சிறந்த அந்தணனான துரோணாசாரியனும், பழைய திட்டத்துய்மனொடு துன்னினான்- (தனக்குப்) பழம்பகையாகத் தோன்றியுள்ளவனான திட்டத்துய்மனுடன் (போர்க்கு) நெருங்கினான்; பொருது மாய்வன் என-போர்செய்து இறப்பேனென்று துணிந்து, வீமனோடு-,உயர் புயங்க கேது-உயர்ந்த பாம்புக் கொடியையுடையவனான துரியோதனன், மிகு போர் செய்தான்-மிக்க போரைச் செய்தான்; (எ - று.)- பொருட்பின்வருநிலையணி. பி-ம்: விசையன்மேல் விசையகன்னன். (583) 187. | சல்லியன்பெருகுசல்லியத்தொடுசதானிகன்றனொடுபோர் செய்தான் வல்லியம்புனைகடோற்கசன்றனொடுபோர்செய்தான்முனிவன் மைந்தனும் எல்லியங்குசுடரினும்மணிச்சுடர்களெழுமடங்கொளி யெறிக்கவும் பல்லியம்பலமுழங்கவுந்தரணிபாலரிப்படிபகைக்கவே. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) சல்லியன்-,பெருகு சல்லியத்தொடு-மிக்க அம்புகளினால், சதானிகன்தனொடு போர் செய்தான் - சதாநீகனுடன் போர்செய்தான்; வல்லியம் புனை கடோற்கசன் தனொடு - புலியையொத்த கடோற்கசனுடனே, முனிவன் மைந்தன்உம்-துரோணன்மகனான அசுவத்தாமனும், போர்செய்தான்-;எல் இயங்கு சுடரின்உம்-பகலிலே பொருந்திவிளங்குகிற சூரியனது ஒளியைக் காட்டிலும், எழு மடங்கு-ஏழுபங்கு அதிகமாக, மணி சுடர்கள் - அழகிய விளக்குகள், ஒளி எறிக்கஉம்-ஒளியை வீசவும், பல் இயல் பல முழங்கஉம்-பலவகைப்பட்ட வாத்தியங்கள் பலவும் மிக ஒலிக்கவும், தரணி பாலர்-அரசர்கள், இப்படி பகைக்க- இங்ஙனம் மாறுபட்டு எதிர்க்க,-(எ - று.)-அருச்சுனன் கர்ணனைப் பிளந்தா னென்றுஅடுத்த கவியோடு முடியும். ஸதாநீக னென்ற பெயர் - நூறுசேனையையுடையா னென்று பொருள்படும்; இவன், மத்ஸயதேசத்தரசனான விராடனது தம்பி: மகனென்பாருமுளர். ஒன்றன்கூட்டமும் பலவினீட்டமும் பற்றி, 'பல்லியம்பல' என்று இரண்டுபன்மை கூறினார். சல்லியத்தொடு, மூன்றனுருபு-கருவிப்பொருளது. (584) 188.-அருச்சுனன் கர்ணனை வெல்லுதல். எற்றருந்தபனனேகினானினியெனக்குவாசிகொடிநீடுதேர் முற்றருங்கனலினொளியெழுந்ததெனமுரணழிந்திடமொழிந்துபோர் விற்றருங்கணைகளால்விழப்பொருதுவெயிலவன்சுதனைமீளவும் பிற்றரும்படிபிளந்தபினன்றனுசர்பின்னிடப்பொருதபெற்றியான். |
(இ-ள்.) தனுசர் பின் இட பொருத பெற்றியான் - (நிவாதகவசர் காலகேயர் என்னும்) அசுரர்கள் பிற்படும்படி (முன்பு) போர் செய்த பெருமையையுடையவனான அருச்சுனன்,-(கர்ணனைப்பார்த்து), 'எல்தரும் தபனன் ஏகினான் -(உனது தந்தையான) ஒளியைவெளிவீசுகிற சூரியனோ போய்விட்டான்: இனி - இப்பொழுது, எனக்கு வாசி கொடி நீடு தேர் முன் தரும் கனலின் |