேரணியிற்பலவகையா
மன்னிறுத்தியிருபாலுமருத்துவர்மைந்தரைநிறுத்தி