194.-அலாயுதன் சபதஞ்செய்து வீமனை நெருங்குதல். இன்றி ராவிடியு முன்னர் வெஞ்சமமே திர்ந்த பஞ்சவர்க ளெஞ்சிடக் கொன்று பார்முழுது நின்ன தாகவுயர் வானுளோர் பதிகொ டுப்பன்யான் என்று கோடிசப தம்பு கன்றெதிரெ டுத்த தீபமு மிருண்டிடச் சென்று வீமனொடு கிட்டி னான்விசைகொ டேரி ரண்டுமுடன் முட்டவே. |
(இ-ள்.) 'இன்று இரா விடியும் முன்னர் - இன்னறயிராப் பொழுது கழிந்து சூரியனுதிக்குமுன்னே (இன்றையிரவிலேயே), வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட கொன்று - கொடிய போரில் எதிர்க்கிற பாண்டவர்கள் ஐவரும் அழியும்படிகொன்று, பார் முழுதுஉம் நின்னது ஆக - பூமண்டலம் முழுவதும் உன்னுடையதேயாகுமாறு, உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் - உயர்ந்த வானத்திலுள்ள தேவர்களது இடத்தை (வீரசுவர்க்கத்தை)) (அவர்கட்கு இடமாக)க் கொடுப்பேன் யான்,' என்று - என்று இவ்வாறு, கோடி சபதம் புகன்று - மிகப்பல சபதவார்த்தைகளைச்சொல்லி, எதிர் எடுத்த தீபம்உம் இருண்டிட சென்று - எதிரிலேஏற்பட்டுள்ள விளக்குக்களின் ஒளியும் (தனதுகருமை மிகுதியால்) இருளடையும்படிபோய், வீமனொடு-, விசை கொள்தேர் இரண்டுஉம் உடன் முட்ட - வேகங்கொண்டதன்தேரும் அவன்தேருமாகிய இரண்டும் ஒன்றோடொன்று தாக்கும்படி, கிட்டினான்- சமீபித்தான்; (எ - று.)-பி-ம்: இராமுடியுமுன்னர். வேறு. 195.-அலாயுதனும் மற்றும்பல அரக்கர்களும் போர்தொடங்குதல். பனைத்திரு புயக்கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயமி னூற்றுவர் துணைப்பெற மனச்சின முடுக நாக்கொடு சுழற்றுக் ணெருப்பெழ நிருதர்பார்த்திவ னிணைப்பிறை யெயிற்றிள நிலவினாற்செறி யிருட்கிழி தரப்பகைமுனையிலேற்கு முனணைத்திருபுறத்தினும் வருமி ராக்கத ரதிர்த்தன ரெதிர்த்தனரமரை நோக்கியே. |
(இ-ள்.) நிருதர் பார்த்திவன் - அரக்கர்தலைவனான அலாயுதன், இருபுயம்கிரி - (தனது) இரண்டு தோள்களாகிய மலைகள், பணைத்து வளர - (யுத்தாவேசத்தாற்) புடைபருத்துப்பூரிக்கவும், மாற்றலர் பயப்பட - பகைவர்கள் அச்சமடையவும், வய படு பயம் இல் நூற்றுவர் - வலிமைமிக்கவர்களும் நற்பயனில்லாதவர்களுமான துரியோதனாதியர், துணை பெற-(தன்னால்) உதவிபெறவும், மனம் சினம் முடுக. (தன்) மனத்திலே கோபம் அதிகப்படவும் நா கொடு சுழற்று கண் - நாக்கிலும் கொடிய வட்டமிடுகிற கண்களிலும், நெருப்பு எழ - தீப்பொறி கிளம்பவும், இணை பிறை எயிறு இள நிலவினால்- இரண்டுஇளஞ்சந்திரன் போன்ற (தனது) கோரதந்தங்களின் இளநிலாப் போன்ற வெள்ளொளியால், செறி இருள் கிழிதர.- அடர்ந்த இருள் பிளவுபடவும், பகை முனையில் ஏற்கும் முன் - பகைவர்களுடைய போர்க்களத்திலேசென்று எதிர்த்தற்குமுன்னே,- அணைத்து இரு புறத்தின் உம் வரும் இராக்கதர் - (அவனைச்) சார்ந்துஇரண்டுபக்கங்களி |