பக்கம் எண் :

352பாரதம்துரோண பருவம்

ஒளி எழுந்தது-எனக்கு (நான்குவெள்ளைக்)  குதிரைகளும் குரங்குக்கொடியும்
உயர்ந்ததேரும் முதலியவற்றை முன்புகொடுத்த அக்கினியின் ஒளி
தோன்றிவிளங்கியது' என-என்று, முரண் அழிந்திட-(அவனது உறுதிநிலை
குலையும்படி, மொழிந்து - வீரவாதங்கூறி, வில் தரும் கணைகளால்-(தனது)
வில்லினால் எய்யப்படும் அம்புகளால், விழ-(அவனது குதிரைகள் கொடி
தேர்முதலியன) கீழ்விழும்படி, போர் பொருது-போர்செய்து, வெயிலவன் சுதனை-
சூரியபுத்திரனான அக்கர்ணனை, மீளஉம்-மறுபடியும், பின் தரும்படி-
புறங்கொடுக்கும்படி, பிளந்தனன்-(உடம்பைப்) பேதித்தான்;(எ - று.)-'இது உனக்கு
வெற்றிக்காலமன்று, எனக்கே வெற்றிக்காலம்' என்றுசொல்லி அவன்மனநிலையைக்
குலைத்தவாறாம். பி-ம்: முரண்மிகுந்திட,                            (585)

189.-கிருதவன்மாவைத் தருமன் சயித்தல்.

ஒருதன்வாகுவலியாலும்வார்சிலையுதைத்தவாளிவலியாலுமொண்
குருதிபொங்கவடுதருமராசன்ரகுகுலவிராமனிகராயினான்
கிருதவன்மனெனவருநாரதிபதிகெட்டுமாவிரதம்விட்டுவா
ணிருதர்சேகரனொடுவமையாயவனெடுங்களத்திலெதிர்நன்றிலன்.

     (இ-ள்.) ஒரு தன் வாகு வலியால்உம்-ஒப்பற்ற தனதுதோள்
வலிமையினாலும்,வார் சிலை உதைத்த வாளி வலியால்உம்-நீண்ட வில்லினின்று
செலுத்தியஅம்புகளின் வலிமையினாலும், ஒள்குருதி பொங்க அடு-ஒள்ளிய
இரத்தம்வெளிச்சொரியும்படி போர் செய்கிற, தருமசாரன்-யுதிட்டிரன், ரகு குலம்
இராமன்நிகர் ஆயினான்-ரகுவென்னும் அரசனது வம்சத்திலே திருவவதரித்த
ஸ்ரீராமன்போலானான்; கிருதவன்மன் என வரும் நராதிபதி-கிருதவர் மாவென்று
பேர்பெற்றுவந்த, அரசன், கெட்டு-தோற்று, மா இரதம் விட்டு-பெரியதேரை விட்டு
இழிந்து, வாள் நிருதர் சேகரனொடு உவமை ஆய்-கொடிய அரக்கர்தலைவனான
இராவணனோடு ஒப்பாய், நெடுங்களத்தில் அவன் எதிர் நின்றிலன்-
பெரியபோர்க்களத்திலே அத்தருமனெதிரிலே நிற்கமாட்டாதவனாய்ப்
புறங்கொடுத்துச்சென்றான்; (எ - று.)

     இராவணன் முதல்நாட்போரில் யாவையு மிழந்தமையும், அப்பொழுது
இராமபிரான் அவனைக்கொல்லாமல் 'இன்றுபோய் நாளைவா' என்று விடுத்தமையும்
பிரசித்தம். தருமபுத்திரனது அம்புக்கு ஆற்றாது கிருதவன்மன் சிலையொழிந்து
நிலைதளர்ந்து சென்றானென்றும், அதுகண்ட தருமபுத்திரன் அவனைக்கொல்லாது
கருணைசெய்தா னென்றும், உவமையால்விளங்கும். பலராமனினும்வேறுபாடு
தோன்ற,தசரதராமனை 'ரகுகுலராமன்' என்றார். ரகு-சூரியவம்சத்திற்
பிரசித்திபெற்றஓரரசன்;இவன்குலத்தில் அவதரித்ததனால்,ராமனுக்கு ராகவனென்று
ஒருதிருநாமமும்வழங்கும்.                                        (586)