லும் நெருங்கி வருகிற ராக்ஷஸர்கள், அதிர்த்தனர் - ஆரவாரஞ்செய்துகொண்டு, அமரை நோக்கி எதிர்த்தனர் - போரைநோக்கி எதிர்த்துச் சென்றார்கள்; (எ - று.) நூற்றுவர் - தொகைக்குறிப்பு; இங்கே, அவர்களில் இறந்தவ ரொழிந்தாரைக் குறித்தது. இதுமுதற் பத்து கவிகள் - ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும், மூன்று ஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும், நான்கு எட்டாஞ் சீர்கள்கூவிளச்சீர்களு மாகிய கழிநெடிலடிநான்குகொண்டஎண்சீராசிரியச்சந்த விருத்தங்கள். 'தனத்தனதனத் தன தனன தாத்தன தனத்தன தனத்தன தனன தாத்தன' என்பது, இவற்றுக்குச் சந்தக்குழிப்பாம், இவற்றில் வல்லோசை மிக்குவந்தது, வல்லிசைவண்ணம். (592) 196.- அரக்கர்நெருக்கிப் பொருதல். இருட்கிரியெனத்தகுகரியதோற்றுமுமெயிற்றினினிணப்பிணமுடை கொணாற்றமு முருக்கலர்வெளுத்திடுமருணநாட்டமுமுகிற்குரலிளைத்திடமுதிரும் வார்த்தையு மருட்படுகருத்திடைகதுவுசீற்றமு மதக்கடகளிற்றதிமதமு மாய்ப்புடை நெருக்கினர்தருக்கினர்விறனிசாச்சரர்நிமிர்த்தனர்வடிக்கணை சிலைகள்கோட்டியே. |
(இ-ள்.) இருள் கிரி என தரு - இருள்மயமானதொருமலையென்று சொல்லத்தக்க, கரிய தோற்றம்உம் - கருநிறமுள்ள வடிவமும், எயிற்றினில்-பற்களில், கொள் - கொண்ட, பிணம் நிணம் முடை நாற்றம்உம்-(தின்னப்பட்ட) பிணங்களின் கொழுப்புக்களினது துர்க்கந்தமும், முருக்கு அலர் வெளுத்திடும் அருணம்நாட்டம்உம்-முருக்கம்பூவும் வெண்ணிறமடையும்படியான சிவந்த கண்களும், முகில் குரல் இளைத்திட முதிரும் வார்த்தைஉம் - மேகங்களின் இடிமுழக்கமும் மெலிவடையும்படி (அதனினும்) உரத்த பேச்சும், மருள் படு கருத்திடை கதுவு சீற்றம்உம் - மயக்கம்பொருந்திய மனத்திலே மூண்டெழுகிற கோபமும், மதம் கடம் களிறு அதி மதம்உம் ஆய்-வலிமையுள்ள மதயானை போன்றமிக்க கொழுப்பு முடையவர்களாய், விறல்நிசாச்சரர்-வலிமையையுடைய அந்தஅரக்கர்கள், புடை நெருங்கினர்-பக்கங்களில் (வந்து) நெருங்கிநின்று, தருக்கினர்-(போரில்) உற்சாகங் கொண்டவர்களாய், சிலைகள் கோட்டி-விற்களை வளைத்து, வடிகணை நிமிர்த்தனர்- கூரியஅம்புகளைப் பிரயோகித்தார்கள்; (எ-று.) முருக்கலர் வெளுத்திடும் அருணநாட்டம் - வெண்ணிறத்தோடு செந்நிறத்துக்குஎவ்வளவு வேறுபாடு உண்டோ அவ்வளவு வேறுபாடுஉண்டு, பலாசம்பூவின்செந்நிறத்தோடு அரக்கர் கண்கள் கோபத்தாற் கொண்ட மிக்க செந்நிறத்துக்கு என்க. நிசாச்சரர்- சந்தம் பற்றியவிரித்தல். (593) 197.-அலாயுதனும் வீமனும் போர்தொடர்தல். அருக்கனைமறைத்தவர்கடவுதேர்த்தலையருச்சுனன்முதற்பல துணைவர்சாத்தகி, செருக்குடையமைத்துனர்குமரர்காத்திடுசெருக்களம்வெருக் கொளவளையு மாத்திரை, |
|