185.-தருமபுத்திரனும் தன்சேனைமுழுவதும் விளக்கெடுப்பித்தல். பொங்கியாடரவெழுந்தநேகவிதமானதென்றமரர்புகலுமா றங்குவாளரவுயர்த்தகோனினைவறிந்தளப்பரியவாகவ மெங்குமானைபரிதேர்கடோறுமொளிர்தீபகாகளமெடுக்கவே சங்குதாரையெழநின்றனன்றருமன்மதலைதம்பியர்கடம்மொடும். |
(இ-ள்.) அங்கு - அப்பொழுது,-தருமன் மதலை - யமதருமராச குமாரன்,- வாள் அரவு உயர்த்தகோன் நினைவு அறிந்து - கொடிய பாம்புவடிவத்தை(க் கொடியில்) உயரநிறுத்திய துரியோதனராசனது எண்ணத்தை அறிந்து,-ஆடு அரவு பொங்கி எழுந்து அநேகவிதம் ஆனது என்று அமரர் புகலும் ஆறு-பட மெடுத்தாடுந்தன்மையுள்ள ஆதிசேஷன் சீறிப் பாதாளத்தினின்று) மேலெழுந்து பலவகையாகத் தோன்றிய தென்று தேவர்கள் (ஒப்புமையாற்) சொல்லும்படி, அளப்பு அரிய ஆசவம் எங்கு உம் ஆனை பரி தேர்கள்தோறுஉம் ஒளிர் தீப காகளம் எடுக்க - அளவிடுதற்கு அருமையான (மிகப்பரந்த) போர்க்களம் முழுவதிலும் ஆனை குதிரை தேர்களென்னும் இவற்றிலெல்லாம் விளங்குகிற விளக்குக்கலங்களை அமைக்க(ச்சொல்லி),-சங்கு தாரை எழ-சங்கவாத்தியங்களும் தாரை யென்னும் ஊதுகருவிகளும் மிக ஒலிக்க, தம்பியர்கள் தம்மொடுஉம் - (வீமன் முதலிய) தம்பிமார்களுடனே, நின்றனன் - (போர்க்குச் சித்தனாய்) நின்றான்; (எ - று.) போர்க்களத்திற் பலவிடத்தும் அநேகவிளக்குகள் விளங்குவது, தனது ஆயிரம்முடிகளிலுமுள்ள மாணிக்கங்களின் சோதிவிளங்க ஆதிசேஷன் மேலொழுந்தாற்போன்றது என்று வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி. இத்தோற்றத்தின்சிறப்பு வானத்திலிருந்து போர்காண்கிற தேவர்கட்கே நன்கு விளங்குமாதலால், 'அமரர்புகலுமாறு' எனப்பட்டது. சங்குதாரையெழுதல், போர் தொடங்குதற்கு அறிகுறி. (582) 186.- இரண்டுகவிகள்-இருதிறத்துவீரரும் தனித்தனி எதிர்த்துப் போர்தொடங்குதலைத் தெரிவிக்கும். கருதிவாகைபுனைவிசயன்மேல்விசயகன்னன்முந்தியமர்கடுகினான் கிருதவன்மனெனும்விருதன்மாமுரசகேதனன்றனெதிர்கிட்டினான் சுருதிமாமுனிதுரோணனும்பழையதிட்டத்துய்மனொடுதுன்னினான் பொருதுமாய்வனெனவீமனோடுயர்புயங்ககேதுமிகுபோர்செய்தான். |
(இ-ள்.) வாகை-வெற்றியையே, கருதி-(பிரதானமாக)எண்ணி, புனை- மேற்கொள்கிற, விசயன்மேல் - அருச்சுனன்மேல், விசயகன்னன்-வெற்றியையுடைய கர்ணன், முந்தி அமர் கடுகினான் - முற்பட்டுவந்து போரைவிரைவாகத் தொடங்கினான்; கிருதவன்மன் எனும் விருதன்-கிருதவர்மாவென்றவீரன், மாமுரசகேதனன் தன் எதிர் கிட்டினான் - பெரிய பேரிகை வடிவத்தையெழுதிய கொடியையுடையவனான தருமபுத்திரனது எதிரிலேபோர்செய்யச் சமீபித்தான்; சுருதிமா முனி துரோணன்உம் - வேதம்வல்ல |